21 November 2013

வயசுப் பொண்ணு ஆசைக்கு தடை போடலாமா ?

''நான் ஆசை ஆசையா வாங்கிவந்த ஊதா கலர் ரிப்பனை சடையிலே போட்டுக்க தடை போடுறீங்களே ,ஏம்ப்பா ?''
''கண்ட கண்ட காலிப் பசங்க 'யார் உனக்கு அப்பன் 'ன்னு  மரியாதை இல்லாமே என்னை கிண்டல் பண்ணுவாங்களேன்னுதாம்மா !''

19 comments:

  1. நியாயம் தானே!

    ReplyDelete
    Replies
    1. பெண்ணைப் பெற்ற தந்தைமார்களுக்கு இப்படி எல்லாம் துன்பத்தைத் தருதே சினிமா !
      நன்றி அய்யா

      Delete
  2. வணக்கம்

    அருமையான நகைச்சுவை..... வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ரசித்தமைக்கு நன்றி ரூபன் ஜி !

      Delete
  3. பெத்தவன் கையில் கிடைத்தால் செத்தான் என்பதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை.
    ஊதா கலர் ரிப்பனின் அப்பன் யாரென்று தெரிந்தால் நேரடியாக டீலிங்கை அவரிடமே முடித்துவிடலாமே என்ற நியாயமான எண்ணம்போல அவனுக்கு, யாருக்குத்தெரியும்!

    ReplyDelete
    Replies
    1. சைட் அடிக்கிறவனுக்கு அவ அப்பனையும்.அப்பனுக்கு அப்பனையும் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லையே அஜீஸ் ஜி ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. ஆயிரம் தடவை கேட்ட பாடலில் மறைந்து இருக்கும் இந்த மொக்கையை ரசித்தமைக்கு நன்றி தனபாலன் ஜி !

      Delete
  5. அது ஏன்னா ஊதா கலரு ரிப்பன்?
    கேட்டும் பதில் கிடைக்கவில்லை-!
    நீங்கள் பதில் சொல்விள்ளஎன்றால் +1 வோட்டை மைனஸ் ஆக்ககிவிடுவேன்!

    அது ஏன்னா ஊதா கலரு ரிப்பன்?
    எல்லா ரிப்பனும் தான் அழகு!

    ReplyDelete
    Replies
    1. இந்த தேவ ரகசியத்தை யாரிடம் கேட்டீர்கள் ?இதோஎன் பதில் ...
      ஒளியில் எல்லா நிறங்களும் இருந்தாலும் நீல நிறத்தின் அதிக துடிப்பு காரணமாக அதிகமாக சிதறடிக்கப்படுகிறது எனவே வானம் நீலம்,அதைப் பிரதிபலிக்கும் கடலும் நீலம் ,இதைக் கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றார் c v ராமன் ....
      நீல நிற ரிப்பனும் வாலிப துடிப்பை அதிகமாக்குகிறது ,இதைக் கண்டுபிடித்த ஜோக்காளி உங்களின் +1 வோட்டைப் பெறுகிறான் ,சரியா நம்பள்கி ஜி ?
      நன்றி

      Delete
  6. Replies
    1. நீங்கள் மறுபடியும் சிரிப்பீர்கள் ...மேலே சொன்ன தேவ ரகசியத்தைப் படித்தால் !
      நன்றி

      Delete
  7. ஒரு ஊதா பூ கண் சிமிட்டுவது போல் இந்த ஊதா ரிப்பனைப் பார்த்து யாராவது கண் சிமிட்டி விடுவார்களோ என்ற பயமாக இருக்குமோ?!!!!?

    ReplyDelete
    Replies
    1. என் கண்டுபிடிப்புக்கு வலு சேர்க்கும் விதமாக உங்கள் கருத்து ,+1 வோட்டில் பாதியை உங்களுக்கு பகிர்ந்து அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் .
      நன்றி

      Delete
  8. நியாயம் தானே சகோதரரே..
    முட்டையிட்ட கோழிக்கு தானே தெரியும் அதனோட வலி! எப்ப்டி இப்படியெல்லாம் யோசித்து பதிவு போட்டு கலக்குறீங்க தங்கள் பாணி தனி பாணியாக இருக்கிறதே. தொடர வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. இப்போதைய நாட்டு நடப்பில் வரும் பதிவுகள் ரசனைக்குரியதாக இருக்கத்தானே செய்யும் பாண்டியன் ஜி ?
      நன்றி

      Delete
    2. ப்ரியமுடன் +1 ஓட்டும். இனி தொடரும் ஒவ்வொரு பதிவுக்கும்.

      Delete
  9. Replies
    1. ப்ளு ரிப்பனை ரசிக்காதவர்களே இல்லை !
      நன்றி

      Delete