20 November 2013

ஏக'ப்பட்ட' பத்தினி விரதனா பட்டிமன்ற பேச்சாளர் ?

''விதவை  என்று ஒற்றைச் சொல்லைச் சொல்லி கேவலப்படுத்தும் ஆணாதிக்க சமூகமே ,விதவைக்கு  எதிர்ப்பதமாக ஒற்றை  ஆண்பாற் சொல்கூட இல்லையே என்று வருத்தப் படுகிறேன் 'என்று பேசிவிட்டு அமர்ந்து இருக்கும் எதிர் அணி தலைவியைப் பார்த்து கேட்கிறேன் ...பத்தினி என்பதற்கும் தான் எதிர்ப்பதமாக எந்த ஒற்றை சொல்லும் இல்லை என்பதற்காக நாங்கள்  வருத்தப்படுகிறோமா?''


28 comments:

  1. நகைச்சுவையாக இது இருந்தாலும் உண்மையை
    அவரே ஒத்துக் கொண்டது சிறப்பு தான்.

    ReplyDelete
    Replies
    1. அவர் ஒத்துக் கொண்டதில் நமக்கு அப்படியொரு சந்தோசம் வருதே ஏன் மேடம் ?
      நன்றி

      Delete
  2. ஆஹா நல்ல கேள்விதான்

    ReplyDelete
    Replies
    1. கேள்வியா அது ?ஆண் வர்க்கத்தை இழிவு படுத்துகிறாரே என்று பொங்கவேண்டாமா ரமணி ஜி ?
      நன்றி

      Delete
  3. விதுரன் விதவைக்கு ஆண்பால் சொல், தமிழில் எதிர்வார்த்தைகள் இல்லாமல் அனேக வார்த்தைகள் இல்லை. உண்மை அனைவருக்கும் தெரிந்த சொல், இண்மை எவர் பயன்படுத்துகிறார்........

    ReplyDelete
    Replies
    1. விதுரன் விதவை என்பதும் வட மொழிச் சொல் ,தமிழில் கைம்பெண் என்பார்கள் ...
      விதவைக்கு பொட்டில்லைஎன்றதற்கு ,கலைஞர் அவர்கள் 'கைம்பெண்ணுக்கு இரு பொட்டு உண்டு என்றாராம் !
      நன்றி

      Delete
  4. ஹா ஹா ஆணாதிக்க சமூகம்

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் பொங்க வேண்டாமா மணிமாறன் ஜி ?
      நன்றி

      Delete
  5. நன்றி ரமணி ஜி

    ReplyDelete
  6. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இந்த கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள் சொல்லலாமே !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  7. அருமையான கேள்வி!!! அசத்தாலான் பதில் !!!! எறிந்தவர்க்குத் தெரியவில்லை இது பூமராங்க் ஆகும் என்று ஆனால் பூமராங்காக ஆக்கித் திருப்பி விட்டவர்க்குத்தான் கை கொடுக்க வேண்டும்!!! விதவை கைம்பெண் ஆனால்....விதுரன் கைம் ஆண்!!! என்றால் என்ன? ( பிறகு தன் கைதானே தனக்குதவி !!!)

    ReplyDelete
    Replies
    1. அடடா ,தமிழ்லே புகுந்து விளையாடுறீங்களே ...அந்த நிலையில் கைம்பெண்ணை கட்டிக்கிறது வாழ்க்கையை இனிதாக்குமே!
      நன்றி துளசிதரன் ஜி !

      Delete
  8. கடல் தாயே, பூமித்தாயே, காவிரித்தாயே-ன்னு எல்லாம் சொல்றோம். அப்போ அதுக்கெல்லாம் ஆண்பால் எதுன்னு ஆராய்ந்துக்கொண்டிருக்கமுடியுமா?
    ஒரு வார்த்தையை சொன்னால் புரிஞ்சுக்கணும் ஆராயக்கூடாது என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு உங்க கேள்வி

    ReplyDelete
    Replies
    1. ஒருமுறை 'தமிழர் தந்தை 'என்பதை ஆராய்ந்தவர்கள் நன்றாக வாங்குபட்டது நினைவுக்கு வருகிறது !
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  9. நல்ல கேள்விதான்

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக என்னை 'கேள்வியின் நாயகன் 'என்று மட்டும் சொல்லிடாதீங்க !
      நன்றி ராஜி மேடம் !

      Delete
  10. சரியான் கேள்விதான்.

    ReplyDelete
    Replies
    1. இந்த கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய எதிரணி தலைவி மேடையை வீட்டு இறங்கி ஓடி விட்டதாய் கேள்விபட்டேன் !
      நன்றி கும்மாச்சி

      Delete
  11. அடாடா.... என்ன மாதிரி எதிர் கேள்வி!

    ReplyDelete
    Replies
    1. பத்தினிக்கு ஆண்பாற் சொல்லுமில்லே ,அதற்கு நிரூபிக்கும் விதமாய் பல ஆண்களும் இல்லைன்னு நடுவர் தீர்ப்புலே சொல்லியிருப்பாரா ,வெங்கட் நாகராஜ் ஜி ?
      நன்றி

      Delete
  12. விதவை எனும் சொல்லுக்கு எதிர்பாற் சொல் தபுதாரன், எனக் கேள்விப்பட்டுள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. யோகன் ஜி ,நீங்க பாரிசிலே இருந்தாலும் தபுதாரன்னு சொல்றீங்க ,இங்கே எங்களுக்கு தெரிந்ததெல்லாம் தபுவும் ,தாடிவாலா சிபு சோரனும்தான் !
      நன்றி

      Delete
  13. ஆணுக்கு எதற்கு புதிதாக ஒரு எதிர்ப்பதம்?
    அதான் நம் கலாசார்க காவலர்கள் ஏற்கனவே விதவைக்கு எதிர்ப்பதமாக..பொண்டாட்டி செத்தால், ஒரு பதத்தை கொடுத்து இருக்கிறார்களே! அது என்ன?

    புது மாப்பிள்ளை!

    ReplyDelete
    Replies
    1. புது+ மாப்பிள்ளை ,இரட்டைச் சொல் ஆவதால் இரண்டு திருமணம் கட்டிக்கிறாறோ என்னவோ ?
      நன்றி

      Delete
  14. சரியான எதிர்கேள்வி தான் என்றாலும் , இரண்டு கேள்விகளும் நன்று! 'கைம்பெண்' தேவையில்லாமல் போகட்டும்...அதற்கு எதற்கு ஆண்பால் சொல் வேறு? இருபாலினரும் அவரவர் வாழ்க்கைத் துணையுடன் உறுதியான அன்புடன் நம்பிக்கையுடன் இணைந்து இருக்கும் நிலையே நிலைக்கட்டும்.

    ReplyDelete
  15. வருகை தந்து .சரியான கருத்து இட்டமைக்கு நன்றி !

    ReplyDelete