6 January 2017

ஃபாஸ்ட் ஃபுட் ஏழைகள் உணவா :)

ஃபாஸ்ட் ஃபுட் ஏழைகள்  உணவா :)
             ''நின்னுகிட்டு  ஃபாஸ்ட் ஃபுட்  சாப்பிட்டா ,உங்க தாத்தாவுக்குப்  பிடிக்காதா ,ஏன் ?''
             ''அவர் ,ஏழு தலைமுறை 'உட்கார்ந்து' சாப்பிடும்  அளவுக்கு சொத்தை வச்சிருக்காரே !''
வீடு பிடிக்காட்டி இப்படியுமா சொல்றது :)         
            ''நீங்க சொல்ற வாடகையிலே  இந்த  வீடுதான் கிடைக்கும்  ,உங்களுக்கு  பிடிக்குதா?''
            ''வீடா இது? பேசாம to let க்கு   பதிலா  toilet  னு போர்டுலே எழுதச் சொல்லுங்க !''   

இது கிட்ட பார்வையா ,கெட்ட பார்வையா :)
            ''டெஸ்ட் எதுவும் பண்ணாமலே எனக்கு கிட்டப் பார்வை நல்லா இருக்குன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க  டாக்டர் ?''
            ''நர்ஸ் போற பக்கமெல்லாம்  உங்க பார்வை போறதை வைச்சுத்தான்!'' 

போதையில் மிதக்கலாம் (?) தியானத்தில் மிதக்க முடியுமா :)
              ''இன்ஸ்பெக்டர் சார் , என் வீட்டுக்காரரை காணலேன்னு மனு கொடுத்தா ஏன் வாங்க மறுக்கிறீங்க ?''
              ''மொட்டை மாடியில் தியானம் பண்ணிக்கிட்டு இருந்தவர் ,அந்தரத்தில் பறந்து  போனதாச்  சொல்றீங்களே !''

செத்த பிறகாவது நிம்மதியா இருக்க விடுங்க:)
             ''தற்கொலைப் பண்ணிகிட்ட  சாந்தியோட  புருசன் லெட்டர்லே என்ன எழுதி இருக்கிறார் ?''
             ''என் ஆத்மாகூட  சாந்தி அடையணும்னு  யாரும் வேண்டிக்காதீங்கன்னுதான் !''

போட்டோவில்,மனைவிக்கு பின் கணவன் ...:)
    தம்பதிகள் போட்டோவிற்கு 
    'டைட்டில் 'வைக்கும் போட்டி ...
     பரிசை வென்றது .. 
    'புயலுக்கு  பின் அமைதி '

19 comments:

  1. இரசித்தேன் ஜி

    ReplyDelete
    Replies
    1. எங்க பாட்டன் சொத்துன்னு சொல்லிக்கலாமா :)

      Delete
  2. Replies
    1. இதனாலாவது ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுவதைத் தவிர்ப்பானா பேரன் ;)

      Delete
  3. Replies
    1. வீடு பிடிக்காட்டி இப்படியுமா சொல்றது தப்புதானே :)

      Delete
  4. எங்க தாத்தா படுத்துக்கிட்டே பல்லாண்டு சாப்பிட்டு போய் சேர்ந்தவர்... பெரிய தாதா...!

    கழிசல்ல போறவன் ஒரு எழுத்த விட்டுட்டான்...! ‘ஐ’யா...!

    நர்ஸ் என்னோட பொண்டாட்டி... அவள வாட்ச் பண்றேன்...! நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க...! ஒழுங்கா பாருங்க...!

    சாரி... இன்ஸ்பெக்டர்... அந்தப்புரங்கிறதுக்குப் பதிலா... அந்தரத்திலன்னு அவசரத்தில சொல்லிட்டேன்...!

    சாந்தியோட புருசன் லெட்டர் பேடுல... சாந்தி பேடுன்னு எழுதி வச்சிருக்கார்...!

    ‘பூனையும் குட்டியும்...’ இந்த குட்டிய உசுப்பி விட்டுடாதிங்க...!

    த.ம. 3







    ReplyDelete
    Replies
    1. படுத்தே படுத்திஎடுத்தவர் எனலாமோ :)

      எழுத்துக் கூலியை இவர் குறைத்துக் கொடுத்ததால் வந்த வினை :)

      உங்க மேலே சந்தேகமா வருது :)

      சீக்கிரமே கண்டுபிடிச்சிடலாம் ,நம்ம கஸ்டடியில் தான் வருது அந்த ஏரியா :)

      வச்சதோட சரி ,அதை மறந்துட்டாரே :)

      புயலாய் கிளம்பி விடுமா :)

      Delete
  5. 1. ஹஹஹஹ....
    2. ம்ம்ம்ம் இப்படித்தான் இப்பல்லாம் வீடு....
    3. கிட்ட பார்வை நன்றாகத்தான் இருக்கும் போல ஜி...ஹிஹிஹி
    அனைத்து ம் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. தாத்தா சொத்தை , பேரன் எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம் தானே :)
      இருப்பவனுக்கு பங்களா ,இல்லாதவனுக்கு குருவிக் கூடா :)
      அதான் ,கண்ணுலே கொள்ளி வைக்கன்னு ஆசீர்வாதம் செய்றாங்களே :)

      Delete
  6. சில நேரங்களில் புதிதாகக் கற்பனை செய்ய முடிவதில்லை. நானும் முன்பே எழுதியவற்றை நாடுவேன்

    ReplyDelete
    Replies
    1. வர வர பிழைப்புக்கான நேரம் கூடுகிறது ,வலைப்பூக்கான நேரம் குறைகிறதே :)

      Delete
  7. வீடு பிடிக்காட்டி இப்படியுமா சொல்றது
    என்ற பதிவைப் படித்ததும்
    படிக்கிற பள்ளிக்கூட அகவையிலே
    தெரு வழியே தொங்கிக் கிடக்கிற
    To Let என்ற அட்டையிலே
    Toilet என்று எழுதிச் செல்வோம் - அதைக் கண்ட
    வகுப்பு ஆசிரியர் எனக்கு அடித்தை
    நினைவூட்டுகிறதே!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் அந்தச் சேட்டையை செய்தவர் தானா ?காலிங் பெல் அடித்து கடுப்படித்தது இல்லையா :)

      Delete
  8. ஃபாஸ்ட் ஃபுட் ஏழைகள் உணவுன்னு அப்படித்தான் ரர்கசியமா பேசிக்கிறாங்க....தலீவரே....

    ReplyDelete
    Replies
    1. அதையேன் ரகசியமா பேசிக்கணும் ?35 ரூபாய் சம்பாதித்தாலே ஏழைகள் அல்ல என்று அரசு சொல்வதாலா :)

      Delete
  9. Replies
    1. 'புயலுக்கு பின் அமைதி 'தலைப்பு சரிதானே :)

      Delete
    2. //''நர்ஸ் போற பக்கமெல்லாம் உங்க பார்வை போறதை வைச்சுத்தான்!''//

      நர்ஸை சைட் அடிச்சதுக்கும் ஃபீஸ் வாங்கிடுவாரே!!!

      Delete