19 July 2013

தின 'சிரி ' ஜோக்!புருஷன் பெண்டாட்டியை விட்டுக்கொடுக்கலாமா ?

''ரயில் கிளம்பியதில் இருந்து உங்க மனைவி தொதொன்னு பேசிக்கிட்டேதான் இருக்காங்க  ,கன்னடத்திலே பேசுறனாலே புரிய மாட்டேங்குது ,,தலை வலிக்குதே  சார் !''
''வலிக்காதா பின்னே ?கன்னடம் புரியுற எனக்கே தலை தலைவலிக்குதே !''


6 comments:

  1. Replies
    1. ரயில் பயணிக்கே தலை வலிக்குதுன்னா ,வாழ்க்கை பயணம் செய்கின்ற கணவனின் நிலைமை கஷ்டம்தான் !
      நன்றி !

      Delete
  2. அடிக்கடி இந்த வார்த்தையை உபயோகப் படுத்துறோமே ....தொண தொணன்னா என்ன மீனிங் தெரியுமா ...ஆஹா டவுட் வந்திருச்சே...

    ReplyDelete
    Replies
    1. தொளையுண்ட நூறை தொண்ணூறு என்பார்கள் ...ஒருவன் வேண்டுதலுக்காக நாவில் சிறு வேலினால் அலகு குத்திக் கொண்டானாம் ,வேலினை வெளியே எடுத்துவிட்டுப் பார்த்தால் நாவில் தொளை நிரந்தரமாக தங்கிவிட்டதாம் ,அவனால் சரியாகவே பேச முடிய வில்லையாம் தொளையுண்ட நா 'தொணா'ஆகிவிட்டது ! தொல்காப்பிய தமிழ் இலக்கணப்படி ,தொணாஎன்பது இரட்டைக்கிளவியாகி தொணதொணாஎன்றாகிவிட்டது !இப்போது நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடலாம் ....தொணா வந்த வரலாறை தக்க சான்றுகளுடன் தெளிவாக அறிந்துகொண்டோம் ...தொணா என்பதற்கு எந்த அர்த்தமும் இல்லை,அர்த்தமில்லாப் பேச்சை தொணதொணப்பேச்சு என்று சொல்வதன் அர்த்தம் புரிஞ்சுதா கூடல் பாலா அவர்களே !
      .டாக்டரேட் வாங்கும் அளவிற்கு என்னை தமிழ் ஆராய்ச்சி செய்ய வைத்ததற்கு நன்றி !

      Delete
  3. எப்படி அண்ணாச்சி இதெல்லாம்...!!!

    ReplyDelete
    Replies
    1. நான் 'தொணதொண''தமிழ் ஆராய்ச்சி செய்ததால் என்னை 'வங்கிழடு'என நினைத்து அண்ணாச்சி ஆக்கியதை வன்மையாக கண்டிக்கிறேன் !

      Delete