இது ஒரு கோவைக் கலாட்டா :)
''நம்ம ஊர் பழம் இருக்கான்னு கேட்டா ,என்ன பதில் சொல்றது ?''
''அட ,கோவைப் பழம் இருக்கான்னு கேட்டேன் !''
(இதுக்கும் ,கீழேயுள்ள படத்துக்கும் என்ன சம்பந்தம்னு யோசிச்சுச் சொல்லுங்க :)
மஞ்சள் நிறம்தான் அவருக்கு பிடிக்கும் :)
காதலி செம உஷார் பார்ட்டிதான் :)
''டார்லிங் ,இன்னைக்கு ரீலிஸ் ஆகியிருக்கிற 'சேஷ்டை ' படத்திற்கு போய்தான் ஆகணும்னு ஏன் சொல்றே ?''
'' 'ஹவுஸ் புல்' தியேட்டரில் உங்க 'சேஷ்டை' இருக்காதுன்னுதான் !''
ரொம்ப வெவரமான பயபுள்ளே :)
''என்ன தம்பி ,என் தலைக்கு மேலே எரியுற டியூப் லைட்டைக் கழட்டிக் கொடுக்கச் சொல்றே ?''
''நல்லா எரியுற லைட்டா பார்த்து வாங்கி வரச் சொல்லியிருக்கார் எங்க அப்பா !''
எழுத்துப் பிழையா ?வேணும்னே செய்ததா :)
''வாத்தியார் வீட்டுக் கல்யாணத்திற்கு போவதா ,வேண்டாமான்னு இருக்கா ,ஏன் ?''
''பத்திரிக்கை முதல் வரியில் 'மொய் பொருள் காண்பது அறிவு 'ன்னு எழுதி இருக்காரே !''
கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா :)
கொள்ளைப் போன பொருள் கிடைக்க வேண்டுமென
வேண்டுதல் காணிக்கையை ...
செலுத்த தேடிய போது காணவில்லை ....
உண்டியலை !
''நம்ம ஊர் பழம் இருக்கான்னு கேட்டா ,என்ன பதில் சொல்றது ?''
''அட ,கோவைப் பழம் இருக்கான்னு கேட்டேன் !''
(இதுக்கும் ,கீழேயுள்ள படத்துக்கும் என்ன சம்பந்தம்னு யோசிச்சுச் சொல்லுங்க :)
மஞ்சள் நிறம்தான் அவருக்கு பிடிக்கும் :)
''வியாபாரத்திலே திவால் ஆனவர் ,இப்ப பொண்ணோடகல்யாணத்தை ஆடம்பரமா செய்றாரே ,எப்படி ?''
''அந்த மஞ்சள் நோட்டீசில் சம்பாதித்ததை ,இந்த மஞ்சள் நோட்டீசில் செலவு பண்றார் !'' காதலி செம உஷார் பார்ட்டிதான் :)
''டார்லிங் ,இன்னைக்கு ரீலிஸ் ஆகியிருக்கிற 'சேஷ்டை ' படத்திற்கு போய்தான் ஆகணும்னு ஏன் சொல்றே ?''
'' 'ஹவுஸ் புல்' தியேட்டரில் உங்க 'சேஷ்டை' இருக்காதுன்னுதான் !''
ரொம்ப வெவரமான பயபுள்ளே :)
''என்ன தம்பி ,என் தலைக்கு மேலே எரியுற டியூப் லைட்டைக் கழட்டிக் கொடுக்கச் சொல்றே ?''
''நல்லா எரியுற லைட்டா பார்த்து வாங்கி வரச் சொல்லியிருக்கார் எங்க அப்பா !''
எழுத்துப் பிழையா ?வேணும்னே செய்ததா :)
''வாத்தியார் வீட்டுக் கல்யாணத்திற்கு போவதா ,வேண்டாமான்னு இருக்கா ,ஏன் ?''
''பத்திரிக்கை முதல் வரியில் 'மொய் பொருள் காண்பது அறிவு 'ன்னு எழுதி இருக்காரே !''
கொடுமை கொடுமைன்னு கோவிலுக்குப் போனா :)
கொள்ளைப் போன பொருள் கிடைக்க வேண்டுமென
வேண்டுதல் காணிக்கையை ...
செலுத்த தேடிய போது காணவில்லை ....
உண்டியலை !
|
|
Tweet |
கோடிட்ட இடத்தை நிரப்பச் சொன்னா எப்படி...? கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்... ‘அத்திப்பழம் சிவப்பா... இந்த அத்தைமக சிவப்பா... ஒரு வெள்ளைக்காரப் பொண்ணு இந்தியா வந்தா உன்னைக்கண்டு சிவப்பா...!’
ReplyDeleteமஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே... மஞ்சள் குங்குமத்தோட நீ நீடூழி வாழனும் தாயே...!
‘டார்லிங்... டார்லிங்...’ போகலாம்... உசாரய்யா உசாரு ஓரம் சாரம் உசாரு...!
லைட்ட அணைக்காதிங்க லைட்டா அணைக்காதிங்க...!
மெய்யாகவே சொல்கிறேன்... மொய் செய்ய பணம் ரொக்கமாக இல்லை என்ற கவலை வேண்டாம்... ‘ஸ்சுவைப்’ மெஷின் இருக்கிறது... அதன் பிறகு உணவைச் சுவைத்துப் பாருங்க...வாங்க... வாங்க...வாங்க...!
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே...!
த.ம. 1
வெள்ளைக்காரப் பொண்ணுமா :)
Deleteஅப்பன் பாவம் வாரிசு உன்னை அண்டாதிருக்கணும்:)
ஓரம் கட்டுறதுக்கு அர்த்தமே இப்போதானே புரியுது :)
அதுவும் விளக்கு வச்சவுடன் வேணவே வேணாம் :)
சுவைக்கும் முன் ஸ்வைப்பை கவனீங்க :)
உண்டி எடுத்தோர் உயிர் பிழைப்பாரா :)
கோவையும் கொவ்வையும் ஒன்றா ஜி?!
ReplyDeleteமொய்ப் பொருள் காண்பதறிவு! ஹா ஹா ஹா
அனைத்தையும் ரசித்தேன்.
எவன் கோபாலகிருஷ்ணன் ன்னு சொல்றான் ,சப்பாணின்னுதானே சொல்றான் :)
Deleteஇந்த மொய்ப் பொருள் என்றும் மெமரியில் நிற்கும் :)
கோவைப் பழமா
ReplyDeleteசெவ்வாயா செவ்விதழா
இலக்கியப் பக்கம் தேட வைத்த
நகைச்சுவை ஆச்சே!
இந்த இதழுக்கும் இலக்கியப் பக்கமா :)
Delete// மொய் பொருள் காண்பது அறிவு // ஹா.... ஹா.... ஹா.... ஹா....
ReplyDeleteவள்ளுவர் இருந்தால் நொந்திருப்பாரோ:)
Deleteகோவைப்பழம் ஹி.. ஹி...
ReplyDeleteசிரிக்க அல்ல ,ருசிக்க ஜி :)r
Deleteரசித்தேன்.....
ReplyDeleteகாணவில்லை ....உண்டியலை !கொடுமைதானே இது :)
Deleteமெய்ப்பொருள்!!!ஹ்ஹஹஹஹஹ்
ReplyDeleteஅனைத்தையும் ரசித்தோம் ஜி!!
இந்த மொய்தான் அவருக்கு மெய் :)
Deleteகோவையில் இவ்விதழ் அதிகம் கிடைக்குமோ
ReplyDeleteமஞ்சள் நோட்டீசு அர்த்தமே புரியலை
வீட்டிலே சேஷ்டை அதிகமாயிடுத்தோ
சரியான ட்யூப் லைட்டோ
வாத்தியார் விவரமானவர்தான்
கோவிலுக்குப் போய் கொள்ளை கொடுக்கவில்லையே
ஏதாவது சொல்ல வம்பு வந்திடும் :)
Deleteதிவால் நோட்டீஸ் மஞ்சள் நோடீட்ஸ்தானே:)
தாலியே இன்னும் ஏறலையே :)
உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா :)
அவர் மட்டுமா :)
அதுவும் நடக்கும் :)
// (இதுக்கும் ,கீழேயுள்ள படத்துக்கும் என்ன சம்பந்தம்னு யோசிச்சுச் சொல்லுங்க :)//
ReplyDeleteஇரண்டும் சுவைப்பதற்கே![மன்னிக்க வேண்டும். வயசை மறந்து ஏதோ உளறிட்டேன்]
வயசை மறந்து மனசை இளமையாய் வைச்சுக்கிறது நல்லதுதானே :)
Deleteநல்ல பதிவு க்கு மகிழ்ச்சி
ReplyDeleteநன்றி
Deleteஅந்தக் காதலி தியெட்டரில் உஷராக இருந்து என்ன செய்ய...
ReplyDeleteதி(இ)ருட்டுத் தனம் நடக்காமல் பார்த்துகிட்டால் சரிதான் :)
Deleteமுற்றும் இனிமை! பொங்கல் நல்வாழ்த்துகள்..
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி அய்யா :)
Delete