29 January 2017

தவிக்க விட்டுப் போன மனைவி திரும்ப வருவாளா :)

எப்படியென்றாலும் ஆயுள் தண்டனைதான் :)                      
                 ''பொறந்தா  , 'எரித்திரியா ' நாட்டில் பொறக்கணும்னு ஏண்டா சொல்றே ?''
                  ''அங்கே ,ரெண்டு பெண்களைக்  கட்டிக்காத ஆண்களுக்கு சிறைத் தண்டனையாமே !''
        செய்தியைப்  படிக்க கிளிக்குங்க ..ரெண்டு திருமணம் இல்லாட்டி ஜெயில் :
சுனாமியில் தப்பித்தும் நிம்மதி இல்லை   :)       
               ''சுனாமி வந்து பல வருசமாச்சே ,அந்தப்  பாதிப்பில் இருந்து  இன்னும்  மீள முடியலையா .ஏன் ?''
           '' அன்னைக்கிதான் எனக்கு கல்யாணம் ஆச்சுன்னு சொல்லவந்தேன்  !''

வீட்டிலே வெங்காயம் நறுக்கித் தந்தாலும் ,இங்கே சவுண்ட் விடுறாரே :)
          ''ஏன்யா சர்வர் ,சாம்பாரிலே அழுகிப் போன வெங்காயமா வருது ,கூப்பிடுய்யா உங்க முதலாளியை !''
         ''கொஞ்சம் பொறுங்க சார் ,வீட்டுக்குச் சாப்பிடப் போயிருக்கார் !''
                      
மொய் வைச்சவனுக்கு பொய்தான் போஜனமா:)
          ''நாலு பந்தி கூட்டத்திற்கு சாப்பாடு பத்தாதுன்னு சொன்னாங்களே ..எப்படி சமாளிச்சீங்க ?''
         ''பந்தியிலே பாம்பு புகுந்துருச்சுன்னு புரளியைக் கிளப்பி விட்டுத்தான் !''

தவிக்க விட்டுப் போன மனைவி திரும்ப வருவாளா :)
         ''கோபித்துக் கொண்டு போன மனைவி  திரும்ப  வரணும்னு அனுமாருக்கு வடை மாலை சாற்றியும் பார்த்திட்டேன் ,ஒண்ணுமே  நடக்கலே ...என்னடா செய்யலாம் ?''
          ''உன் மோதிரத்தை காணிக்கையா போட்டுப் பாரேன்,மோதிரத்தை சேர்க்க வேண்டிய இடத்தில்  கொண்டு போய் சேர்த்திடுவார் !''

கற்பு எனப்படுவது இதுதானோ :)
அவனவன்  நெஞ்சிலே ஆயிரம்  கனவுக் கன்னிகள் ...
அவளின் நெஞ்சிலோ  ஒரேயொரு ....கண்ணன்தான் !

22 comments:

  1. இங்கே, ரெண்டு பெண்களைக் கட்டிக்கிட்டா எரிச்சிடுவாங்களே... எப்படி போகனும் 'எரித்திரியா ' நாட்டிக்கு... வழியக் காட்டுங்க...! இதையெல்லாம் முன்னாடியே சொல்றது இல்லையா...?! டூ லேட்...!

    முன்பே இந்த பாதிப்பின் அறிகுறி எதுவுமே தெரியல... ! சுனாமியவிட இந்த ஆசாமியின் பாதிப்புதான் அதிகம்...!

    முதலாளி வந்த உடனே நானும் வீட்டுக்கு சாப்பிடப் போயிடுவேன்...!

    அதுலையும் நல்ல பாம்பா இருந்தா... நடுத்துண்டம் எனக்கின்னு ஒரு கூட்டம் வருதே...!

    நா போட்ட மோதிரத்த இப்ப இராவணன் போட்டிக்கு அலையிறானாம்... மோதிப் பாத்திடுவோமுன்னு சொல்றான்... பிள்ளையாருக்குக் கொழுக்கட்டை செஞ்சு சாத்த வேண்டியதுதான்...!

    ‘கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
    வண்ண மலர் தொட்டில் கட்டி தாலாட்டுவான்
    குழலெடுப்பான் பாட்டிசைப்பான்
    வலம்புரி சங்கெடுத்து பாலூட்டுவான்.....’
    பாலை யார் ஊட்ட வேண்டும் என்று பாழாய்ப் போன யாரும் கேக்கக் கூடாது...!

    த.ம. 1













    ReplyDelete
    Replies
    1. ஆசையிருக்கு ,அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க !நமக்கெதுக்கு அய்யா வேண்டாத ஆசையெல்லாம் :)

      இந்த நாயோட வாழ்றதை விட சுனாமியில் போய் சேர்ந்து இருக்கலாம் என்று அவர் மனைவியும் நினைக்கிறாராமே:)

      இளிச்சவாயன் கஷ்டமர்தானா:)

      ொத்த கண்டத்தையும் நீயே சாப்பிட்டுக்கோ பாம்பைத் தேடி பிடிச்சிக்கோ :)

      இப்படி பெண்டாட்டி இல்லாத சாமிகளையே நம்பினா உருப்படுமா :)

      இப்போ பாலுக்கு என்ன அவசரம் :)

      Delete
  2. இப்படி வேற தண்டனை எல்லாம் கொடுக்கறாங்களா பாஸ்.. நம்ம ஊர்ல முதல் கல்யாணத்துக்கே பொண்ணு கிடைக்க மாட்டேங்குது...

    அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. தண்டனையா ,அங்கே சுருட்டை முடியில் சுருண்டு கிடக்கிறாங்கலாமே ஆண்கள் :)

      Delete
  3. எரித்திரியாவில் குடியுரிமை கிடைக்குமா ஜி ?

    ReplyDelete
    Replies
    1. வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் எரித்திரியாவில் பெண்களுக்கு பஞ்சமாகிடுமே :)

      Delete
  4. புரளியை நல்லாவே கிளப்புறீங்க ஜி...

    ReplyDelete
    Replies
    1. புரளியைக் கிளப்பினாலும் ,சாப்பிடாம போக மாட்டோம்னு மொய் வைக்காதவனும் அடம் பிடிச்சு உட்கார்ந்தே இருக்கானே :)

      Delete
  5. அனைத்தும் ரசித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. நம்ம நாட்டிலே இப்படி ஒரு ஆண் பஞ்சம் வர்றமாதிரி தெரியலையே ஜி :)

      Delete
  6. Replies
    1. சுருட்டை முடி அழகிகளும்தானே :)

      Delete
  7. உண்டியலில் மோதிரம்...ஹாஹாஹாஹா.அனைத்துதும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. உண்டியலில் போட மனசு வருமா :)

      Delete
  8. எனக்கு சுனாமி குடியரசு தினம் அன்னைக்குதான்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயித்தது ஆகஸ்ட் பதினைந்தா :)

      Delete
  9. அனுமார் வேஸ்ட்... பிள்ளையார்தான்..பெஸ்ட்..

    ReplyDelete
    Replies
    1. ஆற்றங்கரை ஓரமாய் உட்கார்ந்து ரசித்துக் கொண்டிருப்பதாலா :)

      Delete
  10. ஒரு பெண்ணை மேனேஜ் செய்வதே கஷ்டம் எனும் போது இரண்டு மனைவிகளா. ஆண்களுக்குப் பஞ்சமா
    சுனாமியில் அடித்து வைக்கப்பட்டாரா அடைத்து வைக்கப் பட்டாரா
    என்ன இருந்தாலும் வீட்டுச் சாப்பாடு போல வருமா
    இருந்தும் போகவில்லை என்றால்
    போனவள் போனவளாகவே இருப்பது நல்லதல்லவா
    பெண்களின் மனதை யாரே அறிவார்

    ReplyDelete
    Replies
    1. மேனேஜ் செய்ய பணம் அரசாங்கம் தரும் ,உடல் நலம் ,பலம் என்றால் கஷ்டம்தான் :)

      தாம்பத்திய சுழலில் சிக்கிட்டு தவிக்கிறார் :)

      உரிமையாளருக்கு அதன் அருமை தெரிகிறது :)

      பாம்புக் கறியை போட்டு விட வேண்டியதுதான் :)

      போனவள் அப்படித்தான் நினைக்கிறாள் ;)

      பெண்களிடம் ரகசியம் தங்காது என்று சொல்கிறார்களே :)

      Delete
  11. வீட்டு சாப்பாடு!

    ReplyDelete
    Replies
    1. நிலாச்சோறு மட்டுமா ,வீட்டுச் சாப்பாடும் எப்பவும் கிடைக்காதே :)

      Delete