20 January 2017

இரு கை ஓசைதானே ,காதல் :)

பையன் செய்தது சரிதானே :)       
          ''என் பையனோட புத்திசாலித் தனத்துக்கு  வேற ஸ்கூல்லே சேர்க்கணுமா  ஏன் ?'' 
          ''கோடிட்ட இடத்தை நிரப்பச் சொன்னா ,அவனும் கோடு போட்டு  நிரப்பி வச்சிருக்கானே !''

மேனேஜர்  மேஜர் ஆகாதவரோ :)
        ''உங்க மேனேஜருக்கு நக்கல் ஜாஸ்தியா ,ஏன் ?''
        ''தலைக்கு மேலே வேலை இருக்குன்னு  ஒருநாள் லீவு கேட்டா ...ஹேர் கட் பண்ணிக்க பெர்மிசன் போதுமேங்கிறாரே !''

 இரு கை ஓசைதானே ,காதல்  :)
         ''நீ காதலிக்கிற பொண்ணோட  விருப்பத்தை தெரிஞ்சுக்க ...ஒரு கையிலே ஓசை வராதுன்னு ஜாடைமாடையா சொன்னீயே ,என்னாச்சு ?''
        ''ஏன் வராதுன்னு  'பளார் 'ன்னு  கன்னத்திலே அறைஞ்சிட்டாளே !''
ஆஸ்திரேலியா ஜனத் தொகையை விட இவர்கள்  அதிகமாச்சே :)                
           ''லஞ்சம் வாங்கிறவனை எல்லாம் பிடித்துக் கொண்டு போய் ஒரு தீவிலே விடணும்!''
          ''அவ்வளவு பெரிய தீவுக்கு எங்கே போறது ?''

மார்க்கும் 'முட்டை' தான் எடுப்பானா  :)
         ''கோழி முட்டையிட்டு அடை காத்து குஞ்சு பொறிக்கும்னு சொன்னா, என் பையன் நம்ப மாட்டேங்கிறான்டி  !''
         ''எப்படி நம்புவான் ?நாமதான் முட்டையை  வடைச் சட்டியில் பொறித்து சாப்பிடக் கொடுத்து  விடுகிறோமே !''

18 comments:

  1. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவு பெரிய தீவு இல்லைதானே ஜி :)

      Delete
  2. Replies
    1. இன்றைய மாணவர்களின் எழுச்சி ,லஞ்சம் வாங்குபவர்களை எல்லாம் ஒரு தீவுக்கு கொண்டு போய் விடும் அளவுக்கு வளர்ந்தால் நல்லதுதானே :)

      Delete
  3. அனைத்தையும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. மேனேஜர் மேஜர் ஆகாதவர்தானே :)

      Delete
  4. ஒரு கை ஓசை நன்றாகவே கேட்டது

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,உங்கள் காதால் அவர் வலியை உணரவா முடியும் :)

      Delete
  5. Replies
    1. ஏன் ,நேற்றைய பதிவை ரசிக்கலை ஜி :)

      Delete
  6. பையன் பேரு பார்த்தீபனோ... பார்த்தீபன் கனவு...!

    இது தலை போற வேலை...!

    கண்ணத்தில் என்னடா காயம்...? அது வண்ணக்கிளி செய்த மாயம்...!

    ‘தீ’யிங்கிறதுக்குப் பதிலா... தீவுன்டேன்...!

    ஒங்கள மாதிரியே அவனும் கூமுட்டையா இருக்கானே...!

    த.ம. 6

    ReplyDelete
    Replies
    1. பார்த்தீபன், கோடிட்ட இடத்தை நிரப்பியுள்ளார் ,ரசிகர்களின் உள்ளம் நிறைந்ததா தெரியவில்லையே :)

      தலை மேல் உள்ளது மட்டும் போற வேலை :)

      சாயம் பூசின மாதிரித் தெரியுதே இந்த மாயம் :)

      சரியாய் சொல்லிட்டீங்க ,இந்த லஞ்ச ஜோதியைப் பார்த்தாத்தான் அடங்குவாங்க :)

      கூமுட்டைப் பொறியல் வைச்சா கூமுட்டை தான் :)

      Delete
  7. ஒரு கை ஓசையையுமா :)

    ReplyDelete
  8. Replies
    1. தங்களின் தளம் தங்க்லீஷ் கிட்சன் என்றாலும் ,இங்கே தமிழில் கருத்து சொன்னதுக்கு நன்றி :)

      Delete
  9. ரசனைக்கு மிக்க நன்றி :)

    ReplyDelete
  10. Replies
    1. ஒரு தலைக் காதல் மாதிரிதானே :)

      Delete