15 November 2013

கற்பழிப்பை மகிழ்ச்சியாக அனுபவிப்பதா ?

கற்பழிக்கப் படும் போது ...
அண்ணே ,என்னை விட்டுடுங்கன்னு பெண்கேட்டால்...ஒரே  ஒரு வார்த்தைச் சொன்னால் கற்பழிப்பு நடக்காதுன்னு உளறிக் கொட்டிய சாமியார்   கற்பழிப்பு புகாரில் ஜெயிலில் உள்ளார் ...
இப்போது CBIஇயக்குனர் கூறிய கருத்தும் சர்ச்சைக்குள்ளாகி  இருக்கிறது ...
'கிரிக்கெட் சூதாட்டத்திற்கு விதிக்கப் பட்ட தடையை உங்களால் அமல் படுத்த முடியாது என்றால் ,அது கற்பழிப்புகளை தடுக்க முடியா விட்டால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதான் என்பது போல உள்ளதாக' அவர் சொன்னதால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி யுள்ளார் ...
உதாரணம் சொல்ல வேறு எதுவுமா தோன்றவில்லை ?
இப்போது 'யார் மனதும் புண் பட்டு இருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சொன்னாலும் ...
பொறுப்பான பதவியில் இருப்பவர் இப்படிசொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று மகளிர் அமைப்புகள் கொடிப் பிடிக்கின்றன ...
பதவிவரும் போது பணிவு மட்டுமல்ல நாவடக்கமும் வர வேண்டும் போலிருக்கிறதே !

23 comments:

  1. பதிவு வந்தால் தான் அனைத்தும் போய் விடுகிறதே...!

    ReplyDelete
    Replies
    1. சிலரால் பதவிக்கு பெருமை ,சிலர் பதவியால் சிறுமை தேடிக் கொள்கிறார்களே !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  2. எதை இழந்தாலும் பரவாயில்லை, பதவி கிடைத்தால் போதும் என்பதுதானே இன்றைய நிலைஜீ

    ReplyDelete
    Replies
    1. பாமரன் விழுந்தால் சிறு சிராய்ப்புதான் ,பதவியில் இருப்பவர்கள் விழுந்தால் எழ முடியாத அளவிற்குப் படுக்கப் போட்டு விடுகிறதே !
      நன்றி அஜீஸ் ஜி !

      Delete
  3. சைத்தான் வேதம் ஓதுவதாகக் கேள்விப் பட்டிருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. கேள்விப்பட்டதை காணும் பேறு பெற்றவர்களாய்என்று நாம் பெருமை அடையலாமா அய்யா ?
      நன்றி !

      Delete
  4. உயர்பதவி இருப்பவர்கள் மட்டுமல்ல அனைவருக்கும் நாவடக்கம் என்பது முக்க்கியமல்லவா! உதாரணம் காட்ட நிகழ்வுகளே இல்லையா அவருக்கு!

    ReplyDelete
    Replies
    1. இதிலென்ன சந்தேகம் ?நா உள்ள அனைவருக்கும் நாவடக்கமும் தேவை !
      நன்றி பாண்டியன் ஜி !

      Delete
  5. யாகாவராயினும் நாகாக்க
    காவாக்கால் இந்த நிலைதான்

    ReplyDelete
    Replies
    1. என்றோ வள்ளுவர் சொன்னது இன்றும் பொருந்துகிறதே !பொய்யா மொழி புலவர் சொன்னது இன்றும் பொய்யாகவில்லை !
      நன்றி !

      Delete
  6. தவறுதான்.முறையான பேச்சல்ல

    ReplyDelete
    Replies
    1. அதிகாரி என்பதால் வருத்தம் தெரிவித்துள்ளார் ,,,
      நன்றி கண்ணதாசன் ஜி !

      Delete
  7. தவறு தான். ஆனால் நான் இந்த உதாரணத்தை பலமுறை கேட்டிருக்கிறேன்.. he obviously did not mean it !

    ReplyDelete
    Replies
    1. அரசியல் வாதி என்றால் ...என் பேச்சை ஊடகங்கள் திரித்து வெளியிட்டு இருக்கின்றன என்று சொல்லியிருப்பார் !
      நன்றி பந்து ஜி !

      Delete
  8. வணக்கம்

    பதவிவரும் போது பணிவு மட்டுமல்ல நாவடக்கமும் வர வேண்டும் போலிருக்கிறதே !அனைவரிடமும் இருந்தால் நன்று வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நாவடக்கம் இருந்தால் நன்றுதான் ,இல்லாவிட்டால் மக்கள் கொன்றுதான் போடுவார்கள் !
      நன்றி ரூபன் ஜி !

      Delete
  9. இதைப் பற்றி நான் எழுதி வைத்து இருந்தேன். நீங்கள் முந்திவிட்டீர்கள். நல்ல இடுகை~
    உங்களுக்கு போ!
    அப்படி என்றால் உங்களுக்கு பிளஸ் வோட்டு போட்டாச்சு என்று அர்த்தம்.
    ஏழாவது வோட்டு போட்டு உங்களை மகுடம் ஏற்றிவிட்டேன்.
    ஏழாவது வோட்டு என்னுது! காலத்தினால் செய்த உதவி...ஞாபகம்!

    ஒரு குட்டி விண்ணப்பம். அது என்ன தமிழ்நாட்டில் எல்லோரும் இப்ப ஜி --mania?
    என்ன காரணம்? முடிந்தால் சொல்லவும்!

    பின்குறிப்பு:
    இனி உங்கள் பதிவில் போ! என்று பார்த்தல் அதன் அர்த்தம் உங்களுக்கு பிளஸ் 1 வோட்டு போட்டுள்ளேன் என்று அர்த்தம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவையும் போடலாமே !
      ஓட்டு விளக்கத்திற்கு நன்றி !தொடர்கிறேன் ,தொடருங்கள் !
      G மேனியா என்னை தவிர வேறு யாருக்கு ?
      நான் வா என்று சொல்லாமலே ,நீங்கள் போ என்றால் சந்தோசம் தான் !
      நன்றி நம்பள்கி ஜி !

      Delete
  10. நன்றி ரமணி ஜி !

    ReplyDelete
  11. பல சமயங்களில் பேசாமல் இருப்பதில் பலன் உண்டு.... இப்படி பேசி மாட்டிக்கொள்கிறார்கள்!

    ReplyDelete
    Replies
    1. மைக் கிடைச்சா என்ன வேண்டுமானாலும் பேசுவார் போலிருக்கே !
      நன்றி

      Delete
  12. நாவடக்கம் கட்டாயம் தேவை.

    ReplyDelete
    Replies
    1. இதுக்குதான் நாக்கை அடக்க பழகணும்னு சொல்றது !
      நன்றி

      Delete