9 January 2017

ஒண்ணு கொடுத்தா போதுமா ,இன்னொண்ணு :)

 இப்படியும் செய்யலாமோ:)
            ''அவர் சரியான கஞ்சப் பிசினாறியா ,ஏன்?''
           ''காலியாகிற டூத் பேஸ்ட்டை  பிதுக்கி எடுக்காம  பூரிக்கட்டையால் உருட்டி எடுக்கிறாரே !''

மாயம் உண்மையானால் ...:)
          ''உங்க கண்ணுக்கு தெரியாம உங்க மனைவியை மறையச் செய்கிறேன் ,அப்பவாவது மேஜிக் உண்மைன்னு நம்புவீங்களா ?''
          ''திரும்ப வரலைன்னா நம்புறேன் !''
ஒண்ணு  கொடுத்தா போதுமா ,இன்னொண்ணு :)
             ''நீங்க தொழில்  தொடங்க கொடுத்த  பெட்டிசனுக்கு பதிலே இல்லைன்னு மந்திரிகிட்டே  கேட்டதுக்கு என்ன  சொன்னார் ?''
             ''பெட்டிசன் வந்திருச்சு ,பெட்டி வரலேயேன்னு கேட்கிறார் !'   

ஓடிப் போகலாம்னு சொன்னவ ஏன் வரலே :)
            ''  ஓடிப் போகலாம்னு அடிக்கடி சொன்னாலும் என்னோட  காதலி ஓடிவர மாட்டாள்னு உனக்கு எப்படி தெரியும் ?''                                              
            ''வானிலை மைய அதிகாரியா இருக்கிற அப்பன் மேலே அவளுக்கு பாசம் அதிகம்டா !''

இல்லறத் துணைக்கு மாஞ்சா கயிறு வேணுமாம் :)                              
             ''என்  மனைவி சண்டையிலே ,நான் கட்டிய மஞ்சக் கயிறை கழற்றிக் கொடுத்துட்டா !''
              ''வேறென்ன வேணுமாம்  ?'' 
             ''மாஞ்சா கயிறைக் கட்டுங்க ,செத்துத் தொலையுறேன்னு சொல்றா !'

16 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. பூரிக்கட்டையை நன்றாக பயன்படுத்திக் கொள்கிறார்தானே:

      Delete
  2. பூரிக்கட்டையைப் பற்றி அவருக்குத்தானே தெரியும்...!

    ஒங்க வீட்டுகுள்ள... மனைவியை மறைச்சு வச்சுடாதிங்க... மேஜிக் மாமா...!

    லஞ்ச ஒழிப்புத் துறையில இருந்து நாளைக்குத்தான் வரமுடியுமாம்... ஆள் பற்றாக் குறையாம்...! அதனால் ‘இன்று போய் நாளை வா’ன்னு சொல்றாங்க...!

    நடக்கும் என்பார் நடக்காது... நடக்காது என்பார் நடந்துவிடும்...!

    இதோ... உடனே பாஞ்சு போய் மாஞ்சா கயிறு வாங்கி வாரேன்...!

    த.ம. 2



    ReplyDelete
    Replies
    1. அது சரி ,பூரிக்கட்டை அடியை எப்படி மறப்பார் :)

      மறைக்க முடிந்தாலும் வாயை அடைக்க முடியாது ..சொல்லிப்பிட்டேன் :)

      லஞ்ச ஒழிப்புத் துறையில ஆள் பற்றாக் குறை என்னைக்கு ஒழியுமோ :)

      இது ஊர் அறிந்த ரகசியமாச்சே :)

      இந்த வேகத்தை 'மற்றவற்றிலும்' காட்டினா ,இந்த நிலை வராதே :)

      Delete
  3. Replies
    1. ஓடிப் போகலாம்னு சொன்னவ வராத காரணம் புரிந்ததா :)

      Delete
  4. // ''காலியாகிற டூத் பேஸ்ட்டை பிதுக்கி எடுக்காம பூரிக்கட்டையால் உருட்டி எடுக்கிறாரே !//

    என் மனைவி பிளேடால் கீறி எடுக்கிறார்! என்னத்தைச் சொல்ல?!

    ReplyDelete
    Replies
    1. உருட்டினாலும் வராத பேஸ்ட்டை இப்படித்தானே எடுத்தாகணும் :)

      Delete
  5. Replies
    1. மோடி மஸ்தானையுமா:)

      Delete
  6. Replies
    1. திரும்ப வரலைன்னா நம்புறேன்என்பதும் சூபர்தானா :)

      Delete
  7. பூரிக்கட்டை அனுபவமோ கொடுத்த காசுக்கு வஞ்சனை செய்யமாட்டார்
    மனைவியை மறைத்து அவர் என்ன செய்யப் போகிறார்
    தொழில் தொடங்க இப்போதும் பெட்டி தேவையா. மோடிக்குத் தெரியுமா
    ஒருவேளை ஓடி வந்தாலும் வரலாம்
    மாஞ்சா கயிறின் உபயோகம் தெரியாதவரா. வாங்கி கொடுக்க வேண்டியதுதானே

    ReplyDelete
    Replies
    1. காசின் அருமை தெரிந்தவர் :)
      அதானே ,மறக்க வைத்தாலும் பரவாயில்லை :)
      இப்போது மட்டுமல்ல ,எப்போதும் :)
      வானிலை போலத்தானே :)
      கழுத்தறுப்பில் இருந்து தப்பிக்க வேற வழியே இல்லையா :)

      Delete
  8. டூத் பேஸ்ட்டைப் பிதுக்கி எடுக்க
    பூரிக்கட்டை போதாது
    உருட்டி எடுக்க
    உடற்பலமும் வேண்டுமே!

    ReplyDelete
    Replies
    1. ஆமாமாம் ,நூறு கிலோ எடையாவது தூக்கும் பலம் வேணும் :)

      Delete