15 January 2017

பஞ்சணையில் படுக்கும் முன் :)

           ''தூங்கிறதுக்கு முன்னாடி காதுலே பஞ்சை வச்சிக்கிறீயே, பனி நுழையக் கூடாதுன்னா?'' 
           ''அதை விட முக்கியம் ,உங்க குறட்டைச் சத்தம் நுழையக் கூடாதுன்னுதான் !''          ''

இதற்கு  பரிகாரமே இல்லையா :)
            ''ஏழரைச் சனி முடியும் போது  நிச்சயம்  உங்களுக்கு கல்யாணமாயிடும் !''
         ''அப்படின்னா ,சனி வேற ரூபத்தில்  தொடர்ந்து வரும்னு சொல்றீங்களா ?''
மருமகள் சுத்தச் சோம்பேறியா :)
           ''உன் மருமக  சுத்தச் சோம்பேறியா  ,ஏன் ?''
          ''அந்த காலத்தில் , உரல்லே மாவாட்டி வழிச்சி எடுத்தோம் ,அவ என்னடான்னா பாக்கெட் மாவைக் கூட வழிச்சி எடுக்க மாட்டேங்கிறாளே !''

மாட்டை அடக்குவதா ஆண்மை :)
          ''ஓடிப் போனது என் பெண்டாட்டி ,நீங்க ஏண்டா ஓவரா ஃபீல் பண்றீங்க ?''
          ''ஒரு காலத்தில் நீ ஜல்லிக்கட்டு மாடுகளை அடக்குவதில் சாம்பியன்,அதை நினைச்சுதான் !''

பொங்கலும் கசக்குமா ,வாழ்த்தால் :)  
தமிழர் நம் நெஞ்சம் பூரித்தது ...
பொங்கல் tvசிறப்பு நிகழ்ச்சியில் வந்த 
வட இந்திய  நடிகையின் 
'போங்கள் வால்தால்'! 

28 comments:

  1. Replies
    1. அதிகாலை வரவுக்கும் ,தமிழ் மண வாக்குக்கும் நன்றி ஜி :)

      Delete
  2. நான்கு கால் செல்லங்களுக்கு
    நான்கு கால் செல்வங்களுக்கு
    நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
    பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
    பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
    தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. விளக்கமான உங்கள் வாழ்த்துக்கு நன்றி :)

      Delete
  3. குறட்டை விடுபவராலும்
    சனியனாக வருபவளாலும்
    வாழ்க்கையில் தொல்லை தான்!

    ReplyDelete
    Replies
    1. அனுசரித்து நடந்து கொண்டால் இன்பத்தின் எல்லையைக் கூட தொட முடியும்:)

      Delete
  4. தாம் விடும் குறட்டை அறியாதோர் கூறுவார்
    குறை அடுத்தவர் குறட்டை பற்றி! (குறட்டை விடுவோர் சங்கம்)

    ரசித்தேன் ஜி!

    ReplyDelete
    Replies
    1. இது குறட்டைக்கும் மட்டுமல்ல, எல்லாவற்றுக்கும் பொருந்தும் :)

      Delete
  5. Replies
    1. போங்கள் வால்தையும்தானே:)

      Delete
  6. Replies
    1. மாட்டை அடக்குவது ஆண்மையில்லைதானே:)

      Delete
  7. Replies
    1. மலையாள ஹிஹிக்கு நன்றி ஜி :)

      Delete
  8. சிலரது குறட்டை பஞ்சுக்கு அஞ்சாது
    ஏழரைச் சனி முடிந்து வாழ்நாள் சனி துவங்கும்
    வழிச்செடுத்தால் இன்னொரு தோசையோ இட்லியோ கிடைக்குமா
    ஜல்லிக் கட்டு மாடுகள் தேவலாம்
    இப்போதெல்லாம் தமிழர்களுக்கே தமிழ் உச்சரிப்பு இல்லை. அல்லது அதுதான் ஸ்டைல் என்று நினைக்கிறார்களோ

    ReplyDelete
    Replies
    1. ஏர் மோப் வாங்கி மாட்டிக்கணுமா:)
      ஆயுள் தண்டனைதானா:)
      வழிச்செடுத்த மாவில் சுட்ட தோசை ருசியே தனி :)
      பிடி படுவதாலா :)
      நுனி நாக்கு இங்க்லீஷ் மாதிரியாகி போச்சு :)

      Delete
  9. அனைத்தும் ரசித்தோம் ஜி!! சல்லிக்கட்டு வீர கணவனையும், போங்கல் வால்த்தையும் சேர்த்து...

    ReplyDelete
    Replies
    1. அரட்டைப் பிடிக்கும் ,குறட்டைப் பிடிக்காதுதானே :)

      Delete
  10. பாக்கெட் மாவைக் கூட வழிச்சி எடுக்காத அளவுக்கு சோம்பேறித் தனம் வளர்ந்து இருப்பது ,உண்மைதானே :)

    ReplyDelete
  11. குறட்டை விட்டோரெல்லாம் கேட்டை விட்டார்...!

    எப்படியும்...சனியன் பிடிக்கப் போகிறது...!

    அது அந்தக் காலம்...!

    மாடெல்லாம் நம்ம பேச்சக் கேக்கும்...!

    போங்க நீங்க ரெம்பத்தான் மாசம்...!

    த.ம. 8

    ReplyDelete
    Replies
    1. விடாதவங்க எந்த கோட்டையைப் பிடிச்சாங்க :)

      விடாது சனியன் :)

      வழிச்சு எடுக்க மனம் வேண்டுமா ,பலம் வேண்டுமா :)

      அதுக்கு புரியுற மாதிரி பேசுவதாலா :)

      எத்தனை மாசம் :)

      Delete
  12. சூப்பர் சரியான முன்ஏற்பாடுதான்.... குரட்டையிலிருந்து தப்பித்தாலும் கொசுவிலிருந்து தப்ப முடியாதே...

    ReplyDelete
    Replies
    1. காசு பார்க்காம செலவு செய்தால் கொசுவில் இருந்து தப்பிக்கலாம் :)

      Delete
  13. எல்லா வரிகளும் அசத்தல் சகோதரா...
    ரசித்தேன்
    தமிழ் மணம் 11
    https://kovaikkavi.wordpress.com/

    ReplyDelete
  14. அசத்தலோஅசத்தல்

    ReplyDelete