14 November 2013

தம்பதிக்குள் சண்டைன்னா இப்படி பண்ணக் கூடாது !

புருஷன் பெண்டாட்டிக்குள்ளே ஒத்து வரலேன்னா ...
சிலர்  நாகரீகமா டைவர்ஸ் செய்துக்கிறாங்க...
சிலர் கொல்லணும்னு   விபரீத முடிவெடுக்கிறாங்க ...
கொல்லணும்னு நினைக்கிறவங்களே பலி ஆக வேண்டி இருக்கும் ...
இதை விளக்க வேடிக்கை கதை இதோ ...
எப்பவும் வாக்குவாதம் நடக்கும் தம்பதிகளுக்குள்  உச்சபட்ச சண்டை நடக்குது ...
''உன்னை ப(ழி )லி வாங்காம விட மாட்டேன்''என்கிறான்  உத்தமபுருசன் ...
''அதையும் பார்க்கிறேன் ,உன்னாலே (மரியாதை ?)என்ன செய்ய முடியும் ?''
''வீட்டுக்கு பின்னாலே இருக்கிற ஆழமான குளத்திலே ''
''என்னை தள்ளிவிட ஐடியாவா ?''சீறுகிறாள் மனைவி ...
''இல்லை ,நானே விழலாம்னு இருக்கேன் ''
''சும்மா வாயிலே சொல்லக்கூடாது ,என் முன்னாலே விழுந்து காமி''ன்னு புருஷனை குளத்துக்கு இழுத்துட்டு போகிறாள் 'தர்ம 'பத்தினி ...
''எனக்கு நீச்சல்தெரியும் ,ஒருவேளை நீந்திப் பொழச்சுக்குவேன் ,அதனாலே என் கை இரண்டையும் பின்னால் கட்டி விடு ''
கண்கொள்ளாக் காட்சியை காணும் ஆவலில் கை இரண்டை கட்டுகிறாள் மனைவி ...
''இந்த நிலையில் ஓடிவந்து என்னால் குளத்தில் குதிக்க முடியாது ,நான் குளத்தங்கரையில் நிற்கிறேன் ,நீ ஓடிவந்து தள்ளி விடு ''
போல்ட் வால்ட் போட்டியில் கலந்துக் கொண்டவளைப் போல் ஓடிவருகிறாள்  ...
கடைசி  நொடியில் ,கணவன் விலகிக் கொள்ள ...
கண்ட்ரோல் செய்துக் கொண்டு நிற்க முடியாமல் குளத்தில் விழுந்த மனைவி கதறுகிறாள் ...
''காப்பாற்றுங்க ,காப்பாற்றுங்க !''
''காப்பாற்ற எனக்கும் ஆசைதான் ,நீதான் என் கையை கட்டிப் போட்டுவிட்டாயே ! ''
       நாம் எல்லாம் பிறக்கும் முன்பே இந்த கதை பிறந்து விட்டது ...
பிரசவித்தவர் கவிமணி  மாயூரம் வேதநாயகம் என்றால் நம்ப முடிகிறதா ?



22 comments:

  1. எல்லோருக்கும் இப்படியா நினைவுபடுத்துவது? வேதனை வேதனை

    ReplyDelete
    Replies
    1. கொல்லணும்ன்னு முடிவெடுத்தா ஆறு குளமெல்லாம் இப்போது தேவைப் படுவதில்லேயே கண்ணதாசன் ஜி ?
      நன்றி !

      Delete
  2. வணக்கம் சகோதரரே..
    தான் விரித்த வலையில் தானே மாட்டிக் கொள்வது என்பது இது தான். கதை எதிர்மறையா தெரிந்தாலும் அது நமக்கு கொடுக்கும் பாடம் நேர்மறை தான். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. க்ரிமினல்களுக்குப் பாடம்னு சொல்லுங்க பாண்டியன் ஜி !
      நன்றி !

      Delete
  3. செம்ம தலைவரே..

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் உங்களுக்கும் பிடிக்குமா பாஸ் ?
      நன்றி கோவை ஆவி ஜி !

      Delete
  4. அஹா அருமையான கதையாக இருக்கிறதே
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. பழைய கதை என்றாலும் இண்டரஸ்டிங் !
      நன்றி !

      Delete
  5. நல்லகதை ! பலருக்கும் பாடம் புகட்டும்!

    ReplyDelete
    Replies
    1. பாடம் எங்கே கத்துக்கப் போறாங்க ?எச்சரிக்கை வேண்டுமானால் அடையலாம் !
      நன்றி அய்யா !

      Delete
  6. எவ்வளவு கொடுமைக்கார கணவனா இருந்திருப்பான் அவன்.
    எப்படியும் செத்துபோனா எவ்வளவு நல்லதுன்னு அந்த பெண் நினைத்திருந்தாள், இவ்வளவையும் செய்ய துணிந்திருப்பாள்.
    கடைசியில் அவளே அவன் வலையில் விழுந்து உயிரையும்விட்டாளேஜீ

    ReplyDelete
    Replies
    1. கேடுவாள் கேடு நினைப்பாள் என்று கூடச் சொல்லலாம் !
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  7. அட இப்படியெல்லாம் எழுதியிருக்காரா வேதநாயகம் பிள்ளை! அருமையான நீதி தரும் கதை! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அவருடைய 'பிரதாப .....சரித்திரம் கதையில் வரும் கிளைக் கதை இது !
      நன்றி சுரேஷ் ஜி !

      Delete
  8. அட நல்ல கதையா இருக்கே! :)

    ReplyDelete
    Replies
    1. நமக்கு நல்ல கதையாத்தான் இருக்கு ,தாய்க்குலம் யாரும் கமெண்ட் போடாததைப் பார்த்தால் ஆணாதிக்கவாதிகள் இப்படித்தான் என்று நினைப்பது போல் தெரியுதே !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  9. சிறந்த சிந்திக்க வைக்கும் கதை.
    படிப்பினை கூறும் பயன் தரும் கதை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் அவர்களே !

      Delete
  10. மந்திரிகுமாரி படம் பார்த்த ஞாபகம் வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. நான் மனக்கண்ணால் ரசித்ததை ,மந்திரி குமாரியில் காட்சியாக்கப் பட்டிருந்தால் நன்றாகத் தான் இருக்கும் .போன தலை முறை ரசித்ததை ,இந்த தலை முறையும் ரசிக்க முடிகிறது என்றால் இதுவல்லவோ நல்ல படைப்பு !
      வருகைக்கும் ,ப்ளாஷ் பேக் அனுபவத்தைப் பகிர்த்து கொண்டதிற்கும் நன்றி அய்யா !

      Delete