10 January 2017

இவனுக்கு யாராவது பொண்ணு தருவாங்களா :)

இப்படியுமா சந்தேகம் வரும் :)      
           ''உனக்கென்ன சந்தேகம் ,கேளு ?''
          ''wயை ஏன் டபுள் யுன்னு சொல்லணும் ,டபிள் வீன்னுதானே  சொல்லணும் ?''

கைநாட்டு  பேர்வழியா இருப்பாரோ :)                        
          ''டாக்டர் பட்டம் பெற நம்ம தலைவருக்கு தகுதி இருக்குன்னு எப்படி சொல்றே ?''
           ''அவர் எழுதினாலும் புரிய மாட்டேங்குதே !''

இதுவல்லவா தொழில் தர்மம் :)
        ''என்னங்க ,கொள்ளைக்காரங்க எப்படியும் பீரோவை உடைச்சி கொள்ளை அடிக்கத்தான் போறாங்க ,பேசாம பீரோ சாவியை அவங்ககிட்டே கொடுத்துடுங்க !''
         ''கொடுத்தேன் ,கஷ்டப் படாம சம்பாதிச்ச  காசு உடம்புலே  ஒட்டாதுன்னு சாவியை வேண்டாங்கிறாங்களே !''

இவனுக்கு யாராவது பொண்ணு தருவாங்களா :)
           ''பிரைவேட் எம்ப்ளாய்மென்ட் சென்டர் நடத்துற வரனை ஏன் வேண்டவே வேண்டாம்னு சொல்றீங்க ?''
          ''பொண்ணுக்கு எல்லா  தகுதியும் இருக்கு ,பிள்ளை பெத்துகிட்ட அனுபவம் இருக்கான்னு கேட்கிறானே !''

தத்துவத்தைப் புரிந்துக் கொள்வது சுலபமா :)     
    விளங்கிக் கொள்ள முடியலையா ?
    விளக்கிச்  சொல்ல முடியலையா ?
     அட ,அதுதாங்க தத்துவம் !

20 comments:

  1. திருடர்களின் தொழில் தர்மம் புல்லரிக்க வைக்கிறது!!!!

    நாம இனிமே டபுள் வீ ன்னே சொல்வோமா!!!

    ReplyDelete
    Replies
    1. நீதிபதியிடம் இந்த தொழில்தர்மம் செல்லுமான்னு தெரியலே :)

      நடு மூன்று விரல்களை உயர்த்தியும் சைகையில் காட்டுவோமே:)

      Delete
  2. சந்தேகக் கோடு... அது சந்தோசக் கேடு...!

    படிக்காத மேதையாச்சே... அப்படித்தான் இருக்கும்...!

    அதெப்படி நீங்க கஷ்டப் படாம சம்பாதிச்ச காசுன்னு கண்டு பிடிச்சாங்க...!

    அனுபவம் பேசுகிறது...!

    புரியாம பேசக் கத்துக்கிட்டாய்... சீக்கிரம் பெரிய மனுசனா ஆயிடுவாய்...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. இது டபிள் வீ ,இரட்டை வெற்றியைக் குறிக்குமா :)

      ஆங்கிலமா ,தமிழான்னு கூடத் தெரியலே :)

      நாலு நாளா நோட்டம் விட்டுத்தான் :)

      கல்யாணம் அனுபவம் இருக்கான்னு கேட்டாலும் பரவாயில்லை :)

      கவிஞனாக வரக்கூடும் :)

      Delete
  3. Replies
    1. தத்துவம் புரிந்ததா :)

      Delete
  4. Replies
    1. உண்மைத் தத்துவம் ஆச்சே :)

      Delete
  5. //கஷ்டப் படாம சம்பாதிச்ச காசு உடம்புலே ஒட்டாதுன்னு சாவியை வேண்டாங்கிறாங்களே !''//

    எப்படியோ, உடைச்சிப் பணத்தை எடுத்துட்டுப் போய்ட்டாங்கதானே? பாவம் வீட்டுக்காரர்!

    ReplyDelete
    Replies
    1. அவரென்ன பாவம் செய்தார் :)

      Delete
  6. Replies
    1. தொழில் தர்மம் சரிதானே :)

      Delete
  7. நாம் எழுதும்போது டபிள் யூ தானே வருகிறதுஆங்கில மொழியில் நிறையவே சந்தேகங்கள் வர வாய்ப்பிருக்கிறது
    புரியாமல் எழுதுவதும் ஒரு தகுதிதானே
    மனைவியிடம் பீரோ சாவியை நீங்கள் கேட்டுப்பாருங்கள்
    அந்த அனுபவம் பெறத்தானே திருமணம்
    தத்துவம் பேசுவதும் ஒரு கலையாய் விட்டது

    ReplyDelete
    Replies
    1. பெரிய எழுத்தில் எழுதிப் பார்த்தாலுமா :)
      அதுதான் முக்கியத் தகுதி :)
      பூரிக் கட்டை பறக்குமே :)
      கல்யாணமே அதுக்குத் தானா :)
      பேலியோ என்பதைப் போல :)

      Delete
  8. டபுள் வி அஹஹ்ஹ அதுதானே!!!

    பிச்சைக்காரர்களின் தர்மம் அடடா!!!

    தத்துவம் செம போங்க!! அனைத்தையும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. டபுள் யு என்பதை தமிழ்ப் படுத்தினாலும் நன்றாக இல்லையே :)

      கொள்ளைக் கார தர்மவான்களை பிச்சைக் காரன்கள் ஆக்கிட்டீங்களே :)

      இந்த தத்துவம் உங்களுக்கு புரிந்து விட்டது போலிருக்கே :)

      Delete
  9. நல்ல மாப்பிள்ளைக்குத்தான் தரமாட்டாங்க..தலைவரே.... இவருக்கு கண்டிப்பா கொடுப்பாங்க தலைவரே...

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு அப்பாவியா கேட்கிறார்ன்னுதானே :)

      Delete
  10. - முதலாவது கேள்வி நெடு நாளாக எனக்கும் உண்டு.

    - விளங்கிக் கொள்ள முடியலையா ?
    விளக்கிச் சொல்ல முடியலையா ?
    அட ,அதுதாங்க தத்துவம் !//
    ரசித்தேன் சகோதரா.
    தமிழ் மணம் 11

    ReplyDelete
    Replies
    1. யாரும் சரியான பதிலைத் தர்ற மாதிரி தெரியலையே :)

      நன்றாக விளங்கிக் கொண்டதற்கு நன்றி :)

      Delete