27 January 2017

இளம் மனைவிக்கு இப்படியும் தொல்லைத் தரலாமா :)

திறமை வாய்ந்த  நமது காவல் துறை :)          
          ''நம்ம பிரதமர் 2020 க்குள் இந்தியாவில் குடிசையே  இருக்காதுன்னு சொல்றதை நம்ப முடியுதா ?''
           ''இவ்வளவு வருஷம் கூடத் தேவையில்லை ,நம்ம தமிழ் நாடு போலீஸ்கிட்டே பொறுப்பை ஒப்படைச்சிட்டா !''

நல்ல வேளை,உங்களை வெட்டாம விட்டானே :)                        
         ''திடீர்னு முருங்கைக் காய் வியாபாரத்தை நிறுத்திட்டீங்களே,ஏன் ?''
         ''பக்கத்து வீட்டுக்காரன் அவங்க மரத்தை வெட்டிட்டானே !''

 பையனுக்கு நூடுல்ஸ்னா  உயிரோ :)    
             ''உங்க  பையன் கவிஞராய் வருவான் போலிருக்கா ,எப்படிச்  சொல்றீங்க ?''
            ''பூக்களைப் பறிக்க கோடரி எதுக்குன்னு நான் பாடினா ,நூடுல்ஸ் உடைக்க சம்மட்டி எதுக்குன்னு  எதிர்ப் பாட்டு பாடுறானே !''

இளம் மனைவிக்கு இப்படியும்  தொல்லைத் தரலாமா :)
                ''ராத்திரிப்பூரா  என்னவர் தொல்லைத் தாங்க முடியலேடி !''
               ''இப்பத்தானே கல்யாணம் ஆகியிருக்கு ...அலுத்துக்கிறீயே ?''
               '' அட நீ வேற ...அவரோட குறட்டைச் சத்தத்தால் என்னாலே தூங்கவே முடியலேன்னு சொல்ல வந்தேன் !''

மயங்கிக் கிடந்தவன் முகத்தில் தண்ணீர் தெளித்தால் ....:)
             ''மயக்கமாகி எழுந்தவனை எல்லோரும் ஏன் அடிக்கிறாங்க ?''
            ''ஒரு சோடா வாங்கிக் கொடுக்கக்கூட ,உங்கள்ளே யாருக்கும் துப்பில்லையான்னு கேட்டானாம் !''

அவரவர் கஷ்டம் அவரவர்களுக்கு :)
ஒற்றுமையாய் இருந்த என்னைப் பிரித்து 
தலையிலே பலமாய்  அழுத்தி 
 குழியிலே  என்னைத் தள்ளி 
அகலக்கால்  வைக்க விடாமல் 
உள்புரமாய்  மடக்கி ...
 உன்   தேவையை  தீர்த்துக் கொண்டாயே ,
நான்படும்   கஷ்டம்  உனக்கு புரியாதா ?
எனக் கேட்ட 'ஸ்டாப்பிளர்  பின்னிடம் '
முதிர் இளைஞன்  சொன்னான் ...
வேலைக் கிடைக்கும் வரை  என் கஷ்டமே 
எனக்குப்  பெரிது !

22 comments:

  1. கருப்பு ஆட்டுக்குப் பேரு வெள்ளாடு.... கருப்பு ஆடுகள் மிகமிக அதிகமாத்தான் திரியுதுக...!

    பாக்கியராஜ் படம் புதிசா வந்தா அடுத்த காய் என்னான்னு பாத்து... காய நகர்த்துவோம்...!

    தப்புத் தப்பா பாடினா அரிவாளை எடுக்க வேண்டியதுதான்...!

    அவர் பாட்டுக்கு எசப்பாட்டு பாடவேண்டியதுதானே...!

    போதையில மயங்கிக் கிடந்தவனை எழுப்பி விட்டுட்டீங்க... குவாட்டர் வாங்கிக் கொடுங்கன்னு கேக்காம விட்டானே...!

    'ஸ்டாப்பிளர் பின்’னா...? நான்கூட பின்னாளில் மாதவிட்ட கோவலன் கேட்கிறானோ என்னமோன்னு நெனச்சேன்...?

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. இந்த கருப்பு ஆடுகள் கருவாடு ஆவது எப்போ :)

      இப்போ அவரோட பையன் காய் நகற்றும் காலமாகிப் போச்சே :)

      இனிமேலே பாடவே மாட்டான் ,போதுமா :)

      கர்ர்ருக்கு குர்ர்ர்ரா :)

      அதானே ,இந்த பாவம் சும்மா விடாதே :)

      கோவலனுக்கு கேட்கிறதுக்கு அருகதை ஏது:)

      Delete
  2. முதல் இரண்டு ஜோக்குகளையும் அதிகமாக ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. முருங்கை காய்ன்னா பிடிக்காமல் போகாதே :)

      Delete
  3. ஸ்டாப்பிளர் பின் = சூப்பர் ஜி...

    ReplyDelete
    Replies
    1. பின்னுக்கு வந்த சோதனை :)

      Delete
  4. பூக்களை ரசித்தேன் ஜி
    சம்மட்டியையும் ருசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. ரசிப்பதில் கவிஞனய்யா நீர் :)

      Delete
  5. இப்படித்தான் குடிசைகள் ஒழிக்கப்படுமா
    அடுத்தவன் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்பதுபோல் இருக்கிறது
    கில்லர்ஜீயை நினைத்தேன்
    அது தொல்லையா. அவர் பாட்டுக்குத் தேமேந்நு தூங்கறார்.
    மணவையார் பின்னூட்டம் ரசிக்க வைத்தது
    ஒரு ஸ்டாப்பிளர் பின்னின் வேதனை கவித்துவமாக

    ReplyDelete
    Replies
    1. வேகமா ஒழிக்கணும்னா வேற வழி :)
      இருந்தாலும் பெண்டாட்டிக்கு இவ்வளவு தாராள மனசு கூடாது :)
      கோடரி என்றாலே அவர் நினைப்புதானா :)
      அவர் தூங்கிறார் ,அடுத்தவர் தூக்கத்தைக் கெடுத்து :)
      என்னைவிட அதிகமாவே யோசிக்கிறார் ,அவருக்கு என் நன்றி :)
      கடைசி வரியில் ஒரு ட்விஸ்ட் ,சரிதானே :)

      Delete
  6. Super jokes, dear friend! Keep it up. இராய செல்லப்பா நியூஜெர்ஸி

    ReplyDelete
    Replies
    1. தொலைதூர உங்கள் வாழ்த்துக்கு நன்றி ஜி :)

      Delete
  7. Super jokes, dear friend! Keep it up. இராய செல்லப்பா நியூஜெர்ஸி

    ReplyDelete
    Replies
    1. நான் இணைய உலக சிம்புவாம் ,சூப்பர் ஜோக் தானே :)

      Delete
  8. நமக்கு தெரிந்தது..உலகம் சுற்றும் கிழவனுக்கு தெரியாமலா இருக்கும் தமிழ்நாடு போலீச பத்தி....

    ReplyDelete
    Replies
    1. அனைத்தும் யாம் அறிவோம் பராபரமே என்பாரோ :)

      Delete
  9. ஏடா கூடா தலைப்பு மூலம் சுண்டியிழுக்கும் உங்களுக்கு இணைய உலக சிம்பு என்ற பட்டத்தை பெருமையாக சூட்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சொம்பு என்பதை சிம்பு பரவாயில்லை போல் படுகிறது :)

      Delete
  10. Replies
    1. ஜோதிஜி சொன்னது போல் சுண்டியிளுக்குதா ஜி :)

      Delete
  11. // '' அட நீ வேற ...அவரோட குறட்டைச் சத்தத்தால்.....//

    இப்பத்தானே கல்யாணம் ஆச்சு. “விடியும்வரை கதை படிச்சான்”னு அல்லவா பாடியிருக்கணும்!!

    ReplyDelete
    Replies
    1. கதை படிக்காமல், தூங்கி குறட்டை வேறா,சீக்கிரமே டைவர்ஸ் ஆகிடும் :)

      Delete