3 January 2017

காதல் வளர்வது, உதட்டு மொழியால்தானா :)

       ''உன் காதலி கண்ணால் பேசியது புரிந்தது ,வாயால் பேசுவதுதான் புரியலையா ?''
        ''அவ்வளவு ஸ்பீடா இங்கிலீஷ் பேசுறாளே !''

இனி இவர் 'புவ்வா 'வுக்கு லாட்டரிதான் அடிக்கணும் :)
            ''என்னங்க ,என்னை எதுக்கு லாரி எடை போடும் இடத்துக்கு கூட்டி வந்து இருக்கீங்க ?''
             ''நீதானே எடை பார்த்துக்கணும்னு சொன்னே !''

மாமியார் வீட்டில் இருந்த அனுபவம் :)
             ''வீட்டோடு இருக்க விரும்பும்  வரன் தேவைன்னு சொன்னது தப்பாப் போச்சா ,ஏன்?'
             ''வருசத்திலே பாதி நாள் 'மாமியார் 'வீட்டுலே தான்  இருக்கேன்னு  கொள்ளைக்காரன் வந்து நிற்கிறானே!''

வரப் போற மனைவி எப்படி இருக்கணும் :)
             ''அம்மா ,எனக்கு வரப் போற பொண்ணுக்கு ,ஐஸ்வர்யா கண் ,அனுஷ்கா உயரம் ,நயன்தாரா கலர் ,நஷ்ரியா …''
            ''போதும் நிறுத்துடா ,இப்படிப்பட்டப் பொண்ணை எங்கே தேடுறது ?''
             ''தேடவே வேண்டாம் ,பக்கத்து வீட்டிலேயே நான் பார்த்து வச்சிருக்கேனே  !''

கஞ்சாவைக் கூட அஞ்சாமல் விற்கும் நிலை வந்தால் ...?      
 தமிழர்கள் ஆகிய நாம் பெருமைப்படும் படியான ஒரு சரித்திரச் சாதனை புத்தாண்டில் நிகழ்ந்து உள்ளது ...
புது வருசத்தைக் கொண்டாட தமிழ்'குடிமகன் /ள் டாஸ்மாக்கில் செலவிட்ட தொகை  180 கோடியாம் ...
வெள்ளையன்கூட அவன் புத்தாண்டுப் பிறப்பை இவ்வளவு  
செலவு செய்து கொண்டாடி இருப்பானாவென்று தெரியவில்லை . 
இந்த புதுமை இங்கே நடக்கும் சமயத்தில் ...
அமெரிக்க மாகாணம் கொலராடோவில் இன்னொரு புதுமை அரங்கேறி உள்ளது ...
கஞ்சா பயிரிடவும்,விற்பனை செய்யவும் அரசாங்கமே அனுமதித்து உள்ளது ...
மலேசியா ,சிங்கப்பூரில் கஞ்சா வைத்து இருந்தாலே மரண தண்டனை ...ஆனால் கொலராடோவில் மக்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருக்க சட்ட திட்டம் வகுத்து இருக்கிறார்களாம் ...
1 8 வயதானவர்களுக்கு தினசரி 28 கிராம் மட்டுமே விற்க அனுமதியாம் ...
போதைக்கு அடிமையானவர்கள்  மனமும் உடலும் கெட்டு,நிறைய பொய்பேசுவதாகவும் ,திருட்டு ,கொள்ளை ,பாலியல் வன்முறை ,சமூக விரோத காரியங்கள் செய்வதாகவும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன ...
ஆனால் ,ஆள்பவர்களுக்கு கஜானா நிரம்பினால் போதும் போலிருக்கிறது ...
கொலராடோ வழிகாட்டி விட்டது ...
அடுத்த படியாக அமெரிக்காவில் உள்ள மற்ற மாகாணங்களும் இதை பின்பற்றும் ...
அமெரிக்கச் சீரழிவுக் கலாச்சாரம் இங்கேயும்  பரவும்  காலம் வெகு தூரத்தில் இல்லை ...
தெருவுக்கு தெரு அரசாங்கமே கஞ்சாக் கடைகளைத் திறந்து மக்களை  வாழ வைக்கப் போகிறது  !

28 comments:

  1. நகைச்சுவைகளை ரசித்தேன். கடைசிப்பத்தி வேதனைதான்.

    ReplyDelete
    Replies
    1. வேதனைப் படுவதை விட வேடிக்கைப் பார்ப்பதே நல்லது போல் தோன்றுகிறதே :)

      Delete
  2. ரசித்தேன் ஜி. தம இன்னுமா சப்மிட் ஆகவில்லை?

    ReplyDelete
    Replies
    1. தமிழ்மணம் கோமா ஸ்டேஜுக்கு போய்க் கொண்டிருக்கிருப்பது வருத்தமளிக்கிறது :)

      Delete
  3. என் காதலி கண்ணால் பேசியது புரிந்ததா...? எனக்கே புரியவில்லை... உனக்கெப்படி...?

    எடை போட எடைக்கு எடை நாணயம் கொடுக்க வேண்டுமாம்...!

    இரண்டுமே சிறை வாழ்க்கைதானே...!

    ஏன்டா... உனக்கு பார்வை சரியாத் தெரியாதுன்னு இது வரைக்கும் சொல்லவே இல்லை... உடனே கண் ஆஸ்பத்திரி போலாம் வா....!

    படிப் படியாக அமுல் படுத்த யோசனை செய்து கொண்டு இருக்கிறார்களாம்... அரசுக்கு வருமான இழப்பை ஈடுகட்ட திட்டம் போட்டு... திரு... கூட்டம் கூடுது...!

    ReplyDelete
    Replies
    1. கண்ணாலே ரகசியம் பேசிக்கிட்டது மறந்து போச்சா :)

      பத்து ரூபாய் நாணயம் செல்லாதுன்னு சொல்றாங்களே ,அதைக் கொடுத்திடலாமா :)

      மனைவிக்கு வார்டனே பெட்டரா :)

      வயசுலே கழுதைக் கூட அழகாய்த்தானே தெரியும் :)

      இருபதாண்டு திட்டமா இருக்குமோ :)

      Delete
  4. Replies
    1. Lingam Explanation லிங்கைக் கொடுத்துள்ளீர்கள் நன்றி !பார்க்க நினைக்கும் மற்றவர்களுக்கும் இந்த லிங்க் உதவும் போலிருக்கே :)

      பின்னூட்டத்தில் இந்த லிங்க்கை எப்படி கொண்டு வர முடிந்தது ?

      Delete
  5. Replies
    1. லேப்டாப் ஒன்று இன்னும் வாங்கலையா ஜி :)

      Delete
  6. கண்ணும் கண்ணும் பேசியதும் உன்னாலன்றோ வாய் மொழி பேசாததும் உன் மொழியாலன்றோ
    எடை போட வேண்டுமாம் உடல் எடைதானே லாரி எடையா
    சரியான வரன்தானே
    இப்படியும்காதலைச் சொல்லலாம்
    அளச்வுக்கு மீறினால் எதுவும் விஷம்தான்

    ReplyDelete
    Replies
    1. உள்ளம் ஒன்றானபின் வாய்மொழி எதுக்கு :)

      சைஸ் பயமுறுத்துதே:)

      நல்ல மாப்பிள்ளையும் கொள்ளைதானே அடிக்கப் போறார் :)

      பயலுக்கு சொல்லியாத் தரணும்:)

      அளவாக் குடிச்சா தப்பில்லையா :)

      Delete
  7. Replies
    1. கடைசி செய்தியைத்தானே சொல்றீங்க :)

      Delete
  8. ரசித்தேன் ஜி...

    இப்போது நம் திரட்டியில் இணைப்பது பற்றி, உங்கள் எண்ணம் போல் தெரிகிறதா...?

    முதல் நகைச்சுவையில் படம் இணைத்தாலே போதும் ஜி...

    ReplyDelete
    Replies
    1. ஒரு வழியாக டெக்னிக் புரிந்து விட்டது ஜி :)

      Delete
  9. Replies
    1. ரசனைக்கு நன்றி ஜி :)

      Delete

  10. கஞ்சாவைக் கூட
    அஞ்சாமல் விற்கும் நிலை வந்தால்...?
    உலகம்
    தலைகீழாகச் சுற்றும் போல

    ReplyDelete
    Replies
    1. இரவும் வரும் பகலும் வரும் தானே :)

      Delete
  11. நல்ல பதிவு க்கு மகிழ்ச்சி

    ReplyDelete
    Replies
    1. ஆனால்,தமிழ்மணம் திரட்டிதான் நல்லபடியா இல்லை :)

      Delete