24 January 2017

மனைவியிடம் சாப்பாடு என்றாலும் 'சாப்டா 'தான் கேட்கணுமோ :)

 நம்மாளு ,ரொம்ப ராசியான ஆளுதான் :)                    
              ''என் நல்ல நேரம் ,குறுக்கே வந்த பூனை திரும்பி போயிருச்சு !''
              ''அதுசரி ,உன்னைப் பார்த்ததும் நேரம் சரியில்லேன்னு போயிருக்கும் !''

கிளினிக் போறவரைக்கும் இருக்க முடியாதவன் :)
               ''பரவாயில்லையே ,உங்க பையன்  கூப்பிட்ட உடனே   ஓடி வர்றானே !''
              ''சும்மாவா , கால் டாக்சியில் பிறந்தவனாச்சே!''
                                                    
மனைவியிடம் சாப்பாடு என்றாலும்  'சாப்டா 'தான் கேட்கணுமோ :)
               ''நான் இங்க கால்மணி நேரமா டைனிங் டேபிள்லே காத்துக்கிடக்கேன் ,நீ எங்கே போய் தொலைஞ்சே ?''
               ''பசியெடுத்தா கத்த ஆரம்பிச்சுடும்னு நம்ம நாய்க்கு சோறு வைக்கப் போனேங்க !''

இப்படி எத்தனை பேருடா கிளம்பி இருக்கீங்க :)
           ''பெட்ரோல் போடுற இடத்திலே  டிரைவர் கூட என்ன தகராறு ?''
            ''நீ போட்டது பிரீமியம் பெட்ரோல்தானே ,காசையும் நான் ஆறு பிரீமியமாத்தான் தருவேன்னு வம்பு பண்றார் சார் !''

சுயநலமே உலகமாகி விட்டதா :)
     சிலுவைகள் ஆயிரம் செய்தோம் ...
     சுமப்பதற்கு  யாரும்  தயாராய் இல்லை ! 

29 comments:

  1. அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது பகிர்விற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நம்மால் சிலுவை சுமக்க முடியுமா ஜி ?பூரிக்கட்டை அடி வாங்கியே நொந்துக் கிடக்கோமே:)

      Delete
  2. நல்ல வேளை பூனை கடிக்காம போயிடுச்சே...!

    வருங்காலத்தில்... ஒருக்கால் டாக்சி டிரைவர் ஆனாலும் ஆகலாம்...!

    குரைக்கிற நாய் கடிக்காதுங்கிறது தெரியாதா...?! நான் அப்புறம் வெறியாயிடுவேன்...!

    வண்டி வாங்கினா பெட்ரோல் இலவசமுன்னு சொன்னாங்களே...!

    பாரச் சிலுவை செய்வதைவிட... பறக்க சிறகு செய்ய வேண்டியதுதானே...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை ,கெட்ட நேரத்திலும் அவருக்கு நல்ல நேரம் :)

      ஏன் ,இன்சுரன்ஸ் ஏஜண்ட்கூட ஆகலாமே :)

      இந்த நாய்கிட்டே பேச்சு வாங்கிறதுக்கு அந்த நாய்கிட்டே கடி வாங்க முடியுமா :)

      வாங்கின இடத்தில் அல்லவா இதைக் கேட்கணும் :)

      சிறகு செய்யலாம் ,பறக்க யாருக்குத் தெரியும் :)

      Delete
  3. // கால் டாக்சியில் பிறந்தவனாச்சே //

    ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. கால் டாக்ஸி வேகம் அதிகம்தானே ஜி :)

      Delete
  4. நம்மைப் பார்த்தால் பூனை கூட மிரளுது! ஹா.... ஹா.... ஹா...

    நாயாக்கிட்டாங்களே...!!!

    ReplyDelete
    Replies
    1. பூனை இப்படியும் நினைக்கக் கூடும்தானே :)

      நல்லவேளை,நாய்த் தட்டிலே சோறு வைக்காம போனாங்களே :)

      Delete
  5. கால் டாக்ஸி ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. டோர் டெலிவரி மாதிரி இவன் டாக்ஸி டெலிவரி :)

      Delete
  6. அனைத்தும் ரசித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. ஒரே நேரத்தில் இரண்டு நாய் கத்தினா இல்லாள்தான் என்ன செய்ய முடியும் ஜி :)

      Delete
  7. //சிலுவைகள் ஆயிரம் செய்தோம் ...
    சுமப்பதற்கு யாரும் தயாராய் இல்லை !//

    சிலுவையைச் செய்தவர்களும் சுமக்கத் தயாராய் இல்லை!!!

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் அவரவர் சிலுவையை அவரவரே செதுக்கிக் கொள்கிறார்களே :)

      Delete
  8. Replies
    1. எலி பிடிக்கப் போற பூனை எதிரே வந்தால் சகுனம் சரியில்லை என்பது சரியில்லைதானே :)

      Delete
  9. சூப்பர் சார் சாப்டாத்தான் கேக்கணும்

    ReplyDelete
    Replies
    1. இல்லைன்னா இந்த மரியாதைதானா :)

      Delete
  10. பூனை மிரளுது...!! ஹஹஹ்

    ப்ரீமியம் ரசித்தோம்...சாப்பாடு ...ம்ம்ம்

    பின்ன என்ன ஜி சாஃப்டா கேட்டாத்தான் கிடைக்கும் ஜி ஜோக்காளியின் அனுபவம் ஹிஹிஹிஹ்

    அனைத்தும் ரசித்தோம்

    ReplyDelete
    Replies
    1. சொந்த அனுபவமா ,என் வீட்டிலேதான் நாயே இல்லையே :)

      Delete
  11. பூனைக்கும் நல்ல நேரம் போல
    கூப்பிட குரலுக்கு வருபவன் ஒருவேளை அந்தக் கடவுளோ
    பேசாமல் நாயாய்ப் பிறந்திருக்கலாம்
    பெட்ரோல் போடுவது பெண்ணா வம்பு பண்ணத்தோன்றுமா
    சிலுவை சுமக்க கிருஸ்துவாக வேண்டுமோ

    ReplyDelete
    Replies
    1. ஆறறிவுக்கு மட்டும்தானா சகுனம் எல்லாம் :)
      எந்த கடவுள் எப்போ வந்தாரோ :)
      நாயின்னா பேச முடியாதுதான் :)
      அப்படியும் இருக்குமோ :)
      சரித்திரத்தில் எது இன்னொரு கிறிஸ்து :)

      Delete
  12. பூனை சகுனம் பார்த்தது சரிதானே :)

    ReplyDelete
  13. நாட்டு நடப்பை பார்த்தால் நாலுகால் நாயைவிட ரெண்டுகால் நாயை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகிறது...

    ReplyDelete
    Replies
    1. நாய்ப் பாசம்னு சொல்றது ,இதைத்தானா :)

      Delete
  14. சாப்பாடு வேணுமின்னா சாப்டாதான் கேட்கணும்...இல்லே...சோத்துல நாலுகல் உப்பு தூக்கலாயிடும்ல

    ReplyDelete
    Replies
    1. அப்படியாவது ரோசம் வருதான்னு பார்க்கிறாங்களோ:)

      Delete
  15. ''சும்மாவா , கால் டாக்சியில் பிறந்தவனாச்சே!'' ____ அருமை
    ஆம் பாதிக்கும் மேல சுயநலம்தான் உலகம்.
    தமிழ் மணம் 11
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. நம்மைப் போல் நாலவர்களும் இருக்கும் உலகமென்று மனதைத் தேற்றிக் கொள்ளவேண்டியதுதான் :)

      Delete