12 November 2013

நடிகர் சூர்யா சொல்வது சரிதானா ?

நெய்க்கு தொன்னை ஆதாரமா ,தொன்னைக்கு நெய் ஆதாரமா என்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது ...
வன்முறை காட்சிகள் ,ஆபாசக் காட்சிகள் ,சண்டைக் காட்சிகளை ஏன் வைக்கிறீர்கள் எனக் கேட்டால் ...

ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பார்கள் ...
ரசிகர்களைக் கேட்டால் ...
காட்டுகிறார்கள் பார்க்கிறோம் என்பார்கள் ...
'சினிமாவில் என்ன எடுக்கிறோமோ அது சமூகத்தைப் பாதிக்கிறது ,சமூகத்தில் என்ன நிகழ்கிறதோ சினிமாவிலும் தொற்றிக் கொள்கிறது 'என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா !
அப்படின்னா இந்த பூனைக்கு மணி கட்டப் போகும் எலி யார்?

17 comments:

  1. எல்லோருமே சம்பாதிக்கத்தான் நினைப்பார்கள்...
    யாரும் எலியையோ மணியையோ கட்டமாட்டார்கள் ஜி.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. உண்மைதான் ,எலியை மடியில் கட்டிக்கிட்டா கடிக்கத்தான் செய்யும் ?
      நன்றி குமார் ஜி !

      Delete

  2. அப்படின்னா இந்த பூனைக்கு மணி கட்டப் போகும் எலி யார்?//ஏன் நீங்களேகூட கட்டலாமே?

    ReplyDelete
    Replies
    1. என்னாலே முடியாதுன்னா நினைக்கிறீங்க ,அந்த பூனையை மட்டும் பிடிச்சுகிட்டு நில்லுங்க ,நான் மணியை கட்டுறேனா இல்லையா பாருங்க ,கண்ணதாசன் ஜி !
      நன்றி !

      Delete
  3. சூரியா சொல்வது எல்லாம் சரிதான். சொல்வது எளிது. நடைமுறைக்குக் கொண்டுவருவது தான் கஷ்டம். ஏனென்றால் சினிமா என்பது வியாபரம் தானே. முத்லீடு செய்பவர்கள் லாபம் பார்க்கத்தன் முயற்சி செய்வார்கள். ஏன் இதைச் சொல்லும் நல்ல நடிகரான, நடிகர் குடும்பமான சூர்யாவே (அவர் தம்பியும் கூட) பூனைக்கு மணி கட்டும் முதல் மணியை கட்ட முயற்சி செய்யலாமே!! என்ன நான் சொல்வது சரிதானே பகவான்ஜி?!

    ReplyDelete
    Replies
    1. எரியிற வீட்டில் பிடுங்கினதுவரை ஆதாயம்ன்னு நினைப்பாங்க ?
      நன்றி முரளிதரன் ஜி !

      Delete
  4. பிரச்சனை இருப்பது எல்லோருக்கும் தெரியும்
    அதற்கு தீர்வுதான் புலப்படமாட்டேங்குது.
    சொல்வது யார்க்கும் எளிது... ஆனால் சொல்லிய வண்ணம் நடப்பது கஷ்டமான விஷயம்ஜீ

    ReplyDelete
    Replies
    1. பில்லாங்கிறவன் யாரு ,மனித குலத்துக்கு மகத்தான சேவை செய்தவனா?அப்படிப்பட்டசமூக விரோதியின் பெயரை படத்தின் தலைப்பால் ஏன் வைக்கணும் ?போதாக்குறைக்கு பில்லா 2 வேற !
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  5. ammam MGR Padathula cigerret pidikka mattaru, thanni adikka mattaru, applam enna ellam olungava irunthanga. Appavum thanni tham adichangala. ithula yaaraium kurai solla mudiyathu suya olukkam venum

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை ,சுய ஒழுக்கம் அவசியம் தேவை !
      நன்றி செல்வகுமார் ஜி !

      Delete
  6. இது ஒரு மெகாதொடர் கேள்வி பதில் கிடைக்காது

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சென்ற வெளிநாடுகளிலும், சினிமா வியாபார மயமாகத்தான் இருப்பதை பார்த்து இருப்பீர்கள் .அந்த அனுபவத்தில் நீங்கள் சொல்லியிருப்பது சரிதான் அய்யா !
      நன்றி !

      Delete
  7. வியாபாரம்! இதில் அனைத்தும் சாத்தியம்! :(

    ReplyDelete
    Replies
    1. கல்வியே வியாபாரம் ஆனபின் சினிமாவில் தொழில் தர்மத்தை நாம் எதிர்ப் பார்ப்பது தவறுதான் !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  8. பூனைக்கு மணி கட்டப் போகும் எலி யார்?
    பதில் கிடைக்காது....sir...
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. ஒருவேளை எலியின் குரல் நமக்குதான் கேட்கவில்லையோ ?
      நன்றி

      Delete