19 January 2017

வெளி நாட்டுக்குப் போகுமுன் ......:)

ஜால்ரா சத்தம்  காதைக் கடிக்குதே:)
         ''புது  மேனேஜருக்கு ஜால்ரா அடித்தால் பிடிக்காது போலிருக்கா , ஏன் ?''
          ''அவர் ,கானல் நீர் தெரியுதுன்னார் ..ஆமா சார் ..அதுலே மீன் நீந்தி விளையாடுதுன்னு  சொல்லித் தொலைச்சிட்டேன் !''
வெளி நாட்டுக்கு போகுமுன் ......:)
            ''நீ  குடும்பத்தோட  உலக  டூர்  போறதை வாழ்த்தி ,போஸ்டரெல்லாம் போட வேண்டாம்னு ஏன் சொல்றே ?''
           ''கொள்ளைக்காரனுக்கு  நாமே  வெற்றிலைப் பாக்கு வைச்ச மாதிரி ஆயிடும்ணுதான்!''

படத் தலைப்பே ரிசல்ட்டை சொல்லிவிடுமா :)
        ''எப்ப பார்த்தாலும் தலையிலே துண்டை போட்டுக்கிட்டு  இருக்காரே ,அவர் யாரு ?''
         ''உச்சி வெயில்  படத் தயாரிப்பாளர்தான் !''

ஊடகங்கள் செய்யும் உன்னதப் பணி :)
ஏழு  ஆண்டுகளாக  உள்தாளே ஒட்டிக் கொண்டிருப்பதால்  ...
செவ்வாயில் மண்ணைத் தோண்டி ஆராய்ச்சி என்பதை விட முக்கிய செய்தியான 
'குடும்ப அட்டையில்  உள் தாள் ஒட்டும் பணி 'என்ற செய்தி 
இந்தாண்டு நம்ம ஊர் மீடியாக்களில் இல்லாமல் போய்விட்டது:)

20 comments:

  1. காண(ல்)நீர் இல்லாதனால மீன் செத்துப்போச்சு மேனேஜர்...!

    கோடி கோடியா லோன வாங்கிட்டுத்தானே வெளிநாட்டுல செட்டில் ஆகப்போறோம்... வீடுதான் காலியாச்சே... வீட்ட ஏலத்திலயும் யாரும் வாங்க மாட்டாங்களே... ஆவி புகுந்த வீடாச்சே...!

    அடுத்த படம் ‘துண்டக் காணோம்... துணியக் காணோம்...!’


    உள் தாள் ஒட்டிங்கங்க... கட்டிக்கங்க...!

    த.ம. 1


    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி :)

      Delete
  2. அவ்ளோ ஜால்ரா அவருக்கு ஆகாது போலிருக்கு!

    இது நிஜம். நான் நிஜமாகவே பின்பற்றுவது..

    மண்டை காஞ்சி போயிட்டாரு போல!

    இந்த வருடமும் உள் தாள்தான்!

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி :)

      Delete
  3. ரசித்தமைக்கு நன்றி ஜி:)

    ReplyDelete
  4. உச்சிவெயில் கூட ரசித்தது!!! அனைத்தும் ரசித்தோம்...இந்த வருடமும் அதேதான்....ஜி!!??

    ReplyDelete
  5. உச்சிவெயில்-நன்கு

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி :)

      Delete
  6. எல்லாமே ரசிக்க வைக்கிறது

    ReplyDelete
    Replies
    1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி :)

      Delete
  7. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி :)

    ReplyDelete
  8. வெளி நாட்டுக்கு போகுமுன்---எச்சரிக்கையா இருக்கனும்னு தெரியுது...

    ReplyDelete
    Replies
    1. காலம் கெட்டு கிடக்கே :)

      Delete
  9. வெளிநாடு டூர் போறதை முகநூலில் போட்டவர் வீட்டீல் நடந்தது உ ங்களுக்கு
    எப்படி தெரிந்தது?

    ReplyDelete
    Replies
    1. அது வேற நடந்து இருக்கா ?விளக்கமா நீங்களே சொன்னா எல்லோரும் தெரிந்து கொள்வோமே :)

      Delete
  10. வெளிநாடு டூர் போறதை முகநூலில் போட்டவர் வீட்டீல் நடந்தது உ ங்களுக்கு
    எப்படி தெரிந்தது?

    ReplyDelete
    Replies
    1. முகவரியையும் சேர்த்தா போட்டார் முக நூலில் :)

      Delete
  11. வெளிநாடு டூர் போறதை முகநூலில் போட்டவர் வீட்டீல் நடந்தது உ ங்களுக்கு
    எப்படி தெரிந்தது?

    ReplyDelete
    Replies
    1. முக நூலில் எதைப் போடலாம் என்பதற்கு இது ஒரு பாடம்தானே :)

      Delete
  12. தாமதம் வந்த போதும் ரசித்தமைக்கு நன்றி :)

    ReplyDelete