10 October 2013

காதலிக்கவும் இனி கற்றுக் கொள்ளலாம் !

இன்னும் சில வருடங்களில் ...
டாக்டர் வக்கீல் ஆடிட்டர் போல் 
காதல் ஸ்பெசலிஸ்ட்களும் கடை திறக்க இருக்கிறார்கள் ...
குறைந்து விடுமா ?ஒரு தலைக் காதல்...
மறைந்து விடுமா ?ஆசிட் வீச்சுக்கள்...
காதலர்கள் தற்கொலைகள் காணாமல்
போய்விடுமா? 
விடை காண காத்திருப்போம் ...
2014ம் ஆண்டு முதல் கொல்கத்தா பிரெசிடென்சி 
பல்கலைகழகம் 'காதல் 'படிப்பை துவங்குகிறது !
காதல் ஏன் வருகிறது ?
காதலின் நன்மை தீமைகள் என்னவென்று 
சொல்லித்தரப் போகிறார்களாம் !
இந்த படிப்பில் சேர காதலித்து  இருக்க வேண்டுமா ?
காதலில் தோற்றவர்களுக்கு கட்டண சலுகை உண்டாவென்று இனிமேல் தெரிய வரும் !
புதுப் பாடப் பிரிவில் ...
கள்ளக் காதல்,காமசூத்ரா விளக்கங்களும் தந்தால் நாட்டிற்கு மிகவும் நல்லது !

10 comments:

  1. ரொம்ப முக்கியம்

    ReplyDelete
    Replies
    1. அது என் இடுப்பு இல்லே ,என் தொப்புள் இல்லேன்னு நடிகை போராடிக் கொண்டு இருக்கிற நாட்டிலே இந்த படிப்பு முக்கியம் இல்லையா அஜீஸ் ஜி ?
      நன்றி !

      Delete
  2. Replies
    1. அதானே ?தானே வர்றதுக்கு பேர் தானே காதல் ?
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. சேர்ந்து விட வேண்டியதுதான்
    வயதானவர்களுக்கும் ஒரு டிப்ளமோ கோர்ஸ்
    இல்லாமலா இருக்கப்போகிறது

    ReplyDelete
    Replies
    1. ஐம்பதிலும் ஆசை வரும்னு சொன்னது சரியாத்தான் இருக்கு !
      நன்றி ரமணி ஜி !


      Delete
  4. இது சிப்பதற்கான விஷயம் இல்லை.மாறாக கற்றுக்கொடுக்க வேண்டிய விஷயம்/

    ReplyDelete
    Replies
    1. சரிதான் ,ஜோக்காளிக்கு சிரிக்க வைக்கத் தெரியும் ,காதலிக்க கற்று தரும் காதல் மன்னன் இல்லையே !
      நன்றி விமலன் ஜி !

      Delete