31 January 2017

ஹனிமூன் யாரோடு போவாரோ :)

மாமூல்  வாங்க வழியா இது :)
               ''வங்கியில் கொள்ளை அடித்தது நீதான்னு போலீஸால் நிரூபிக்க முடியவில்லை ,நீ போகலாம் !''
               ''இந்த கேஸில் மாமூல் கேட்டு  தொந்தரவு தரக் கூடாதுன்னு போலீசுக்கு எச்சரிக்கை பண்ணுங்க, எஜமான் !''

ஹனிமூன்  யாரோடு போவாரோ :)                     
               ''தலைவரோட அறுபதாம் கல்யாணத்தில் என்ன கலாட்டா ?''
              ''இன்னைக்கு , என் கழுத்துலே தாலி கட்டியே ஆகணும்னு, தலைவரோட 'சின்ன வீடு 'வந்து சண்டை போடுதாம் !''  
'கலர்' பார்க்க முடியலைன்னா கஷ்டம்தானே :)
                ''காலையில் சிகப்பு  ,மதியம் மஞ்சள்  ,ராத்திரி வெள்ளை மாத்திரையும்  சாப்பிடச் சொன்னா ,முடியாதுன்னு ஏன் சொல்றீங்க ?''
                ''என் பிரச்சினையே ,எல்லா கலரும் ஒரே கலரா  தெரிவதுதானே  ,டாக்டர் ?''
                              
இந்த காலத்து பசங்க ரொம்ப வெவரம் :)
           ''ஸ்கூல் பக்கத்திலே இருக்கிற போர்டிலே 'மெதுவாகச் செல்லவும் 'னு இருக்கிறதை ,ஏன் 'கவனமாகச் செல்லவும் 'னு திருத்துறீங்க ?''
           ''எல்லாப் பசங்களும் இதைப் படிச்சிட்டு ஸ்கூலுக்கு லேட்டா வர்றதா HM சொல்றாரே !''

உண்மை ஜோதிடம் ,ஜனகனமன நேரமும் சொல்லும் :)
               ''கவலைக்கிடமா இருக்கிற நம்ம தலைவர் பிழைக்க மாட்டார்ன்னு  சொல்றீயே ,எப்படி ?''
              ''ஜாதகத்தைப்  பார்த்த  ஜோதிடர் தலைவரோட 'ஜனகனமன நேரம் 'நெருங்கிடுச்சின்னு சொல்றாரே !'' 

 கேள்விக் குறியாகும் மரியாதை :)
 புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்கள்...  
இருட்டில் செய்கின்ற லீலைகள் எல்லாம் 
வெளிச்சத்தில் வரும்போது ...
மரியாதை   கேள்விக் குறியாகி  விடுகிறது !

30 January 2017

கவலைகள் ஓய்வதே இல்லை :)

 இது நியாயமான  கேள்விதானே  :)          
              ''ஜோக் எழுதுறதை நிறுத்தப் போறீங்களா ,ஏன் ?''
              '' பிறக்கும் போது தாயை அழ வச்சீங்க  சரி , ஜோக்னு  எழுதி  எங்களை ஏன் அழ வைக்கிறீங்கன்னு  ஒரு வாசகர் கேட்டுருக்காராம் !''

போஸ்ட்மேனா இருந்த இவனோட அப்பனும் இப்படித்தான் :)                         
            ''என்னடா சொல்றே ,சிஸ்டத்திலும் நான் செண்டிமெண்ட் பார்க்கிறேனா ?''
           '' இன்பாக்ஸ் ,வெறும் பாக்ஸா இருக்கக் கூடாதுன்னு   டெலிட் செய்யும்போது ஒரு மெயிலை வைச்சுக்கிறீயே !''

மாமூல் தந்த தைரியமோ :)
            ''ஏட்டையா,இருந்தாலும் கபாலிக்கு இவ்வளவு தைரியம் கூடாதா ,ஏன்  ?''
             ''நம்ம ஏரியாவில் எந்தெந்த வீடு பூட்டிக் கிடக்குன்னு போன்பண்ணிக் கேட்கிறானே !''

 நகையோட லோனும்  கொடுத்தா வேண்டாம்னா இருக்கு :)          
         ''நீங்க கேட்ட ஜூவல் லோன் பணத்தை எதுக்கு நகைங்க மேலே வைச்சு தரச்சொல்றீங்க ?''
        ''நீங்கதானே நகைங்க மேலே லோன் தரப்படும்னு சொன்னீங்க ?''
தலைப்பாகையை அலசிப் போட்ட மனைவி சொல்லி இருப்பாரோ :)
           ''காக்கா ,கக்கா போட்டுகூட  பழமொழி உருவாகி இருக்கா ,எப்படி ?''
           'தலைக்கு வந்தது தலைப்பாகையோடப் போச்சுங்கிறது ,வேற எப்படி வந்திருக்கும் ?''

கவலைகள் ஓய்வதே இல்லை :)
மாசக் கடைசியில் ...
நடுத்தர வர்க்கத்தின்  கவலை ஒன்று கூடியது  ...
காசு மட்டுமா குறைகிறது,
நெட் ஸ்பீடும்  குறைகிறதே !  

29 January 2017

தவிக்க விட்டுப் போன மனைவி திரும்ப வருவாளா :)

எப்படியென்றாலும் ஆயுள் தண்டனைதான் :)                      
                 ''பொறந்தா  , 'எரித்திரியா ' நாட்டில் பொறக்கணும்னு ஏண்டா சொல்றே ?''
                  ''அங்கே ,ரெண்டு பெண்களைக்  கட்டிக்காத ஆண்களுக்கு சிறைத் தண்டனையாமே !''
        செய்தியைப்  படிக்க கிளிக்குங்க ..ரெண்டு திருமணம் இல்லாட்டி ஜெயில் :
சுனாமியில் தப்பித்தும் நிம்மதி இல்லை   :)       
               ''சுனாமி வந்து பல வருசமாச்சே ,அந்தப்  பாதிப்பில் இருந்து  இன்னும்  மீள முடியலையா .ஏன் ?''
           '' அன்னைக்கிதான் எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொல்லவந்தேன்  !''

வீட்டிலே வெங்காயம் நறுக்கித் தந்தாலும் ,இங்கே சவுண்ட் விடுறாரே :)
          ''ஏன்யா சர்வர் ,சாம்பாரிலே அழுகிப் போன வெங்காயமா வருது ,கூப்பிடுய்யா உங்க முதலாளியை !''
         ''கொஞ்சம் பொறுங்க சார் ,வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்கார் !''
                      
மொய் வைச்சவனுக்கு பொய்தான் போஜனமா:)
          ''நாலு பந்தி கூட்டத்திற்கு சாப்பாடு பத்தாதுன்னு சொன்னாங்களே ..எப்படி சமாளிச்சீங்க ?''
         ''பந்தியிலே பாம்பு புகுந்துருச்சுன்னு புரளியைக் கிளப்பி விட்டுத்தான் !''

தவிக்க விட்டுப் போன மனைவி திரும்ப வருவாளா :)
         ''கோபித்துக் கொண்டு போன மனைவி  திரும்ப  வரணும்னு அனுமாருக்கு வடை மாலை சாற்றியும் பார்த்திட்டேன் ,ஒண்ணுமே  நடக்கலே ...என்னடா செய்யலாம் ?''
          ''உன் மோதிரத்தை காணிக்கையா போட்டுப் பாரேன்,மோதிரத்தை சேர்க்க வேண்டிய இடத்தில்  கொண்டு போய் சேர்த்திடுவார் !''

கற்பு எனப்படுவது இதுதானோ :)
அவனவன்  நெஞ்சிலே ஆயிரம்  கனவுக் கன்னிகள் ...
அவளின் நெஞ்சிலோ  ஒரேயொரு ....கண்ணன்தான் !

28 January 2017

எதிர்பாராமல் வந்த காதல் :)

 பெயர்க் காரணம் இதுவாக இருக்குமா ?   
           ''ஆங்கில எழுத்து  சாய்ந்த வடிவில் இருந்தால் italik ஸ்டைல் என்று சொல்வது பொருத்தம்னு ஏன் சொல்றே ?''  
          ''சாய்ந்த கோபுரம் இத்தாலியில் தானே இருக்கு !''

காசைக் கறக்க வழியா ,இந்த வலியும் :)          
          '' தலைவர் மாலை எல்லாம் வேண்டாம்னு சொல்றாரே , அவ்வளவு தன்னடக்கமா ?''
           ''அட நீங்க வேற ,அவருக்கு கடுமையா  கழுத்து வலிங்க !'

மாமியாருக்கு 'முதல் மரியாதை ' செய்யும்  மருமகள் :)
             ''புதுசா வாங்கின கேமரா செல்போனில்  ,முதலில் எங்க அம்மாவைப் போட்டோ  எடுத்து வைத்துக்கச் சொல்றீயே ,அம்புட்டு பாசமா ?''
           ''அட நீங்க வேற ,திருஷ்டி கழியும்னு சொல்ல வந்தேன் !''

முதுமை கஷ்டம்தான் ,அதுக்காக இதை பயன்படுத்தலாமா :)
            ''டாக்டர் ,கஞ்சா அடிமைகளுக்கு முதுமை வராதுன்னு எப்படி சொல்றீங்க ?''
            ''கொஞ்ச வயசுலேயே போய் சேர்ந்துடுவாங்களே !''

 எதிர்பாராமல் வந்த காதல்  :)
            ''தினமும் நாயுடன்  வாக்கிங் வர்ற பொண்ணைக்  காதலிக்க, நீயும் ஒரு நாயோட போனீயே ,காதல் வந்ததா ?''
           ''ஓ ,வந்ததே ...ரெண்டு நாய்ங்களுக்கும் !'' 

27 January 2017

இளம் மனைவிக்கு இப்படியும் தொல்லைத் தரலாமா :)

திறமை வாய்ந்த  நமது காவல் துறை :)          
          ''நம்ம பிரதமர் 2020 க்குள் இந்தியாவில் குடிசையே  இருக்காதுன்னு சொல்றதை நம்ப முடியுதா ?''
           ''இவ்வளவு வருஷம் கூடத் தேவையில்லை ,நம்ம தமிழ் நாடு போலீஸ்கிட்டே பொறுப்பை ஒப்படைச்சிட்டா !''

நல்ல வேளை,உங்களை வெட்டாம விட்டானே :)                        
         ''திடீர்னு முருங்கைக் காய் வியாபாரத்தை நிறுத்திட்டீங்களே,ஏன் ?''
         ''பக்கத்து வீட்டுக்காரன் அவங்க மரத்தை வெட்டிட்டானே !''

 பையனுக்கு நூடுல்ஸ்னா  உயிரோ :)    
             ''உங்க  பையன் கவிஞராய் வருவான் போலிருக்கா ,எப்படிச்  சொல்றீங்க ?''
            ''பூக்களைப் பறிக்க கோடரி எதுக்குன்னு நான் பாடினா ,நூடுல்ஸ் உடைக்க சம்மட்டி எதுக்குன்னு  எதிர்ப் பாட்டு பாடுறானே !''

இளம் மனைவிக்கு இப்படியும்  தொல்லைத் தரலாமா :)
                ''ராத்திரிப்பூரா  என்னவர் தொல்லைத் தாங்க முடியலேடி !''
               ''இப்பத்தானே கல்யாணம் ஆகியிருக்கு ...அலுத்துக்கிறீயே ?''
               '' அட நீ வேற ...அவரோட குறட்டைச் சத்தத்தால் என்னாலே தூங்கவே முடியலேன்னு சொல்ல வந்தேன் !''

மயங்கிக் கிடந்தவன் முகத்தில் தண்ணீர் தெளித்தால் ....:)
             ''மயக்கமாகி எழுந்தவனை எல்லோரும் ஏன் அடிக்கிறாங்க ?''
            ''ஒரு சோடா வாங்கிக் கொடுக்கக்கூட ,உங்கள்ளே யாருக்கும் துப்பில்லையான்னு கேட்டானாம் !''

அவரவர் கஷ்டம் அவரவர்களுக்கு :)
ஒற்றுமையாய் இருந்த என்னைப் பிரித்து 
தலையிலே பலமாய்  அழுத்தி 
 குழியிலே  என்னைத் தள்ளி 
அகலக்கால்  வைக்க விடாமல் 
உள்புரமாய்  மடக்கி ...
 உன்   தேவையை  தீர்த்துக் கொண்டாயே ,
நான்படும்   கஷ்டம்  உனக்கு புரியாதா ?
எனக் கேட்ட 'ஸ்டாப்பிளர்  பின்னிடம் '
முதிர் இளைஞன்  சொன்னான் ...
வேலைக் கிடைக்கும் வரை  என் கஷ்டமே 
எனக்குப்  பெரிது !

26 January 2017

காதலியின் ஆசையை நிறைவேற்ற இப்படியா துடிப்பது :)

குடியரசின் பலன் அனுபவிக்கிறவங்க யார் :)
              ''தலைவர்  அறிக்கை விடும் போது மப்புலே இருந்த மாதிரி தெரியுதுன்னு ஏன் சொல்றே ?''
             ''குடிஅரசு ஆனதின் முழுபலனை  நமது மாநில மக்கள்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும்வண்ணம்,
இன்று ஒவ்வொரு டாஸ்மாக் கடை வாசலிலும்  தேசீயக் கொடி ஏற்றவிருப்பதால் 'குடி 'மக்கள் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு சொல்லி இருக்காரே !''

கை மாறிய காதலிக்கு கல்யாணம் :)
               ''5 ஸ்டார் ஹோட்டலில் அடுத்த வாரம் எனக்கு கல்யாணம் ,நீ அவசியம் வரணும்டா !''
               ''கவலையே படாதே ,வந்து விடுகிறேன்  ,(மனதுக்குள் )உனக்காக இல்லைன்னாலும் என் பழைய காதலிக்காக வந்து தானே ஆகணும் !''

முதலாளிக்கு வந்த நல்ல எண்ணம் :)
              ''மேனேஜர் ,நம்ம தொழிலாளிங்க யாரும் 'கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியலே'ன்னு  பாடக்கூடாது ...!''
              ''சம்பளத்தை இரண்டு மடங்கு ஆக்கப் போறீங்களா ,முதலாளி ?''
              ''ஊஹும் ...சம்பளத்தைப் பாங்கிலே போட்டுருங்க !''

காதலியின் ஆசையை நிறைவேற்ற இப்படியா துடிப்பது :)      
           ''டார்லிங் , 28  வயசுலே பிள்ளைப் பெத்துக்கிட்டா  உடல்ரீதியா நல்லதுன்னு டாக்டர்கள் சொல்றாங்க !''     
          ''எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லே ,முதல்லே பெத்துக்க ...தாலியைக்கூட மெதுவா கட்டிக்கலாம் !''

 ருசியில் சிறந்தது  'ராட்டை ' மீனாமே :)
          புலால் மறுத்த காந்தீயவாதிகளும் 
          விரும்பியிருந்தால் உண்டு இருப்பாரோ ...           
           'ராட்டை ' மீனை ! 

25 January 2017

ஜாக்கிரதை ஜன்னல் ஜாக்கெட் ஜாக்கிரதை :)

பன்னாட்டு கம்பெனிப்  பொருளை இப்படியும் தள்ளலாமோ:)
          ''பேபி சோப்பிலே இதான் நம்பர் ஒண்ணு ,ஏன் வேண்டாங்கிறீங்க ?''
          ''வெளிநாட்டு  john னோட son னே அதைப் போட்டுக்கட்டும் !''

பதிலும் SMSல் வராம  இருக்கணும் :)           
           ''என்னங்க , 'லட்சுமி மேனன் அடுத்து நடிக்கும் படம் 'னு பையனுக்கு SMS அனுப்புறீங்களே,ஏன் ?''
           ''அப்படியாவது  ,என் நினைப்பு வந்து பேசுறான்னா  பார்க்கத்தான் !'' 

நல்ல முன் எச்சரிக்கைதான்   :)           
             '' கூட்டிப்  பெருக்க மட்டும் தெரிந்த வேலைக்காரி தேவைன்னு உங்க மனைவி சொல்றாங்களே ,ஏன் ?''
             ''வர்ற வேலைக்காரி ,என் மனைவி கிட்டேயிருந்து என்னைக் கழித்து , புது வாழ்க்கை வகுத்து விடக் கூடாதுன்னுதான் !''

இவனை வரதட்சணைக் கேஸில் தூக்கிலே போடணும் :)
            ''என்னம்மா ,குண்டைத் தூக்கி போடுறே ... டைவர்ஸ்  நோட்டீஸ் கொடுக்கப் போறீயா ,ஏன் ?''
            ''உங்கப்பாதான்  பாங்கிலே பெரிய ஆபீசராச்சே , நம்ம வீட்டிலே ஒரு ATM மெஷினைக் கொண்டு வந்து வைக்கச் சொல்லுங்கிறாரே,உங்க மாப்பிள்ளை  !'' 

ஜாக்கிரதை  ஜன்னல் ஜாக்கெட் ஜாக்கிரதை  :)
           ''என் மனைவிகிட்டே ,ஜன்னல் வழியே கையை விட்டு நகை திருடுறது பெருகிட்டு வருதுன்னு சொன்னது ,நல்லதாப் போச்சு !'' 
           ''ஜன்னல் கதவுக்கும் பூட்டு போட்டுட்டாங்களா?''
           ''இல்லே ,ஜன்னல் ஜாக்கெட் போட்டுக்கிறதைக்கூட  விட்டுட்டா !''
ஷேர் மார்க்கெட் எல்லோருக்கும் கை கொடுக்குமா :)
         '' உங்க வீட்டுக்காரர்  ஷேர் ஆட்டோவில் ஏற மாட்டாரா ,ஏன்?''
           ''ஷேர் மார்க்கெட்லே போட்ட பணம் போனதில் இருந்து இப்படி ஆயிட்டார் !''

வாயாடி, பெரியவள் ஆனதும் :)
FM ரேடியோவில் கலாய்க்கும் 
 ரேடியோ  ஜாக்கி ....
 சின்ன வயதிலேயே பெரிய வாயாடி !

24 January 2017

மனைவியிடம் சாப்பாடு என்றாலும் 'சாப்டா 'தான் கேட்கணுமோ :)

 நம்மாளு ,ரொம்ப ராசியான ஆளுதான் :)                    
              ''என் நல்ல நேரம் ,குறுக்கே வந்த பூனை திரும்பி போயிருச்சு !''
              ''அதுசரி ,உன்னைப் பார்த்ததும் நேரம் சரியில்லேன்னு போயிருக்கும் !''

கிளினிக் போறவரைக்கும் இருக்க முடியாதவன் :)
               ''பரவாயில்லையே ,உங்க பையன்  கூப்பிட்ட உடனே   ஓடி வர்றானே !''
              ''சும்மாவா , கால் டாக்சியில் பிறந்தவனாச்சே!''
                                                    
மனைவியிடம் சாப்பாடு என்றாலும்  'சாப்டா 'தான் கேட்கணுமோ :)
               ''நான் இங்க கால்மணி நேரமா டைனிங் டேபிள்லே காத்துக்கிடக்கேன் ,நீ எங்கே போய் தொலைஞ்சே ?''
               ''பசியெடுத்தா கத்த ஆரம்பிச்சுடும்னு நம்ம நாய்க்கு சோறு வைக்கப் போனேங்க !''

இப்படி எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க :)
           ''பெட்ரோல் போடுற இடத்திலே  டிரைவர் கூட என்ன தகராறு ?''
            ''நீ போட்டது பிரீமியம் பெட்ரோல்தானே ,காசையும் நான் ஆறு பிரீமியமாத்தான் தருவேன்னு வம்பு பண்றார் சார் !''

சுயநலமே உலகமாகி விட்டதா :)
     சிலுவைகள் ஆயிரம் செய்தோம் ...
     சுமப்பதற்கு  யாரும்  தயாராய் இல்லை ! 

23 January 2017

புரிய வைக்கத் தெரிந்த புண்ணியவதி :)

பீட்டாவைத் தடை செய் ,அடுத்து :)
             ''அடுத்த போராட்டக் கோஷம் என்ன ?''
             ''பீடாவைத்  தடை  செய் !'' 

புதுசா எந்த மாற்றமும் செய்யலே ,ஆனால் ....:)                                     
               ''அந்த கரும்பு ஆலையில் ,சீனி  உற்பத்தி இந்த வருஷம் இரண்டு மடங்காமே ,என்ன காரணம் ?''
               ''புதுசா பொறுப்பேற்ற சின்ன முதலாளியின் பிழிதிறன் தான் !''

செத்தவன் வாயில் தீர்த்தம் பட்டால் சொர்க்கமாமே :)
                ''அந்த டாக்டரோட திறமை  ,பக்கத்து  பெட்டிக்கடைக் காரருக்கும் தெரிஞ்சுருக்கா ,எப்படி ?''  
                '' கோவில் வாசலில்  விற்பதை விட , இந்த கிளினிக் பக்கத்திலே  காசித் தீர்த்த சொம்பு  நல்லா விற்பனை ஆகிறதாம்  !''                     

புருஷனுக்கு புரிய வைக்கத் தெரிந்த புண்ணியவதி :)
            ''அம்மா , நடிகர் நாகேஸ்வரராவ் காலமாயிட்டார்னு  அப்பாகிட்டே சொன்னா ,அவரை  ஞாபகம் இல்லேன்னு  சொல்றார்மா !''
            ''அமலாவோட மாமனார்னு  சொல்லு ,கண்ணீரே வடிப்பாரு !''

ஆம்லேட் தின்னும் ஆசையே போச்சு :)
             ''ஏம்பா சர்வர் ,ஆம்லேட் உடனே  கிடைக்காதா ?''
            ''ஆம்  'லேட் ' டாகும்  சார் !

வலி ஒன்றுதான் !பெயர்தான் வேறு வேறு :)
              HEADACHE என ஆபீஸில் லீவ்
              சொல்ல   நினைத்தபோது ...
              செல் அழைத்தது ..
             'மண்டைக் குத்து வலி ,வேலைக்கு வர முடியாது '
              ஒலித்தது  வேலைக்காரியின்  குரல் !


22 January 2017

வளைகாப்பு சரி, ஏழாம் மாசமே பிரசவமுமா :)

ஆஹா , எவ்வளவு நல்ல மருமகள் :)
        ''என் அம்மா இனிமேல் மௌன விரதம் இருக்கக் கூடாதுன்னு சொல்றீயே ,ஏன் ? ''
         ''சண்டைப் போடாம எனக்கு போரடிக்குதுங்க ,அதுக்குப் பதிலா உண்ணாவிரதம் இருக்கச் சொல்லுங்க !''

எப்படி வந்தது இந்த  ஞானோதயம் :)                    
             ''அந்த ஆட்டோ டிரைவர் இலவச சேவை செய்து அலுத்துப் போன மாதிரி இருக்காரா ,ஏன் ?''
             ''(தலைப் )பிரசவத்துக்கு மட்டும் இலவசம்னு  மாற்றி எழுதியிருக்காரே !''

உமையொரு பாகனை மறக்க முடியலே :)           ,
             '' பழைய கதையை உல்டா பண்ற டைரக்டர்  ,இப்ப டைட்டிலைக் கூட உல்டா பண்ணியிருக்காரா ,எப்படி?''
                ''நானொரு பாகன்னுதான் !''

சேலை எடுக்கப்  புருஷனைக்  கூட்டிட்டுப் போகலாமா :)
                 ''சேலை எடுக்கணும்னு கடைக்கு வந்தா ,ஒரே ரோதனையா இருக்குன்னு ஏன் சலிச்சுக்கிறே?''
                 ''நான் டிசைனைப்  பார்க்கிற முன்னாடியே நீங்க விலையைப் பார்க்கிறீங்களே !''

 வளைகாப்பு சரி, ஏழாம் மாசமே பிரசவமுமா :)
               ''அவர்தான்  , பொண்ணுக்கு பதினாறு வயசுலேயே கல்யாணத்தை வைச்சுட்டாரே ,இதுவே லேட்னு ஏன் சொல்றீங்க ?''
                 ''இன்னும் மூணு மாசத்திலே அது தாயாகப்போவுதே !''

ஒரே  கல்லில் இரண்டு மாங்காய் :)
    ' திரட் மில்' மிஷினில் ஏறி 
    கையை ,காலை ஆட்டி பயிற்சி செய்பவர்கள் ...
    நெசவு மிஷினை வாங்கி நெய்தாலாவது 
    பருமனும்.குறையும் ,கைத்தறிப் புரட்சியும் ஏற்படும் !

21 January 2017

சுமந்து பார்த்தால் தானே புருசன் கஷ்டம் புரியுது :)

வங்கி வரிசையில் பூத்த காதல் மாதிரி :) 
               ''ஜல்லிகட்டு  போராட்டத்தில்  ஈடுபட்டவங்க  ஒரே லட்சியத்தில் கண்ணும் கருத்துமா இருந்ததை பாராட்டித்தான் ஆகணுமா ,ஏன் ?''
                ''இத்தனை லட்சம் சின்னஞ்சிறுசுங்க சேர்ந்து , இத்தனை நாளா போராட்டம் பண்ணியும் கூட , 'போராட்டக் களத்தில் பூத்த காதல் 'னு ஒரு செய்தியும்  வரலையே !''

இதைப் படித்ததும் 'அவர் 'நினைவுக்கு வந்திருக்கணுமே:)            
               "திருட்டுப் பூஜாரின்னு  அவரை ஏன் அடிக்கிறாங்க ?''
               ''அம்மன் தரிசனத்துக்கு வந்த அம்மணிகளை தரிசனம் பண்ணிக் கொண்டு இருந்தாராமே !''
இது 'மதுரைத் தமிழன்'களின்  சிந்தனைக்கு :)
               ''மேஜிக் நிபுணரைக் கட்டிகிட்டது வம்பாப் போச்சா ,ஏண்டி ?''
              ''பூரிக் கட்டையை  அவர் மேல் எறிந்தால் ,அது பூமராங் மாதிரி திரும்ப வந்து என்னை அடிக்குதே !''

சுமந்து பார்த்தால் தானே புருசன் கஷ்டம் புரியுது :)
               ''எலியும் பூனையுமா இருந்தே ,இப்போ உண்டானபிறகு உன் போலீஸ் புருஷனை விழுந்து விழுந்து கவனிச்சுக்கிறீயே,ஏண்டி ?''
            '' வயித்திலே  இவ்வளவு  வெயிட்டை  சுமக்கிறது ,எவ்வளவு கஷ்டம்னு இப்போதானே எனக்கு தெரியுது !''

2013 ...இதே நாளில் ,ஜோக்காளியில் ....
'ஜோக்காளி 'யின் நிறத்திற்கு மனதை மாற்றும் சக்தி உண்டு !
         தினமலர்  படித்துக் கொண்டிருந்த ஜோக்காளி ,ஜல்லிக்கட்டு காளையை அடக்கி விட்டவரைப் போல் துள்ளிக் குதித்தார் .
       ''சௌதாமினி  ,சௌதாமினி  ,சீக்கிரம் இங்கே வாயேன் ''என்று தன் சகதர்ம பத்தினியை அழைத்தார் .
      ''என்னாச்சு உங்களுக்கு ?காவிரியில் தண்ணி வந்த மாதிரி உற்சாகம் கரை புரண்டு ஓடுது !''
      ''நீ சந்தோசமா இருக்கியா ,சொல்லு ?''
      ''நீங்க  தாலியைக் கட்டுன நாள்லே இருந்து அது எங்கே இருக்கு ?''
      ''இப்படி புலம்பிக் கிட்டே  திருமண வெள்ளி   விழாவையும்  கொண்டாடியாச்சு !அது கிடக்கட்டும் ,  உன்னை அறியாமலே நீ சந்தோசமா இருக்க ஒரு வழி இருக்கு  !''
      ''அது நான் எங்க அம்மா வீ ட்டுக்கு போற வழியாதான் இருக்கும் !''   
      ''அதுமட்டுமில்லை !ஈசியான இன்னொரு வழி   ,ஜோக்காளி ப்ளாக்கை நீ படிக்க கூட வேணாம் ,பார்த்துக் கிட்டு இருந்தாலே போதும் ,ஆட்டோமேடிக்ககா  உன் மனசிலே இனம் புரியாத சந்தோசம் உண்டாகும் !''
     ''நீங்க  ப்ளாக்கை ஆரம்பித்தப் பிறகு ,  கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிறவங்க எண்ணிக்கை கூடியிருக்குதுன்னு 'லயோலா ' புள்ளி விபரம் சொல்லுதே !''
     ''சென்னையில் மட்டுமா ப்ளாக் தெரியுது ?ஆப்ரிக்கா பக்கம் சர்வதேச எல்லையில் ,சாட்டிலைட் ரீசிவர் மூலமா  கப்பலில் இருந்தும் பார்த்து ரசிக்கிறாங்கன்னு தெரியாதா உனக்கு?''
      ''அவங்க  கீழ்ப்பாக்கம் பக்கம் வரலேன்னு சொல்ல  வர்றிங்களா ?''
      ''ஆமா !''என்றார் ஜோக்காளி 'செவ்வாயில் 'தண்ணீர் கண்டுப் பிடித்த மாதிரி !
      ''எதுக்கும் ப்ளாக் வியூவர் மேப்பை  செக் பண்ணுங்க ,அப்பாவி மனுஷன் எவனாவது கடல்லே விழுந்து தற்கொலை பண்ணிக்கிட்டிருக்கப் போறான் !''
       ''ப்ளாக் எழுதுற நானே ,பவர் ஸ்டார்  ரேஞ்சுக்கு பல்லைக் காட்டிக் கிட்டு சந்தோசமா இருக்கேன் ,என் வியூவர்சைப்  பற்றி நீ ஒண்ணும் கவலைப் படாதே ,நல்லா  இருப்பாங்க !அது சரி ,உன்னோட  தைராய்ட் பிரச்சினை ரெகுலேட்  ஆகணுமா ?என் ப்ளாக்கைப் பாரு !''
         ''ஆசையா வாங்கின வைர நெக்லசை போட்டுக்க முடியலே ,கழுத்துலே  கட்டிட்டு   இருக்கிற  ஃமப்லரை கழட்ட உதவும்னா ப்ளாக்கைப்  பார்க்கிறேன்  '!'
        ''நிச்சயம் உதவும்  ,உனக்கு அடிக்கடி வரும்  தசை பிடிப்பு  ,சரியாப் போயிடுச்சா?''
         ''அப்படியேதான் இருக்கு ,அதுக்கும் உங்க ப்ளாக்கைப் பார்த்தா சரியாயிடுமா ?''
          ''கரெக்ட் !இன்னொரு முக்கிய விஷயம் ,ஜோக்காளி ப்ளாக்கை  ஆண்களை விட பெண்கள் பார்த்தா பலன் அதிகம் !''
          ''உங்க ஜொள்ளுப் புத்தியை  காட்டிட்டீங்களே!''
           ''சௌதாமினி ,தப்பா எடைப்  போடாதே !பெண்களுக்கு பீரியட்ஸ் தொந்தரவு கூட வராதுன்னு சொல்ல வந்தேன் !''
           ''ஜோக்காளி ப்ளாக்கிலே  அப்படி என்ன  அதிசய சக்தி இருக்கு  ?''
''ப்ளாக்கிலே  இல்லே ,ப்ளாக்கில் அதிகமா இருக்கிற ஆரஞ்சு நிறத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கே  !இதை நான் சொல்லலே ,சென்னை அண்ணா இயன் முறை மருத்துவமனை விரியுரையாளர் திருமதி தீபா மேடம் தான் சொல்லி இருக்காங்க !''
         ''உங்களைத் தவிர யார் சொன்னாலும் சரியாத் தான் இருக்கும் !

   நன்றி ..தினமலர்  16.01.13

20 January 2017

இரு கை ஓசைதானே ,காதல் :)

பையன் செய்தது சரிதானே :)       
          ''என் பையனோட புத்திசாலித் தனத்துக்கு  வேற ஸ்கூல்லே சேர்க்கணுமா  ஏன் ?'' 
          ''கோடிட்ட இடத்தை நிரப்பச் சொன்னா ,அவனும் கோடு போட்டு  நிரப்பி வச்சிருக்கானே !''

மேனேஜர்  மேஜர் ஆகாதவரோ :)
        ''உங்க மேனேஜருக்கு நக்கல் ஜாஸ்தியா ,ஏன் ?''
        ''தலைக்கு மேலே வேலை இருக்குன்னு  ஒருநாள் லீவு கேட்டா ...ஹேர் கட் பண்ணிக்க பெர்மிசன் போதுமேங்கிறாரே !''

 இரு கை ஓசைதானே ,காதல்  :)
         ''நீ காதலிக்கிற பொண்ணோட  விருப்பத்தை தெரிஞ்சுக்க ...ஒரு கையிலே ஓசை வராதுன்னு ஜாடைமாடையா சொன்னீயே ,என்னாச்சு ?''
        ''ஏன் வராதுன்னு  'பளார் 'ன்னு  கன்னத்திலே அறைஞ்சிட்டாளே !''
ஆஸ்திரேலியா ஜனத் தொகையை விட இவர்கள்  அதிகமாச்சே :)                
           ''லஞ்சம் வாங்கிறவனை எல்லாம் பிடித்துக் கொண்டு போய் ஒரு தீவிலே விடணும்!''
          ''அவ்வளவு பெரிய தீவுக்கு எங்கே போறது ?''

மார்க்கும் 'முட்டை' தான் எடுப்பானா  :)
         ''கோழி முட்டையிட்டு அடை காத்து குஞ்சு பொறிக்கும்னு சொன்னா, என் பையன் நம்ப மாட்டேங்கிறான்டி  !''
         ''எப்படி நம்புவான் ?நாமதான் முட்டையை  வடைச் சட்டியில் பொறித்து சாப்பிடக் கொடுத்து  விடுகிறோமே !''

19 January 2017

வெளி நாட்டுக்குப் போகுமுன் ......:)

ஜால்ரா சத்தம்  காதைக் கடிக்குதே:)
         ''புது  மேனேஜருக்கு ஜால்ரா அடித்தால் பிடிக்காது போலிருக்கா , ஏன் ?''
          ''அவர் ,கானல் நீர் தெரியுதுன்னார் ..ஆமா சார் ..அதுலே மீன் நீந்தி விளையாடுதுன்னு  சொல்லித் தொலைச்சிட்டேன் !''
வெளி நாட்டுக்கு போகுமுன் ......:)
            ''நீ  குடும்பத்தோட  உலக  டூர்  போறதை வாழ்த்தி ,போஸ்டரெல்லாம் போட வேண்டாம்னு ஏன் சொல்றே ?''
           ''கொள்ளைக்காரனுக்கு  நாமே  வெற்றிலைப் பாக்கு வைச்ச மாதிரி ஆயிடும்ணுதான்!''

படத் தலைப்பே ரிசல்ட்டை சொல்லிவிடுமா :)
        ''எப்ப பார்த்தாலும் தலையிலே துண்டை போட்டுக்கிட்டு  இருக்காரே ,அவர் யாரு ?''
         ''உச்சி வெயில்  படத் தயாரிப்பாளர்தான் !''

ஊடகங்கள் செய்யும் உன்னதப் பணி :)
ஏழு  ஆண்டுகளாக  உள்தாளே ஒட்டிக் கொண்டிருப்பதால்  ...
செவ்வாயில் மண்ணைத் தோண்டி ஆராய்ச்சி என்பதை விட முக்கிய செய்தியான 
'குடும்ப அட்டையில்  உள் தாள் ஒட்டும் பணி 'என்ற செய்தி 
இந்தாண்டு நம்ம ஊர் மீடியாக்களில் இல்லாமல் போய்விட்டது:)

18 January 2017

சொல்லித் தெரிவதில்லை :)

அது முடியும் ,இது முடியுமா :) 
                 ''இன்னைக்கு ,கராத்தே கிளாஸ்லே  வெறும் கையினால் செங்கல்லை  ஒரே போடா போட்டு  , உடைக்கக் கத்துட்டேன் ,அப்பா !" 
              ''நல்லதா போச்சு ,இன்னைக்கு உங்கம்மா செய்திருக்கிற மைசூர் பாக்கை  உடைச்சுக் கொடு !''
                                                     
இன்னொரு பெண்டாட்டியை  தேடிக்குவாரோ  :)
                 ''இன்ஸ்பெக்டர் சார் ,100 பவுன் நகையோட என் பெண்டாட்டி காணாமப் போயிட்டா !''
                 ''சரி நான் என்ன செய்யணும் ?''
                 ''எப்படியாவது நகையை மட்டும் கண்டுபிடிச்சு கொடுங்க போதும் !''

நடிகைன்னாலே டைவர்ஸ்தானா :)
            ''உங்க பொண்ணுக்குத்தான் சினிமா சான்ஸ் இல்லாம போச்சே ,கல்யாணமும் ஏன் தள்ளிப் போய்கிட்டே இருக்கு ?''
            ''வர்ற வரன் எல்லாமே ஆறு மாசமாவது கியாரண்டி தர முடியுமான்னு கேட்கிறாங்களே !''

பிணவறை என்ன மணவறையா ,சந்தோசப்பட :)
            ''டாக்டர் ,ஆஸ்பத்திரி காம்பௌண்ட் உள்ளேயே வாக்கிங் போகச் சொன்னீங்க சரி ,பின் பக்கம் மார்ச்சுவரி  இருக்குன்னு சொல்ல வேண்டாமா ...பயந்தே போனேன் !''
            ''பயப்படாதீங்க ,உங்களுக்கு ஆப்பரேசன் முடிஞ்சதும் சரியாப் போகும் !''

சொல்லித் தெரிவதில்லை ...?
               ''குடும்பப் பாங்கான வேடங்களில் மட்டுமே நடிப்பேன்னு சொன்ன ,அந்த நடிகை .இப்போ 'கிளாமர் 'லே கலக்குறாங்களே .எப்படி ?''
               ''சான்ஸ்  கிடைக்காம  இருந்தப்போ  சினிமா 'கிராமர் 'படிச்சாங்களாமே !''

IPL கிரிக்கெட்டில் மட்டுமா சூதாட்டம் :)
சென்ற ஆண்டு ,ஆந்திராவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த ...
தடை செய்யப்பட்ட சேவல் பந்தயத்தில் ...
MLAக்கள் ,தொழில் அதிபர்கள் ,சினிமா பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து இருக்கிறார்கள் ...
அவர்களுக்கு எல்லாம் போலீஸ் பாதுகாப்பும் வழங்கப் பட்டுள்ளது ...
15ஏக்கர் பரப்பளவு பகுதியில் பிரமாண்டமாக நடைபெற்ற சேவல் பந்தயங்களில் ...
5 ௦ ௦ கோடி வரை பந்தயம் கட்டி சூதாட்டம் நடைப் பெற்று உள்ளதாம் ...
அங்கே பணம் விளையாடுகிறது என்றால் ...
இங்கே ,கரூர் அருகே நடந்த சேவல் 
சண்டையால்...
வேடிக்கை பார்க்க வந்த ஒருவரும் ,சேவல் ஜாக்கியாக களம் இறங்கியவரும் பலியாகி உள்ளனர் ...
பலியாக காரணம் ,சண்டையிடும் சேவலின் காலில் கட்டப் படும் கத்தியில் தடவப்படும் விஷம் தானாம்...பாரம்பரிய விளையாட்டுக்கள் என்ற பெயரில் இப்போது வியாபாரம் கொடிகட்டி பறக்க ஆரம்பித்து உள்ளது வேதனைக்குரியதாகும் ! 

17 January 2017

சிக்னல் கொடுத்தாலும் தப்பா :)

சீனா  அன்றும் ,இன்றும் :)
               ''சீனப் பெருஞ்சுவர் கட்டியவர்கள்  சீனர்கள்தான் என்பதை  ஏன் நம்ப முடியலே ?''
               '' Anything made in China is No guarantee & No warrantee ன்னு சொல்றாங்களே !''

சீக்கிரம் கல்யாணமாக இதையும் நம்புவார்களா :)
              ''இப்போதெல்லாம் மணத்தக்காளி கீரைக்கு அதிக கிராக்கியா இருக்கே ,ஏன் ?''
               ''எவனோ ஒருத்தன், 'மண'த்தக்காளிக் கீரையை தினமும்  சாப்பிட்டா ,திருமணம் தள்ளிப் போகாதுன்னு ஆருடம் சொல்லி இருக்கானாமே!''

சிக்னல் கொடுத்தாலும் தப்பா :)          
                 ''பஸ்  விபத்து ஆனதுக்கு டிரைவர் ஆன ,நான்தான் காரணம்னு  எப்படிச் சொல்றீங்க ,பாட்டி  ?''
               ''வெளியே கையை நீட்டாதீர்கள் என்று எழுதிப் போட்டுட்டு ,நீங்களே கையை அடிக்கடி வெளியே நீட்டினதை நானும் கவனிச்சுக்கிட்டு தானே வந்தேன் !''

கணவன் மனைவியிடம் இப்படிச் சொன்னா என்னாகும் :)
            ''ஏனுங்க முதலாளி ,உங்களுக்கே இது நியாயமா ?மாட்டுப் பொங்கல் அன்னைக்கி போய் புது டிரஸ் கொடுக்கிறீங்களே ?''
              ''நீதானே மாடா  உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருந்தே ?''

வடிவேலுவின் 'அவனா நீ ' இவருக்கும் பொருந்தும் :)
               ''இப்போதெல்லாம் தலைவர் 'நீயும் நானும் ஓரினம் 'னு  சொல்றதே இல்லையே ,ஏன் ?''
               ''ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்னு  தீர்ப்பு வந்திருச்சே  !''

இதுவும் பெரியார் பிறந்த மண்ணில்தான் :)
வத்தலக்குண்டு  அருகில் உள்ள இரண்டு கோவில்களில் நடைபெற்று இருக்கும் வினோத நேர்த்திக்கடன் விழாவைப் பற்றி அறியும்போது ...
சிரிக்கத்தான் தோன்றுகிறது ...
நேர்த்திக்கடனாக கொண்டுவந்த லட்சம் வாழைப்பழங்களை படைத்து பூஜை செய்தபின் ...
கூட்டத்தை நோக்கி வானத்தில் சூறை
இட்டார்களாம் ...
அதை வாயால் கவ்வியும் ,கையால் பிடித்தும் பக்தர்கள் சாப்பிட்டார்களாம்...
பழம் சாப்பிட்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள் ...
அவர்களுக்கு சொர்க்கலோகத்தில்  நிச்சயம் இடம் கிடைக்குமென்று தோன்றுகிறது !
இதைவிட கொடுமை ...
இன்னொரு கோவிலில் ...
நேர்த்திக்கடனாய் வந்தது ...
3 அடி முதல் 1 9 அடி நீளமுள்ள அரிவாள்களாம்...
அதுவும் ஒன்றல்ல ,இரண்டல்ல ஐந்நூறாம்...
நல்ல வேளை ,இதை அவர்கள் சூறை விடவில்லை ...
இந்த அரிவாள்கள் எல்லாம் பூப்பறிக்க மட்டுமே பயன்படும் என்றே நம்பத் தோன்றுகிறது !
ஹும் ...இந்தியா செவ்வாய்க்கு ராக்கெட் விடுகிறதாம் !

16 January 2017

குறள் படிக்கும் போதும் நயன்தாரா நினைப்பா :)

கலைவாணர் அன்று சொன்னது ,இன்று உண்மையாச்சு :)
               ''அந்த சலூன்லே தீஞ்ச நாற்றம் வருதே ,ஏன் ?''
                ''அந்த கடைக்காரர்  முடி வெட்ட கத்திரிக்குப் பதிலா நெருப்பைப் பயன்படுத்துறாராமே !''
                (இதை உங்களாலும் நம்ப முடியவில்லையா ? 'நெருப்பை பயன்படுத்தி மூடி வெட்டும் 'வீடியோவை க்ளிக்கி பாருங்க :)

இப்படித் தானே படங்கள் வந்துகிட்டிருக்கு :)
          ''அந்த இயக்குனடரோட எல்லாப் படங்களிலும் ஒரே ஃ பார்முலா தானா ,எப்படி ?''
           ''ஹீரோவுக்கு 'துணி 'ச்சல் அதிகமாவும்  ,ஹீரோயினுக்கு  'துணி 'கம்மியாவும்  இருக்கும் !''

இப்படி 'போட்டு வாங்கிறவன் 'கிட்டே ஜாக்கிரதையா இருங்க :)
           ''பெயர்தான் இருபது ரூபாய் ,மதிப்பே இல்லாமே போச்சு !''
          ''நீங்க சொல்றது 1௦௦ /1௦௦ உண்மை !''
          ''தெரியுதில்லே ,கைமாத்தா பத்து ரூபாய் கேட்டா ஏன் இல்லேங்கிறீங்க?''

சில ஆண்டுக்கு முன் நான் செய்த 'சிரிகுறள்' ஆராய்ச்சி  ........
குறள் படிக்கும் போதும் நயன்தாரா நினைப்பா :)
            ''திருக்குறள் படிச்சுகிட்டு இருந்தே ,தீடீர்ன்னு மூடிட்டியே ,ஏன் ?'
            ''நயன்சாரான்னு  ஆரம்பிக்கிற குறளை பார்த்ததும்  மூட் அவுட் ஆயிடுச்சு !''
திருக்குறள்: 
நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் 
பண்பில்சொல் பல்லா ரகத்து.
சாலமன் பாப்பையா உரை:
பயனற்ற, பண்பும் இல்லாத சொற்களை ஒருவன் பலரிடமும் சொன்னால் அச் சொற்களே அவனை நீதியுடன் சேராமல் நற்குணங்களிலிருந்து நீக்கிவிடும்.

வடு மாங்காய் ஊறுதுங்கோ !
       ''ஆறாதே நாவினால் சுட்ட வடு ..இதுக்கு என்ன அர்த்தம் ?''
       ''வடுமாங்காய் சுவையை  நா மறக்காது என்பதுதான் அய்யா !''

திருக்குறள்
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
பரிமேலழகர் உரை (இதன்பொருள்)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும்= ஒருவனை யொருவன் தீயினால் சுட்ட புண் மெய்க்கண் கிடப்பினும் மனத்தின்கண் அப்பொழுதே ஆறும்;
நாவினால் சுட்ட வடு ஆறாது= அவவாறு அன்றி வெவ்வுரையை உடைய நாவினால் சுட்டவடு அதன்கண்ணும் எஞ்ஞான்றும் ஆறாது.

இன்சுலின் ஏதடா வள்ளுவர் காலத்தில் ?
          ''நான் இன்சுலின் போட்டுக்கிற விஷயம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சது ?'' 
         ''இனிய சொலின்னு எழுதச் சொன்னா ,உங்க பையன் இன்சுலின்னே எழுதுறானே !'
திருக்குறள்:
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை 
நாடி இனிய சொலின்.
சாலமன் பாப்பையா உரை:
பிறர்க்கு நன்மை தரும் இனிய சொற்களை மனத்தால் எண்ணிச் சொன்னால், அவனுள்ளும், நாட்டிலும் அறம் வளரும்; பாவங்கள் குறையும்.

காக்க காக்க நா காக்க !
         ''யாதவராயினும் நாகாக்க ........''
         ''போதும்போதும் நிறுத்துடா ,உன்னாலே  வகுப்பிலே ஜாதிப் பிரச்சினை உண்டாயிடும் போல !''

திருக்குறள் :
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் 
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.
சாலமன் பாப்பையா உரை:
எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

15 January 2017

பஞ்சணையில் படுக்கும் முன் :)

           ''தூங்கிறதுக்கு முன்னாடி காதுலே பஞ்சை வச்சிக்கிறீயே, பனி நுழையக் கூடாதுன்னா?'' 
           ''அதை விட முக்கியம் ,உங்க குறட்டைச் சத்தம் நுழையக் கூடாதுன்னுதான் !''          ''

இதற்கு  பரிகாரமே இல்லையா :)
            ''ஏழரைச் சனி முடியும் போது  நிச்சயம்  உங்களுக்கு கல்யாணமாயிடும் !''
         ''அப்படின்னா ,சனி வேற ரூபத்தில்  தொடர்ந்து வரும்னு சொல்றீங்களா ?''
மருமகள் சுத்தச் சோம்பேறியா :)
           ''உன் மருமக  சுத்தச் சோம்பேறியா  ,ஏன் ?''
          ''அந்த காலத்தில் , உரல்லே மாவாட்டி வழிச்சி எடுத்தோம் ,அவ என்னடான்னா பாக்கெட் மாவைக் கூட வழிச்சி எடுக்க மாட்டேங்கிறாளே !''

மாட்டை அடக்குவதா ஆண்மை :)
          ''ஓடிப் போனது என் பெண்டாட்டி ,நீங்க ஏண்டா ஓவரா ஃபீல் பண்றீங்க ?''
          ''ஒரு காலத்தில் நீ ஜல்லிக்கட்டு மாடுகளை அடக்குவதில் சாம்பியன்,அதை நினைச்சுதான் !''

பொங்கலும் கசக்குமா ,வாழ்த்தால் :)  
தமிழர் நம் நெஞ்சம் பூரித்தது ...
பொங்கல் tvசிறப்பு நிகழ்ச்சியில் வந்த 
வட இந்திய  நடிகையின் 
'போங்கள் வால்தால்'! 

14 January 2017

'ரிஸ்க்' எடுத்து கொடுத்த பொங்கல் புடவையோ :)

வீட்டுக்கு போனதும் இவருக்கு இருக்கு 'பொங்கல் ':)
            '' கண் ஆபரேசன்  செய்த  டாக்டர்  நீங்களே ,என் கணவரோட கண்கட்டை ஏன் பிரிக்க மாட்டேன்னு சொல்றீங்க ?''
           ''முதல்லே யாரை  பார்க்க விரும்புறீங்கன்னு கேட்டதுக்கு 'நர்ஸ் நளினாவை 'ன்னு சொல்றாரே !''

பொங்கல்னா இதுதான் பொங் 'கல் ' :)
            ''இதுவரைக்கும் நீ  இப்படி பொங்கல் வச்சு நான் சாப்பிட்டதே இல்லே !''
            ''அவ்வளவு டேஸ்ட்டா?''
            ''அட நீ வேற ...பொங்கல்லே  அவ்வளவு கல்லு கிடந்ததுன்னு சொல்ல வந்தேன் !''

 ரிஸ்க் எடுத்து கொடுத்த பொங்கல் புடவையோ :)
        ''நீ கட்டிக்கிட்டு இருக்கிற புதுப் புடவை சூப்பரா இருக்கே ,எங்கேடி  எடுத்தே ?''
         ''என் வீட்டுக்காரர் கிட்டேதான் கேட்கணும் ,ஜெயிலில் இருந்து வரட்டும் !''

பொண்ணோட அழகு உலகப்பிரசித்தம் போலிருக்கே :)
             ''வாடிவாசல் வழியா வந்த ,தலைவரோட மாட்டை மட்டும்  யாரும் பிடிக்காம ஒதுங்கிட்டாங்களே...ஏன் ?''
             ''அடக்கிறவங்களுக்கு பரிசா தன் பெண்ணைக் கொடுக்கப் போறதா சொல்லி இருகிறாரே !''

சொல்வது ஒன்று ,செய்வது ஒன்றுமாய் நம் அரசியல்வாதிகள் :)
உயர்நீதி மன்றத்தில்  தமிழில் 
வாதாடக் கூடாது என்பதைக் கேட்டதும் 
இரத்தம்  கொதித்தது ...
காரணங்களை  கேட்டபோதுதான்  புரிந்தது .
தமிழ் தமிழ் என முழங்கும் தலைவர்கள் ...
செய்ய வேண்டிய அடிப்படையான சட்டத் திருத்தங்களைச் செய்யாமல் ...
நம்மை ஏமாற்றுகிறார்கள்  என்று !

13 January 2017

அந்த 'அந்தரங்கம் ' இல்லை இது :)

அப்பனின் கோபம் நியாயம்தானே :)
         ''இப்படி கோபம் வரும் அளவுக்கு, பையன் என்ன செய்தான் ?''
     
          ''இந்த கண்கள் படம் இருந்த இடத்தில்  
இந்த கண்கள் படத்தை  ஒட்டி இருக்கானே!''

அதிகாலை  தூக்கம் அதிக சுகம்தானே :)             
            ''என்னங்க ...இன்று மாசப் பிறப்புன்னு நீங்களாவது சொல்லக்கூடாதா?காலையில் ,வாசலில்  தண்ணி தெளிச்சி ,கோலம் போட்டிருப்பேனே , ?''
           ''நல்ல நாளும் அதுவுமா தூங்கக் கூடாதுன்னு ,முதல்லே என் மூஞ்சியிலே தண்ணி தெளிப்பே  ,அதான் சொல்லலே  ?''

அந்த 'அந்தரங்கம் ' இல்லை இது  :)
             ''நானோ நடிகை ,நீங்களோ தொழில் அதிபர் ...புதுமையா நம்ம கல்யாணத்தை ஏன் விமானத்தில் வச்சுக்கக் கூடாது ?''
            ''ஆரம்பமே அந்தரத்திலான்னு  யோசனையா இருக்கு !''

இவன் லாயரானால், காதலிகூட மனைவி ஆகமாட்டாள் :)
           ''என் பையன் எதிர்காலத்தில்  லாயரா வருவான்னு எப்படி சொல்றீங்க ?''
             '1 9 3 2 ல் பிறந்தவருக்கு இப்போ என்ன வயசு இருக்கும்னு கேட்டா ...அவர் உயிரோட இருக்காரா ,இல்லையான்னு கேட்கிறானே !'' 

சீனப்பெருங் 'சுவரில்' முட்டிக்கணும் போல இருக்கு :)
         ''நிலவில் இருந்து பார்த்தாலும் சீனப்பெருங்சுவர் தெரியுதாமே!''
           ''இதிலே என்ன அதிசயம்,சீனப்பெருஞ்சுவரில் இருந்துப் பார்த்தாலும் நிலா தெரியுமே ?''

பெட் காபி ரொம்ப பேட் , பெட் வாட்டர் தான் பெஸ்ட் :)
      அதிகாலை உமிழ்நீர் இரைப்பைக்கு நல்லது !
      வெறும் வயிற்றில் தண்ணீர்  பருகுதல்  நல்லது !
      மாறா இளமைக்கு இயற்கை மருத்துவமே  நல்லது !
       நமக்கெது  நல்லது என்று நாமே உணர்வது நல்லது !

12 January 2017

காதலி செம உஷார் பார்ட்டிதான் :)

இது ஒரு கோவைக் கலாட்டா :)                
            ''நம்ம ஊர் பழம் இருக்கான்னு கேட்டா ,என்ன  பதில் சொல்றது ?''
            ''அட ,கோவைப் பழம் இருக்கான்னு கேட்டேன் !''
           (இதுக்கும் ,கீழேயுள்ள படத்துக்கும் என்ன சம்பந்தம்னு யோசிச்சுச் சொல்லுங்க :)

மஞ்சள் நிறம்தான் அவருக்கு  பிடிக்கும் :)
   ''வியாபாரத்திலே திவால் ஆனவர் ,இப்ப பொண்ணோடகல்யாணத்தை ஆடம்பரமா செய்றாரே ,எப்படி ?''
                               ''அந்த மஞ்சள் நோட்டீசில் சம்பாதித்ததை ,இந்த மஞ்சள்          நோட்டீசில் செலவு பண்றார் !''  

காதலி செம உஷார் பார்ட்டிதான் :)              
           ''டார்லிங் ,இன்னைக்கு ரீலிஸ் ஆகியிருக்கிற 'சேஷ்டை ' படத்திற்கு   போய்தான் ஆகணும்னு  ஏன் சொல்றே ?''
           '' 'ஹவுஸ் புல்'  தியேட்டரில் உங்க 'சேஷ்டை' இருக்காதுன்னுதான் !''

ரொம்ப வெவரமான பயபுள்ளே :)
         ''என்ன தம்பி ,என் தலைக்கு மேலே  எரியுற டியூப் லைட்டைக் கழட்டிக் கொடுக்கச் சொல்றே ?''
          ''நல்லா  எரியுற லைட்டா  பார்த்து  வாங்கி வரச் சொல்லியிருக்கார் எங்க அப்பா !''

எழுத்துப் பிழையா ?வேணும்னே செய்ததா :)                                                     
      ''வாத்தியார் வீட்டுக் கல்யாணத்திற்கு போவதா ,வேண்டாமான்னு இருக்கா  ,ஏன்  ?'' 
     ''பத்திரிக்கை முதல் வரியில் 'மொய் பொருள் காண்பது அறிவு 'ன்னு எழுதி இருக்காரே !''

கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா :)
   கொள்ளைப் போன பொருள் கிடைக்க வேண்டுமென 
   வேண்டுதல்  காணிக்கையை ...
   செலுத்த தேடிய போது காணவில்லை ....
   உண்டியலை !

11 January 2017

' தண்ணி வண்டி' லீவு கேட்டால் இப்படியா :)

         ''மேனேஜர் சார், பொய்யானக் காரணத்துக்கு  லீவு தர மாட்டேன்னு  சொல்றீங்க சரி  , எனக்கு ஏன்  தர மறுக்குறீங்க   ?''
          ''ஊருக்கு போய் இருக்கிற பெண்டாட்டியைக் கூட்டி வரப்போறேன்னு கேட்குறீங்களே  !''

மக்கு பயபுள்ளே கூட மார்க் வாங்கும் தந்திரம் :)
          ''பரவாயில்லையே , அந்த ஸ்கூல்லே இதுவரை யாருமே ஜீரோ மார்க் வாங்கியதில்லையாமே !''
         ''அட நீங்க வேற , கேள்விகளை  அழகா எழுதியிருந்தாலே...குட் ஹாண்ட்ரைட்டிங்னு  போனஸ் மார்க்கை போட்டுடுவாங்களாம் !''

ஆத்தீ...ஆத்திச் சூடியை இப்படியா புரிஞ்சுக்கிறது ?
            ''என்னடா சொல்றே .ஔவையார்  ரெண்டு பேருக்கு ரெண்டு விதமா அட்வைஸ்  சொல்லி இருக்காங்களா ?''
            ''ஏற்பது இகழ்ச்சின்னு பிச்சைக்காரனுக்கும் ,ஐயமிட்டு உண்னு  பணக்காரனுக்கும் சொல்லி இருக்காரே  !''

எள்ளுன்னா எண்ணையாய் நிற்கும் அடியாட்கள் :)
      ''தலைவரோட அடியாட்கள் ரொம்ப வேகமா இருக்காங்களா, எப்படி ?''
     ''தலைவர் 'கொல் 'னு  சிரிச்சாக் கூட அரிவாளை தூக்கிடுறாங்களே !''    

100க்கு பக்கம்தான் 108ம் :)
    100 கிலோமீட்டர் வேகத்தில்
    வாகனத்தில் சென்றவனின் கதி ...
   108 வாகனத்தில் சோகத்தில் !

10 January 2017

இவனுக்கு யாராவது பொண்ணு தருவாங்களா :)

இப்படியுமா சந்தேகம் வரும் :)      
           ''உனக்கென்ன சந்தேகம் ,கேளு ?''
          ''wயை ஏன் டபுள் யுன்னு சொல்லணும் ,டபிள் வீன்னுதானே  சொல்லணும் ?''

கைநாட்டு  பேர்வழியா இருப்பாரோ :)                        
          ''டாக்டர் பட்டம் பெற நம்ம தலைவருக்கு தகுதி இருக்குன்னு எப்படி சொல்றே ?''
           ''அவர் எழுதினாலும் புரிய மாட்டேங்குதே !''

இதுவல்லவா தொழில் தர்மம் :)
        ''என்னங்க ,கொள்ளைக்காரங்க எப்படியும் பீரோவை உடைச்சி கொள்ளை அடிக்கத்தான் போறாங்க ,பேசாம பீரோ சாவியை அவங்ககிட்டே கொடுத்துடுங்க !''
         ''கொடுத்தேன் ,கஷ்டப் படாம சம்பாதிச்ச  காசு உடம்புலே  ஒட்டாதுன்னு சாவியை வேண்டாங்கிறாங்களே !''

இவனுக்கு யாராவது பொண்ணு தருவாங்களா :)
           ''பிரைவேட் எம்ப்ளாய்மென்ட் சென்டர் நடத்துற வரனை ஏன் வேண்டவே வேண்டாம்னு சொல்றீங்க ?''
          ''பொண்ணுக்கு எல்லா  தகுதியும் இருக்கு ,பிள்ளை பெத்துகிட்ட அனுபவம் இருக்கான்னு கேட்கிறானே !''

தத்துவத்தைப் புரிந்துக் கொள்வது சுலபமா :)     
    விளங்கிக் கொள்ள முடியலையா ?
    விளக்கிச்  சொல்ல முடியலையா ?
     அட ,அதுதாங்க தத்துவம் !

9 January 2017

ஒண்ணு கொடுத்தா போதுமா ,இன்னொண்ணு :)

 இப்படியும் செய்யலாமோ:)
            ''அவர் சரியான கஞ்சப் பிசினாறியா ,ஏன்?''
           ''காலியாகிற டூத் பேஸ்ட்டை  பிதுக்கி எடுக்காம  பூரிக்கட்டையால் உருட்டி எடுக்கிறாரே !''

மாயம் உண்மையானால் ...:)
          ''உங்க கண்ணுக்கு தெரியாம உங்க மனைவியை மறையச் செய்கிறேன் ,அப்பவாவது மேஜிக் உண்மைன்னு நம்புவீங்களா ?''
          ''திரும்ப வரலைன்னா நம்புறேன் !''
ஒண்ணு  கொடுத்தா போதுமா ,இன்னொண்ணு :)
             ''நீங்க தொழில்  தொடங்க கொடுத்த  பெட்டிசனுக்கு பதிலே இல்லைன்னு மந்திரிகிட்டே  கேட்டதுக்கு என்ன  சொன்னார் ?''
             ''பெட்டிசன் வந்திருச்சு ,பெட்டி வரலேயேன்னு கேட்கிறார் !'   

ஓடிப் போகலாம்னு சொன்னவ ஏன் வரலே :)
            ''  ஓடிப் போகலாம்னு அடிக்கடி சொன்னாலும் என்னோட  காதலி ஓடிவர மாட்டாள்னு உனக்கு எப்படி தெரியும் ?''                                              
            ''வானிலை மைய அதிகாரியா இருக்கிற அப்பன் மேலே அவளுக்கு பாசம் அதிகம்டா !''

இல்லறத் துணைக்கு மாஞ்சா கயிறு வேணுமாம் :)                              
             ''என்  மனைவி சண்டையிலே ,நான் கட்டிய மஞ்சக் கயிறை கழற்றிக் கொடுத்துட்டா !''
              ''வேறென்ன வேணுமாம்  ?'' 
             ''மாஞ்சா கயிறைக் கட்டுங்க ,செத்துத் தொலையுறேன்னு சொல்றா !'