11 January 2017

' தண்ணி வண்டி' லீவு கேட்டால் இப்படியா :)

         ''மேனேஜர் சார், பொய்யானக் காரணத்துக்கு  லீவு தர மாட்டேன்னு  சொல்றீங்க சரி  , எனக்கு ஏன்  தர மறுக்குறீங்க   ?''
          ''ஊருக்கு போய் இருக்கிற பெண்டாட்டியைக் கூட்டி வரப்போறேன்னு கேட்குறீங்களே  !''

மக்கு பயபுள்ளே கூட மார்க் வாங்கும் தந்திரம் :)
          ''பரவாயில்லையே , அந்த ஸ்கூல்லே இதுவரை யாருமே ஜீரோ மார்க் வாங்கியதில்லையாமே !''
         ''அட நீங்க வேற , கேள்விகளை  அழகா எழுதியிருந்தாலே...குட் ஹாண்ட்ரைட்டிங்னு  போனஸ் மார்க்கை போட்டுடுவாங்களாம் !''

ஆத்தீ...ஆத்திச் சூடியை இப்படியா புரிஞ்சுக்கிறது ?
            ''என்னடா சொல்றே .ஔவையார்  ரெண்டு பேருக்கு ரெண்டு விதமா அட்வைஸ்  சொல்லி இருக்காங்களா ?''
            ''ஏற்பது இகழ்ச்சின்னு பிச்சைக்காரனுக்கும் ,ஐயமிட்டு உண்னு  பணக்காரனுக்கும் சொல்லி இருக்காரே  !''

எள்ளுன்னா எண்ணையாய் நிற்கும் அடியாட்கள் :)
      ''தலைவரோட அடியாட்கள் ரொம்ப வேகமா இருக்காங்களா, எப்படி ?''
     ''தலைவர் 'கொல் 'னு  சிரிச்சாக் கூட அரிவாளை தூக்கிடுறாங்களே !''    

100க்கு பக்கம்தான் 108ம் :)
    100 கிலோமீட்டர் வேகத்தில்
    வாகனத்தில் சென்றவனின் கதி ...
   108 வாகனத்தில் சோகத்தில் !

21 comments:

  1. நல்ல வேலை, உங்க ஜோக்க படிச்சதும் நான் 'கொல்' லுன்னு சிரிக்கல...
    -இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து

    ReplyDelete
    Replies
    1. நியூஜெர்சியில் நீங்கள் இருப்பதால் , நல்ல வேளை ,நான் தப்பிச்சேன் :)

      Delete
  2. பொண்டாட்டி மேல பிரியம் இருக்கறவங்க இருக்க மாட்டாங்களா என்ன?!!

    அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. 'தண்ணி வண்டிகள் 'மேல் பிரியம் காட்டும் அளவுக்கு மனைவிகள் இருப்பது அபூர்வம் :)

      Delete
  3. யார் பெண்டாட்டின்னு கேளுங்க சார்...!

    முட்டையை கணினி போடுவதில்லையாம்...!

    அடி ஆத்தி...!

    செய்... செத்து மடி...!

    108 வாகனத்தில் உயிரோடு இருந்தால்தான் பயணம்...!

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. அப்படி கேட்டால் சஸ்பெண்ட் பண்ணக் கூடும் :)

      கன்னி (மிஸ் )தான் போடுவாங்களா :)

      சொன்னவங்க இல்லாம போயிட்டாங்களே:)

      உண்மையான குண்டர்கள் :)

      உயிர் பிரிந்தால் கீழே தள்ளிட்டுப் போயிடுவாங்களா :)

      Delete
  4. Replies
    1. ஆத்திச் சூடி கருத்து எப்படி :)

      Delete
  5. Replies
    1. ஹாண்ட்ரைட்டிங் அழகுதானே :)

      Delete
  6. Replies
    1. எள்ளுன்னா இப்படி எண்ணையாய் நிற்பது தவறுதானே

      Delete
  7. அது எப்படிப் பொய்யான காரணமாகும்
    ஆனா அழகா எழுதத் தெரியோணம்
    இரண்டு வகை ஆட்களும் இல்லை என்னும் எண்ணமோ
    ஒரு வேளைக் காது கேட்காதவர்களோ (பழைய பதிவு ஒன்றின் தாக்கம் ?)
    இப்போது பயணிப்பதே குறைந்து விட்டது

    ReplyDelete
    Replies
    1. தண்ணி வண்டி மனைவியின் கண்ணீர்க் கதை மேனேஜருக்கு தெரியும் :)
      ஆமாம் அது முக்கியம் :)
      அது அந்த அவ்வைக்கே வெளிச்சம் :)
      கொண்டு வா ,கொன்று வா :)
      வயசு போயிடுச்சே :)

      Delete
  8. ஹஹஹஹஹ....அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. ' தண்ணி வண்டி' யில் இருந்து சோகம் வரையிலுமா :)

      Delete
  9. ஒ.... கதை அப்படி போகுதுங்களா....!!!!!!!!!!!!1

    ReplyDelete
    Replies
    1. எந்த கதை ,எப்படி போவுது :)

      Delete
  10. மார்க் வாங்கும் தந்திரம் புரிந்ததுதானே :)

    ReplyDelete

  11. குட் ஹாண்ட்ரைட்டிங்னு
    போனஸ் மார்க்கை போட்டு
    பிள்ளைகளை முட்டாள்களாக்காமல்
    சித்திரம் வரைய ஆவது பழக்கலாமே!

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஆலோசனை ,இதுக்கு அவர்கள் எத்தனை மார்க் போடுவார்கள் என்று தெரியவில்லை :)

      Delete