17 January 2017

சிக்னல் கொடுத்தாலும் தப்பா :)

சீனா  அன்றும் ,இன்றும் :)
               ''சீனப் பெருஞ்சுவர் கட்டியவர்கள்  சீனர்கள்தான் என்பதை  ஏன் நம்ப முடியலே ?''
               '' Anything made in China is No guarantee & No warrantee ன்னு சொல்றாங்களே !''

சீக்கிரம் கல்யாணமாக இதையும் நம்புவார்களா :)
              ''இப்போதெல்லாம் மணத்தக்காளி கீரைக்கு அதிக கிராக்கியா இருக்கே ,ஏன் ?''
               ''எவனோ ஒருத்தன், 'மண'த்தக்காளிக் கீரையை தினமும்  சாப்பிட்டா ,திருமணம் தள்ளிப் போகாதுன்னு ஆருடம் சொல்லி இருக்கானாமே!''

சிக்னல் கொடுத்தாலும் தப்பா :)          
                 ''பஸ்  விபத்து ஆனதுக்கு டிரைவர் ஆன ,நான்தான் காரணம்னு  எப்படிச் சொல்றீங்க ,பாட்டி  ?''
               ''வெளியே கையை நீட்டாதீர்கள் என்று எழுதிப் போட்டுட்டு ,நீங்களே கையை அடிக்கடி வெளியே நீட்டினதை நானும் கவனிச்சுக்கிட்டு தானே வந்தேன் !''

கணவன் மனைவியிடம் இப்படிச் சொன்னா என்னாகும் :)
            ''ஏனுங்க முதலாளி ,உங்களுக்கே இது நியாயமா ?மாட்டுப் பொங்கல் அன்னைக்கி போய் புது டிரஸ் கொடுக்கிறீங்களே ?''
              ''நீதானே மாடா  உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லிக்கிட்டு இருந்தே ?''

வடிவேலுவின் 'அவனா நீ ' இவருக்கும் பொருந்தும் :)
               ''இப்போதெல்லாம் தலைவர் 'நீயும் நானும் ஓரினம் 'னு  சொல்றதே இல்லையே ,ஏன் ?''
               ''ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம்னு  தீர்ப்பு வந்திருச்சே  !''

இதுவும் பெரியார் பிறந்த மண்ணில்தான் :)
வத்தலக்குண்டு  அருகில் உள்ள இரண்டு கோவில்களில் நடைபெற்று இருக்கும் வினோத நேர்த்திக்கடன் விழாவைப் பற்றி அறியும்போது ...
சிரிக்கத்தான் தோன்றுகிறது ...
நேர்த்திக்கடனாக கொண்டுவந்த லட்சம் வாழைப்பழங்களை படைத்து பூஜை செய்தபின் ...
கூட்டத்தை நோக்கி வானத்தில் சூறை
இட்டார்களாம் ...
அதை வாயால் கவ்வியும் ,கையால் பிடித்தும் பக்தர்கள் சாப்பிட்டார்களாம்...
பழம் சாப்பிட்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள் ...
அவர்களுக்கு சொர்க்கலோகத்தில்  நிச்சயம் இடம் கிடைக்குமென்று தோன்றுகிறது !
இதைவிட கொடுமை ...
இன்னொரு கோவிலில் ...
நேர்த்திக்கடனாய் வந்தது ...
3 அடி முதல் 1 9 அடி நீளமுள்ள அரிவாள்களாம்...
அதுவும் ஒன்றல்ல ,இரண்டல்ல ஐந்நூறாம்...
நல்ல வேளை ,இதை அவர்கள் சூறை விடவில்லை ...
இந்த அரிவாள்கள் எல்லாம் பூப்பறிக்க மட்டுமே பயன்படும் என்றே நம்பத் தோன்றுகிறது !
ஹும் ...இந்தியா செவ்வாய்க்கு ராக்கெட் விடுகிறதாம் !

17 comments:

  1. ‘அலிபாபாவும் திருடர்களும்’ நம்ம வாழ்க்கையே கேரண்டி இல்லை... அட என்னடா பொல்லாத வாழ்க்கை... இதுக்குப் போயி அலட்டிக்கலாமா...? நைனா சைனா புராடக்தான் வேணும்...!

    மணித்தக்காளிக் கீரை வாய்ப்புண், குடற்புண்ணைக் குணமாக்கும்... திருமண வாய்ப்புமா...? இதச் சொல்லலையே...!பொண்ணு குளிக்கிறது தள்ளிப் போகுதாம்...!

    நா கை காட்டுனத நீங்க கவனிச்சு என்ன பண்றது... எதித்து வந்தவன் கவனிக்கலையே...!

    மாடு கன்னு போட்டிடுச்சு மொதலாளி... பாத்து போட்டுக் கொடுங்க...!

    நம்ம சேர்க்கை... இனத்தையும் தாண்டி புனிதமானது...!

    இந்தியா செவ்வாய்க்கு ராக்கெட் விடுவதுன்னா... நீங்க என்ன நெனச்சீங்க...! அய்யோ... அய்யோ...!

    த.ம. 1




    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு நன்றி :)

      Delete
  2. வத்தலக்குண்டு அருகில்
    வாழைப்பழம் கவ்வும் போட்டியா
    பூப்பறிக்க வாள் கண்காட்சியா
    அருமையான நிகழ்வுகள்

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு நன்றி :)

      Delete
  3. சீனத்து ஜோக் உள்ளிட்ட அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு நன்றி :)

      Delete
  4. Replies
    1. உங்களின் கருத்துக்கு நன்றி :)

      Delete
  5. நேர்த்திக்கடன் வினோதம் தான்...!

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு நன்றி :)

      Delete
  6. அரிவாள் பூப்பறிக்கவா ?

    ReplyDelete
  7. நல்ல பதிவு க்கு மிக நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு நன்றி :)

      Delete
  8. அந்தச் சீனச்சுவர் இப்போதையவர்களால் கட்டப்படவில்லையே
    இப்படியும் ஒரு வியாபார தந்திரம்
    கரம் சிரம் புறம் நீட்டக்கூடாது என்று எழுதி இருந்துமா
    மாடா உழைத்துக் கரடியாய்க் கத்தினால் மீனாய்ப் போடுவாரோ
    இனம் இனத்தோடுதான் சேர வேண்டும் அல்லவா
    நம்பிக்கைதான் பிரதானம் என்று ஒரு குழு சொல்லுமே


    ReplyDelete
  9. அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் கருத்துக்கு நன்றி :)

      Delete
  10. உங்களின் கருத்துக்கு நன்றி :)

    ReplyDelete