23 January 2017

புரிய வைக்கத் தெரிந்த புண்ணியவதி :)

பீட்டாவைத் தடை செய் ,அடுத்து :)
             ''அடுத்த போராட்டக் கோஷம் என்ன ?''
             ''பீடாவைத்  தடை  செய் !'' 

புதுசா எந்த மாற்றமும் செய்யலே ,ஆனால் ....:)                                     
               ''அந்த கரும்பு ஆலையில் ,சீனி  உற்பத்தி இந்த வருஷம் இரண்டு மடங்காமே ,என்ன காரணம் ?''
               ''புதுசா பொறுப்பேற்ற சின்ன முதலாளியின் பிழிதிறன் தான் !''

செத்தவன் வாயில் தீர்த்தம் பட்டால் சொர்க்கமாமே :)
                ''அந்த டாக்டரோட திறமை  ,பக்கத்து  பெட்டிக்கடைக் காரருக்கும் தெரிஞ்சுருக்கா ,எப்படி ?''  
                '' கோவில் வாசலில்  விற்பதை விட , இந்த கிளினிக் பக்கத்திலே  காசித் தீர்த்த சொம்பு  நல்லா விற்பனை ஆகிறதாம்  !''                     

புருஷனுக்கு புரிய வைக்கத் தெரிந்த புண்ணியவதி :)
            ''அம்மா , நடிகர் நாகேஸ்வரராவ் காலமாயிட்டார்னு  அப்பாகிட்டே சொன்னா ,அவரை  ஞாபகம் இல்லேன்னு  சொல்றார்மா !''
            ''அமலாவோட மாமனார்னு  சொல்லு ,கண்ணீரே வடிப்பாரு !''

ஆம்லேட் தின்னும் ஆசையே போச்சு :)
             ''ஏம்பா சர்வர் ,ஆம்லேட் உடனே  கிடைக்காதா ?''
            ''ஆம்  'லேட் ' டாகும்  சார் !

வலி ஒன்றுதான் !பெயர்தான் வேறு வேறு :)
              HEADACHE என ஆபீஸில் லீவ்
              சொல்ல   நினைத்தபோது ...
              செல் அழைத்தது ..
             'மண்டைக் குத்து வலி ,வேலைக்கு வர முடியாது '
              ஒலித்தது  வேலைக்காரியின்  குரல் !


22 comments:

  1. தொடரும் பிழிதிறன்
    பணியாளருக்கு வலி!

    ReplyDelete
    Replies
    1. இந்த வலி தொடர்ந்தால் தொழில் உறவு பாதிக்கும் என்று சின்ன முதலாளி உணர்ந்தால் நல்லது :)

      Delete
  2. Replies
    1. சுற்றுப் புற சுகாதாரத்தைப் பாதுகாக்க பீடா தடை தேவைதானே :)

      Delete
  3. சர்தா(ர்) பீடாவைத் தடை செய்!

    கருப்பு ஆலையில் விழி பிதுங்கி நிற்கிறார்கள்...!

    அவ்வளவு தண்ணீர் கஷ்டமா...?!

    அமலா பால் வடியும் முகம்...!

    முட்டை ‘லேட்’ ஆனாத்தானே ஆம்லேட்...!

    உள் குத்து வேலை ஆரம்பம்...!

    த.ம. 2





    ReplyDelete
    Replies
    1. சாதா பீடாவோ ,சர்தார் பீடாவோ தடை அவசியம் :)

      இது விரைவில் முடிவுக்கு வருவது நல்லது:)

      சொம்புத் தண்ணி மேல் அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை :)

      இந்த பால் வடியும் முகம்தானே பலரை ஜொள் வடிய வைத்தது :)

      ரொம்பவும் லேட் ஆயிடாம பார்த்துக்குங்க :)

      இரட்டைத் தலைவலி ஆயிடிச்சே :)

      Delete
  4. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. கண்ணீரே வடிப்பாரு ,சரிதானே ஜி :)

      Delete
  5. Replies
    1. படத்தில் உள்ள பெண்ணுக்கு உண்மையிலேயே தலைவலியா இருக்குமா ஜி :)

      Delete
  6. பீடா ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப அவசரம் ,பீடாக் கறை படியாத பொது இடம் ஏதாவது உண்டா :)

      Delete
  7. வழக்கம்போல அனைத்தையும் ரசித்தேன். காசிச்சொம்பை சற்றே அதிகமாக.

    ReplyDelete
    Replies
    1. அந்த பெட்டிக்கடை மேல் கோபமாவே இருக்காராமே,அந்த டாக்டர் :)

      Delete
  8. //HEADACHE என ஆபீஸில் லீவ்.....//

    அருமையான 10 செகண்டு கதை. விகடனுக்கு அனுப்புங்க பகவான்ஜி.

    ReplyDelete
    Replies
    1. அனுப்பிட்டு ,காத்திருக்க நேரம்,பொறுமை இல்லாமல் போய்விட்டதே :)

      Delete
  9. போட்டோவில் உள்ள பெண்ணின் ரியாக்சன் நன்றாக உள்ளது தானே :)

    ReplyDelete
  10. பேசாமல் பேட்டாவுக்கு மாற்றாக ஒரு pets வந்தால் தேவலை அனிமல்ஸ் என்று இருக்கும் இடத்தில் சீனியர்ஸ் என்று இருக்கவேண்டும்
    இதுவரை பிழியாமலே சக்கை ஆக்கினார்கள்
    சாகிறவன் வாயில் என்று இருந்திருக்க வேண்டுமோ
    அமலா யார் அமலா பாலா
    பெயரிலேயே தெரிகிறதே லேட் என்று
    கூடவே படமுமா

    ReplyDelete
    Replies
    1. petaவே தேவையில்லை ,ஏற்கனவே உள்ளதே போதும் :)
      பிழிந்தார்கள் சரி ,அதற்கேற்ற உயர்வைத் தரவில்லையே :)
      அனுப்பிவைக்கும் வழிகளில் இதுவும் ஒன்றா :)
      உங்க காலத்து மிஸ் கமலா மாதிரி இவர்கள் :)
      அதுக்காக ஒரு அளவு வேண்டாமா :)
      படம் அருமைதானே :)

      Delete
  11. தலைவலி,ஒரே நேரத்தில் இருவருக்கு வரக் கூடாதுதானே :)

    ReplyDelete
  12. ரசித்தேன்....நான் கூட "பீடா" போட்டிருக்கேன்...வந்து பாருங்க‌
    http://psdprasad-tamil.blogspot.com/2017/01/jokes-38.html

    ReplyDelete
    Replies
    1. சேட்டுக்கடை பீடா சூப்பர் ஜி :)

      Delete