13 January 2017

அந்த 'அந்தரங்கம் ' இல்லை இது :)

அப்பனின் கோபம் நியாயம்தானே :)
         ''இப்படி கோபம் வரும் அளவுக்கு, பையன் என்ன செய்தான் ?''
     
          ''இந்த கண்கள் படம் இருந்த இடத்தில்  
இந்த கண்கள் படத்தை  ஒட்டி இருக்கானே!''

அதிகாலை  தூக்கம் அதிக சுகம்தானே :)             
            ''என்னங்க ...இன்று மாசப் பிறப்புன்னு நீங்களாவது சொல்லக்கூடாதா?காலையில் ,வாசலில்  தண்ணி தெளிச்சி ,கோலம் போட்டிருப்பேனே , ?''
           ''நல்ல நாளும் அதுவுமா தூங்கக் கூடாதுன்னு ,முதல்லே என் மூஞ்சியிலே தண்ணி தெளிப்பே  ,அதான் சொல்லலே  ?''

அந்த 'அந்தரங்கம் ' இல்லை இது  :)
             ''நானோ நடிகை ,நீங்களோ தொழில் அதிபர் ...புதுமையா நம்ம கல்யாணத்தை ஏன் விமானத்தில் வச்சுக்கக் கூடாது ?''
            ''ஆரம்பமே அந்தரத்திலான்னு  யோசனையா இருக்கு !''

இவன் லாயரானால், காதலிகூட மனைவி ஆகமாட்டாள் :)
           ''என் பையன் எதிர்காலத்தில்  லாயரா வருவான்னு எப்படி சொல்றீங்க ?''
             '1 9 3 2 ல் பிறந்தவருக்கு இப்போ என்ன வயசு இருக்கும்னு கேட்டா ...அவர் உயிரோட இருக்காரா ,இல்லையான்னு கேட்கிறானே !'' 

சீனப்பெருங் 'சுவரில்' முட்டிக்கணும் போல இருக்கு :)
         ''நிலவில் இருந்து பார்த்தாலும் சீனப்பெருங்சுவர் தெரியுதாமே!''
           ''இதிலே என்ன அதிசயம்,சீனப்பெருஞ்சுவரில் இருந்துப் பார்த்தாலும் நிலா தெரியுமே ?''

பெட் காபி ரொம்ப பேட் , பெட் வாட்டர் தான் பெஸ்ட் :)
      அதிகாலை உமிழ்நீர் இரைப்பைக்கு நல்லது !
      வெறும் வயிற்றில் தண்ணீர்  பருகுதல்  நல்லது !
      மாறா இளமைக்கு இயற்கை மருத்துவமே  நல்லது !
       நமக்கெது  நல்லது என்று நாமே உணர்வது நல்லது !

17 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    தம பட்டை காணோம்!

    ReplyDelete
    Replies
    1. தம வரும் போகும் ,துன்பத்தைப் போல :)

      Delete
  2. // நமக்கெது நல்லது என்று நாமே உணர்வது நல்லது // அருமை ஜி....

    ReplyDelete
    Replies
    1. இப்படி உணர்ந்தால் ஞானி என்றும் சொல்லலாமா ஜி :)

      Delete
  3. ‘நான் கடவுள்’ அதே கண்கள்...!

    மாசம்ன்னு ஒன்னு இருந்தா... பிறந்துதானே ஆகனும்...!

    கொஞ்ச நாளாவது உயிரோட வாழனுமுன்னு நெனக்கிறேன்...!

    சபாஷ்... சரியான கேள்வி...!

    நிலவே... என்னிடம் நெருங்காதே... நீ நெருங்கும் இடத்தில் நானில்லை...!

    வெறும் வயிற்றில் தண்ணீ குடிப்பது நல்லது என்று நினைத்தாலும் கடை மதியம்தானே திறக்கிறார்கள்...!

    த.ம. +1





    ReplyDelete
    Replies
    1. எல்லோருக்கும் பிடித்த கண்கள் எதுவென்று தெரியவில்லை :)

      பத்து மாசத்துக்கு ஒண்ணு பிறக்கிற maaமாதிரியா :)

      கவலையே படாதீங்க ,மொத்தமா தூக்க மாத்திரை சாப்பிடும் நிலைவராது :)

      குறுக்கு விசாரணை பண்ணியே மடக்கிடுவான் போலிருக்கே :)

      பிரபஞ்சம் ரொம்ப பெருசுன்னு சொல்ல வர்றீங்களா :)

      முதல் நாள்லே வாங்கி வைத்துக் கொள்ளவேண்டியது தானே :)

      Delete
  4. நல்லவேளை இவை யாருடைய கண்கள் என்று கேட்கவில்லை
    வெறும் தண்ணி தெளிப்பு மட்டும்தானா கோலம் போன்றவை இல்லையா
    முடிவு அந்தரத்தில் போகலாம் என்று சொல்லாமல் சொல்கிறாரோ
    யுரேகா
    பல்துலக்கிக் காப்பி சாப்பிடலாம் அல்லவா

    ReplyDelete
    Replies
    1. பயபிள்ளைக்குத் தெரியாமலா இருக்கும் :)
      அப்புறம் அலங்கோலம் ஆயிடுமே :)
      உத்தரத்தை தேடவேண்டியும் வரலாம் :)
      இந்த பெயரில் இன்னும் ஏன் எந்த நடிகையும் வரவில்லை :)
      துலக்காமலும் சாப்பிடலாம் யார் தடுக்கப் போகிறார்கள் :)

      Delete
  5. Replies
    1. முதல் ஜோடிக் கண்களை மட்டும்தானே :)

      Delete
  6. உங்களின் மௌன வாக்கை உங்களின் ரசனைக்கு சாட்சியாய் எடுத்துக் கொள்கிறேன் :)

    ReplyDelete
  7. அருமையான விருந்து

    ReplyDelete
    Replies
    1. மூன்று நாட்களுக்கும் மேலும், தொடர்ந்து வரும் விருந்து இது :)

      Delete
  8. ஆகா...ஆரம்பமே...நல்ல யோசனையா இருக்கிறதே....

    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா நீங்களும் கூட நம்மாளுதான் :)

      Delete