22 January 2017

வளைகாப்பு சரி, ஏழாம் மாசமே பிரசவமுமா :)

ஆஹா , எவ்வளவு நல்ல மருமகள் :)
        ''என் அம்மா இனிமேல் மௌன விரதம் இருக்கக் கூடாதுன்னு சொல்றீயே ,ஏன் ? ''
         ''சண்டைப் போடாம எனக்கு போரடிக்குதுங்க ,அதுக்குப் பதிலா உண்ணாவிரதம் இருக்கச் சொல்லுங்க !''

எப்படி வந்தது இந்த  ஞானோதயம் :)                    
             ''அந்த ஆட்டோ டிரைவர் இலவச சேவை செய்து அலுத்துப் போன மாதிரி இருக்காரா ,ஏன் ?''
             ''(தலைப் )பிரசவத்துக்கு மட்டும் இலவசம்னு  மாற்றி எழுதியிருக்காரே !''

உமையொரு பாகனை மறக்க முடியலே :)           ,
             '' பழைய கதையை உல்டா பண்ற டைரக்டர்  ,இப்ப டைட்டிலைக் கூட உல்டா பண்ணியிருக்காரா ,எப்படி?''
                ''நானொரு பாகன்னுதான் !''

சேலை எடுக்கப்  புருஷனைக்  கூட்டிட்டுப் போகலாமா :)
                 ''சேலை எடுக்கணும்னு கடைக்கு வந்தா ,ஒரே ரோதனையா இருக்குன்னு ஏன் சலிச்சுக்கிறே?''
                 ''நான் டிசைனைப்  பார்க்கிற முன்னாடியே நீங்க விலையைப் பார்க்கிறீங்களே !''

 வளைகாப்பு சரி, ஏழாம் மாசமே பிரசவமுமா :)
               ''அவர்தான்  , பொண்ணுக்கு பதினாறு வயசுலேயே கல்யாணத்தை வைச்சுட்டாரே ,இதுவே லேட்னு ஏன் சொல்றீங்க ?''
                 ''இன்னும் மூணு மாசத்திலே அது தாயாகப்போவுதே !''

ஒரே  கல்லில் இரண்டு மாங்காய் :)
    ' திரட் மில்' மிஷினில் ஏறி 
    கையை ,காலை ஆட்டி பயிற்சி செய்பவர்கள் ...
    நெசவு மிஷினை வாங்கி நெய்தாலாவது 
    பருமனும்.குறையும் ,கைத்தறிப் புரட்சியும் ஏற்படும் !

24 comments:

  1. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!
    ஒரு வழிகாட்டலாக அமையுமே

    ReplyDelete
    Replies
    1. அதிகம் வேண்டாம் ,ஒரு நாளைக்கு ஒரு மீட்டர் துணி நெய்தால் கூட போதுமே :)

      Delete
  2. கைத்தறி : உடல் + மனம் என அனைத்திற்கும் பயிற்சி...

    ReplyDelete
    Replies
    1. தியானம் கூடத் தேவையில்லை தானே ஜி :)

      Delete
  3. அதுக்குப் பதிலா என் அம்மா சாகனுமுன்னு சொல்ல வேண்டியதுதானே...!

    ‘தலையான பிரசவத்துக்கு...’ என்று எழுதச் சொன்னதற்கு தவறுதலா எழுதிட்டாரு...!

    ‘நீயொரு முட்டாளுங்க...!’

    காசேதான் கடவுளப்பா...!

    பதினாறு வயதினிலே... பதினேழு பிள்ளையம்மா... தாலாட்டு பாடுகிறேன் தாயாகவில்லையம்மா!

    நெசவு நெய்துதான் முழுஆடை அணிய வேண்டும் என்று விரதமா...?!

    த.ம. 3





    ReplyDelete
    Replies
    1. எல்லாம் நேரடியா சொன்னாதான்புரியுமா :)

      ஒரே பொம்பளை எட்டு பிள்ளைப் பெற்றால் வேற வழி:)

      இப்படி மட்டும்தான் தலைப்பு வைக்கலே :)

      மனைவிக்குப் புரிய மாட்டேங்குதே :)

      உண்மையிலே தாயாகவில்லைதானே:)

      காந்திய பொருளாதார தற்சார்பு நிலை என்பது சரிதானே :)

      Delete
  4. Replies
    1. மூணு மாசத்திலே தாயாகப்போறது ,நல்லாவா இருக்கு :)

      Delete
  5. சமைக்காம இருக்கவும் போரடிக்குமே!

    ReplyDelete
    Replies
    1. அது மட்டும் விதிவிலக்கு :)

      Delete
  6. இணைய உலகில் சிம்பு என்ற பட்டத்தை உங்களுக்கு வழங்குகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. பொற்கிழியோடு கொடுத்தாலும் இந்த பட்டம் வேண்டவே வேண்டாம் ,வம்பு என்றுதான் காதில் கேட்கிறது :)

      Delete
  7. //வளைகாப்பு சரி, ஏழாம் மாசமே பிரசவமுமா :)//

    கட்டிகிட்டவர் ரொம்பத்தான் அப்பாவியோ!

    ReplyDelete
    Replies
    1. சிசுவை DNA சோதனை செய்து பார்த்திட வேண்டியிருக்குமோ:)

      Delete
  8. Replies
    1. காலோட்ட மெஷினை விட கை நெசவு நிஜம்தானே :)

      Delete
  9. விலை தானே முக்கியம், பிடித்த பொழுதுபோக்கு சண்டை போடுவது :)...

    ReplyDelete
    Replies
    1. புருசனுக்கு விலை ,மனைவிக்கு ?
      மாமியார் இல்லேன்னா கணவனுடன் சண்டை போடுவாரோ :)

      Delete
  10. உண்ணாவிரதம் இருந்தால் சண்டைபோட சக்தி வேண்டாமா
    ஒருவேளை இலவச சேவையே அதிகரித்திருக்கும்
    மாதொரு பாகன் என்று இருந்திருக்க வேண்டுமோ
    அவரவர் கவலை அவரவருக்கு
    எத்தனையாவது மாதம் திருமணம் நடந்தது ஏழாம் மாதத்தில் பிறந்த குழந்தைகள் ஹைபர் ஆக்டிவாக இருப்பாரகளாம்
    நெசவு மெஷினில் கையையும் காலையும் ஆட்டினால் துணி நெய்ய முடியுமா


    ReplyDelete
    Replies
    1. பகைவனுக்கு அருள்வாய் நெஞ்சேன்னு மருமகளிடம் யார் சொல்வது :)
      எட்டு பிள்ளை பெற்றபின்னும் எட்டு மாசமான்னு பாட வேண்டியதா போச்சாம் :)
      ஆஹா ,இதுவும் நல்லாயிருக்கே :)
      இருந்தாலும் புரியாத மாதிரி நடிக்கலாமா :)
      இங்பெட்டரில் நீண்ட நாள் வளர்ந்தால் அபூர்வ சக்தி வந்திடுமா :)
      பிடிக்க வேண்டியதை பிடித்து ,மிதிக்க வேண்டியதை மிதித்தால் துணியும் சாத்தியமே :)

      Delete
  11. அனைத்தும் அருமை ஐயா.விலைவாசி ஏற்றத்தின் விளைவு தானு நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. விலைவாசி கூடினாலும் முடிந்த உதவியைச் செய்கிறாரே ,சந்தோசப் படலாம் :)

      Delete
  12. ஒரேகல்லில்நன்கு

    ReplyDelete
    Replies
    1. நேற்றே கல்லெறிய வருவீர்கள் என நினைத்தேன் :)

      Delete