28 January 2017

எதிர்பாராமல் வந்த காதல் :)

 பெயர்க் காரணம் இதுவாக இருக்குமா ?   
           ''ஆங்கில எழுத்து  சாய்ந்த வடிவில் இருந்தால் italik ஸ்டைல் என்று சொல்வது பொருத்தம்னு ஏன் சொல்றே ?''  
          ''சாய்ந்த கோபுரம் இத்தாலியில் தானே இருக்கு !''

காசைக் கறக்க வழியா ,இந்த வலியும் :)          
          '' தலைவர் மாலை எல்லாம் வேண்டாம்னு சொல்றாரே , அவ்வளவு தன்னடக்கமா ?''
           ''அட நீங்க வேற ,அவருக்கு கடுமையா  கழுத்து வலிங்க !'

மாமியாருக்கு 'முதல் மரியாதை ' செய்யும்  மருமகள் :)
             ''புதுசா வாங்கின கேமரா செல்போனில்  ,முதலில் எங்க அம்மாவைப் போட்டோ  எடுத்து வைத்துக்கச் சொல்றீயே ,அம்புட்டு பாசமா ?''
           ''அட நீங்க வேற ,திருஷ்டி கழியும்னு சொல்ல வந்தேன் !''

முதுமை கஷ்டம்தான் ,அதுக்காக இதை பயன்படுத்தலாமா :)
            ''டாக்டர் ,கஞ்சா அடிமைகளுக்கு முதுமை வராதுன்னு எப்படி சொல்றீங்க ?''
            ''கொஞ்ச வயசுலேயே போய் சேர்ந்துடுவாங்களே !''

 எதிர்பாராமல் வந்த காதல்  :)
            ''தினமும் நாயுடன்  வாக்கிங் வர்ற பொண்ணைக்  காதலிக்க, நீயும் ஒரு நாயோட போனீயே ,காதல் வந்ததா ?''
           ''ஓ ,வந்ததே ...ரெண்டு நாய்ங்களுக்கும் !'' 

28 comments:

  1. கஞ்சா ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. இளமையிலேயே முதுமை காண்பவர்கள் :)

      Delete
  2. எல்லாத்துக்கும் ‘பைசா’தான் காரணம்... கொத்தனாருக்குக் கூலி ஒழுங்காக் குடுக்கனுமுல்ல... சாய்த்துக் கட்டிட்டாரு...! italik ஸ்டைலாத்தானே இருக்கு...!

    என்னது...தலைவருக்கு இறுதி மாலை நீதான் போடுவியா...?! தலைவருக்கு மாலை நேரத்து மயக்கம் வேணுமாம்...!

    என்னைப் பார்... யோகம் வருமுன்னு... கண்டகண்ட கழுதைங்க படத்தை பார்க்கிறீங்களேன்னு சொன்னேன்...!

    கொஞ்ச... நாள் பொறு தலைவா...!

    ரெண்டு நாயும் சேர்ந்து என்னைக் கண்ட இடத்தில கடிச்சிடுச்சு... நெத்தியில பாருங்களே... பிளாஸ்திரி... அதுக இஷ்டத்துக்கு ஓடுங்கன்னு விட்டிட்டு... இப்ப ஆஸ்பத்திரியில படுத்து கிடக்கேன்...!

    த.ம. 1



    ReplyDelete
    Replies
    1. சாய்ந்த கோபுரம் என்பதும் கவிதைத் தனமான சொல்லா தெரிகிறதே
      தலைவருக்கு எல்லா நேரமும் மயக்கம்தானே :)
      என் கண்ணுக்கு அழகு ,உன் கண்ணுக்கு கழுதையா தெரியுதா :)
      கஞ்சா செடியே வீட்டிலே வருமா :)
      காதலுக்கு தடை போட்டால் இப்படித்தான் ஆகும் :)

      Delete
  3. கஞ்சா ஜோக் நல்ல மெசேஜ்.

    ReplyDelete
    Replies
    1. மெசேஜ் சேர வேண்டியவங்களுக்கு போய் சேர்ந்தால் சரி :)

      Delete
  4. Replies
    1. குதிரை வால் பெண்ணையும்தானே:)

      Delete
  5. // ''கொஞ்ச வயசுலேயே போய் சேர்ந்துடுவாங்களே !''//

    ஹ...ஹ...ஹ...!!!

    ReplyDelete
    Replies
    1. கொஞ்ச வேண்டிய வயதில் தேவையா கஞ்சா :)

      Delete
  6. Replies
    1. சாய்ந்த கோபுரமும் அழகுதா)

      Delete
  7. சாய்ந்த கோபுரம், கஞ்சா ஹஹஹ்..

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. காலனுக்கும் அஞ்சாதவர்களா இந்த கஞ்சாவதிகள் :)

      Delete
  8. முதுமை பற்றிய இற்றை ரசித்தேன் மீதி எல்லாவற்றையும் கூடத்தான்

    ReplyDelete
  9. Replies
    1. coke o coke என்று சொல்லத்தான் மனசு வரவில்லை இப்போ :)

      Delete
  10. இதிலிருந்து என்ன தெரியது சாதி, மத பேதம் பார்க்கும் மனிதர்கள் காதலைவிட உயர்ந்தது என்று தெரிகிறது..

    ReplyDelete
    Replies
    1. அத்தகைய காதல் யாருக்கு வந்தாலும் வரவேற்கலாமே :)

      Delete
  11. அனைத்தும் ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. கொடுத்து வச்ச நாயையும்தானே :

      Delete
  12. ரசித்தேன் ஜி...
    நாய் கூட்டிக்கிட்டுப் போற அந்த பெண்ணையும்....

    ReplyDelete
    Replies
    1. நாயைக் கூட்டிப் போற பெண்ணையும் என்று சொல்லுங்க :)

      Delete
  13. பிரிக்கமுடியாததுபகவானும்ஜோக்கும்

    ReplyDelete
    Replies
    1. அது மட்டுமா ,உங்கள் வலையுலக நட்பும் :)

      Delete
  14. முற்றும் இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. முடிவிலே உள்ள படத்தை நானும் முழுமையாய் ரசித்து போட்டேன் அய்யா :)

      Delete