7 November 2013

ஒண்ணரை லட்சம் மனை விலை அல்ல ,மனைவி விலை !

எல்லா ஊர்களிலும் விளைநிலங்களை கூறு போட்டு மனைகளாக்கி  விற்கிறார்கள் ...
ஆனால் ,கற்புக்கரசி கண்ணகி வாழ்ந்த மதுரையில் கொத்தனார் ஒருவர் மனைவியையே விற்று இருக்கிறார் ...

பெண் பாவம் பொல்லாததாச்சே ...அந்த பாவத்திற்கு அவரே பலியாகி விட்டார் ...
அவருடன் சேர்ந்து இரண்டு பிள்ளைகள் பெற்ற புண்ணியவதிக்கு...
 எதிர் வீட்டு கொள்ளைக்காரனுடன் தொடர்பாம் ...
தாலிக் கட்டியவன் நான் இருக்க ,உங்கள் இருவருக்குள் என்ன ஜோலி என்று ...
நீதியை நிலைநாட்ட நவீன பாண்டிய நெடுஞ்செழியனாய்  பொங்கி எழுந்துள்ளார் கொத்தனார் ...
எல்லார் வீட்டையும் கொள்ளை அடிக்கும் கொள்ளைக்காரன் ...
தன் மனதை கொள்ளை அடித்தவளுக்காக பேரம் பேசியுள்ளான் ...
ஒண்ண்ரை லட்சம்  விலை நிர்ணயம் செய்யப்பட்டு மனைவி கை மாறி விட்டாள்  ...
பின் தொடர்ச்சி அனுபவ பாத்தியதை ஏதுமில்லை என்று அக்ரிமெண்ட் போட்டுக் கொண்டார்களா என்று தெரியவில்லை ...
ஒண்ணரை லட்சம் ஒண்ணரை ஆண்டுகளுக்குள் காலியாகிவிட்டது போலிருக்கு ...
மனைவியை மீண்டும் சொந்தம் கொண்டாட கொத்தனார் வந்த செய்தி ...
வெளியூரில் இருந்த கொள்ளையனுக்குப் போக ...
அடியாட்களின் புண்ணியத்தால் கழுத்தறுபட்டு மேலோகம் சென்று விட்டார் கொத்தனார் ...
கொள்ளையனை மாமியார் வீட்டில் அடைக்க வலை வீசி தேடுகிறார்கள் போலீஸார் ...
மாமியார் வீட்டை மாற்றிக் கொண்ட ஒரே தப்புக்கு...
குழந்தைகளுடன் தெருவில் நிற்கிறாள் தாய் !


10 comments:

  1. Replies
    1. கேவலமான செயலுக்கு ...ஜெயிலுக்கு போக வேண்டியதாதான் ஆகும் !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  2. Replies
    1. புருஷனை மாத்திக்கிட்டது தப்பில்லைன்னு சொல்ல வர்றீங்களா ?
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  3. ஒரே தப்பு, ஆனா மூணுபேரு சேந்து செஞச ஒரே தப்புஇ
    தண்டனை அந்தப் பெண்ணுக்கு மட்டும்தான். (அவ புருஷன்தான் போய்ச் சேந்துட்டானே?)
    மிச்சமிருக்கிற கொள்ளையன் வழக்கம்போல சட்டத்தின் ஓட்டையில் புகுந்து தப்பிச்சிடுவான்.தண்டனை அந்தப் பொண்ணுக்கு மட்டுமில்ல... பிள்ளைகள்தான் பாவம்!

    ReplyDelete
    Replies
    1. தப்பை செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டியதுதான்...ஒருபாவமும் அறியாத குழந்தைகளின் மனநிலை எவ்வளவு பாதிப்புக்கு உள்ளாகும் ?காமம் கண்ணை மறைக்கும் என்பது சரிதான் !
      நன்றி முத்து நிலவன் ஜி !

      Delete
  4. கலியுகக் கண்ணகியின் கற்பின் திறனும்
    கலியுக ராமனின் ஆண்மைத்தீரமும்
    மெய்சிலிர்க்கவைக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ஆகா மொத்தத்திலே கலிகாலம் ஆகிப் போச்சுன்னு சொல்றீங்க ,அப்படித்தானே ?
      நன்றி !

      Delete