5 January 2017

அதிகம் பேசுவது கணவனா ,மனைவியா :)

ஜோக்காளியை, தொடர்ந்து ஒராண்டு காலம்  ' தமிழ் மண முதல்வனாய்' அழகு பார்த்த வலைப்பூ உறவுகளுக்கு  நன்றி !

கேட்டதில் தப்பு ஒன்றும் இல்லையே :)
              ''சர்வர் ,நூறு கிராம் சாதம் வை !''
               ''என்ன சார் இப்படிக் கேட்கிறீங்க?''
               ''சாதம் இப்படிக் கெட்டியா இருந்தா வேறெப்படி கேட்கிறது ?''

பெரியவங்களை இப்படியா மதிப்பது :)                 
             '' கடைக்காரர் எடை போடும்போது எடை மெஷினையே ஏன் பார்த்துகிட்டே இருக்கார் ?''
              ''ஆளைப் பார்த்து எடை  போடக் கூடாதுன்னு  பெரியவங்க சொல்லி இருக்காங்களே !''

தாலியைக் கழற்றினா கணவன் ஆயுள் குறையுமா :)
           ''என்னங்க ,தூங்கும்போது உறுத்துதுன்னு  தாலியைக் கழட்டி வைக்கிறது ,தப்பா ?''
           '' என் ஆயுள் குறைஞ்சுடுமோன்னு  மனசு உறுத்துதே !''

அம்மா அப்பாவைவிட அதிகம் பிடித்தது :)
             ''என் பிள்ளைக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தர்றதை குறைச்சுக்கணும்னு ஏன் சொல்றே ?''
            ''உனக்கு அம்மா பிடிக்குமா ,அப்பா பிடிக்குமான்னு கேட்டா ,ஐஸ் கிரீம்தான் பிடிக்கும்னு சொல்றானே !'

அதிகம் பேசுவது கணவனா ,மனைவியா :)
           ''செல்போன்லே  அளவுக்கு அதிகமா பேசுறதை நிறுத்து !''
           ''இப்ப நீங்கதான் ,அளவுக்கு அதிகமா பேசுறீங்க ,போதும் நிறுத்துங்க !''

எந்த காரியத்தையும் மனம் லயித்து செய்யணும் :)
   விருந்து சாப்பிடும் போது மருந்தை நினைக்காதே ! 
  மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்காதே ! 
  குரங்கு வெளியில் இருந்தால் விரட்டி விடலாம்  
  மனதில் இருந்தால் விரட்டுவதும் ,தடுப்பதும் 
  நம் கையில்தான் ! 

28 comments:

  1. தொடர்நது ஓராண்டாக முதலாமிடத்தில் - வாழ்த்துகள் ஜி.

    அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ஜி :)

      Delete
  2. தொடர்ந்து ஓராண்டு முதலிடம்!!!! வாழ்த்துகள் பகவான் ஜி!!!

    அனைத்தையும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. இதனால் ,விரைவில் தமிழ்மணமே முடிவுக்கு வந்து போலிருக்கே :)

      Delete
  3. கெட்டியா பிழைக்கனுமுன்னுதான்... இப்படி... இது எப்படி இருக்கு...?!

    நான் கூட எடை மெஷின் தாங்குமான்னு பார்க்கிறாரோன்னு நெனச்சேன்...!

    முதுமக்கள் தாலியோ...! முதுமக்கள் தாழியில வைக்க வேண்டியதுதான்...!

    பனிக்கூழ் கொடுப்பதற்குப் பணியாதிங்க...!

    இப்படி பேசினா காசு போகாதும்மா...!

    குரங்கிலிருந்து பரிணமான வளர்ச்சி பெற்றவன் தானே...!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. கெட்டிக்கார தனமா இருக்கே :)

      எடைக்கல்லை yஇந்தாலும் தாங்கிக்குவார்:)

      குனியலாமா :)

      காசு போகாது ,மானம் போகும் :)

      மூஞ்சி மட்டும்தான் அனுமார் மாதிரியில்லையோ:)

      Delete
  4. தமிழ் மணம் உலகைச் சுற்றிக் கொண்டிருக்கிறது இன்னும் எங்கள் ஏரியாவுக்கு வரவில்லை ஜி!!!!

    ReplyDelete
    Replies
    1. எப்போ வரும் ,எப்படி வரும்னு எனக்கும் தெரியலே :)

      Delete
  5. Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ஜி :)

      Delete
  6. வாழ்த்துகள் ஜி

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ஜி :)

      Delete
  7. //'' என் ஆயுள் குறைஞ்சுடுமோன்னு மனசு உறுத்துதே !''//

    கல்யாணம் கட்டிக்காமையே இருந்திருக்கலாமோ?

    ReplyDelete
    Replies
    1. ஏங்கியே சீக்கிரமே செத்திருப்பாரே :)

      Delete
  8. சாதனை தொடர வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ஜி :)

      Delete
  9. வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி:)

      Delete
  10. என்றும் எங்கள் ஆதரவு உண்டு.... வாழ்த்துகள் ஜி...

    ReplyDelete
    Replies
    1. மூலவரே நீங்கதானே ,நன்றி ஜி :)

      Delete
  11. ஆண்களில்தான் பேச்சிலர் உண்டு

    ReplyDelete
    Replies
    1. கல்யாணம் ஆனதும் பேச்சிலரும் ஆவதுண்டு :)

      Delete
  12. ஓராண்டு சாதனைக்கு வாழ்த்துக்கள் ஜி! ஜோக்ஸ் சூப்பர்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும்,சூப்பருக்கும் நன்றி ஜி :)

      Delete
  13. வாழ்த்துக்கள்தொடருங்க

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ஜி :)

      Delete
  14. "நம் கையில் தான்!" என்று முடிகின்ற
    பதிவு சிறந்த கருத்தைச் சுட்டுகிறது
    பாராட்டுகள்!

    ReplyDelete
  15. அதிகம் பேசுவது கணவனா ,மனைவியான்னு ஒரு பட்டி மன்றம் வச்சுட்டா தெரிஞ்சு போயிடும்ல்ல...எதுக்கு வீணா சண்டை போட்டுகிட்டு.........

    ReplyDelete