29 October 2013

ரஜினி காந்த் ,பிரியங்கா சோப்ரா ...யார் நெனைப்பு சரி ?

நீங்கள் ஏன் அரசியலுக்கு வர விரும்பவில்லை என ...
நம்ம ஊர் சூப்பர் ஸ்டாரைக் கேட்டபோது ...
அடிப்படையில் சில மாற்றங்கள் வந்தால் மட்டுமே ,நான் அரசியலுக்கு வருவதில் அர்த்தம் இருக்கும் என்று கூறினார் !

இப்போது இருக்கின்ற சட்ட திட்டங்கள் ஊழலுக்கு வழிவகுப்பதாக இருக்கிறது என்று அவரும் நினைக்கிறார் !
இப்படியே இருந்தால் என்னால் மட்டுமல்ல ,ஆண்டவனாலும் நாட்டை திருத்த முடியாது என்பதுதான் அதன் பொருள் !
தமிழன் என்றொரு தமிழ் படத்தில் முதலும் ,கடைசியும் நடித்த பிரியங்கா சோப்ரா ...
நான் பிரதமரானால் ஊழலை ஒழித்து கட்டிவிடுவேன் என்று திருவாய் மலர்ந்தருளி யுள்ளார் ...
பிரியங்கா காந்திக்கே வராத ஆசை இவருக்கு வந்து இருக்கிறது ...
ஆசைப்படுவதில் தவறில்லை ...
பிரதமர் பதவியை கால் ஷீட் கொடுத்து பெற்று விட முடியாது ...
பொருளாதார மேதைக்கு அடித்த  அதிர்ஷ்டம் ,அவருக்கும் அடிக்குமாவென தெரியவில்லை !
அவருக்கு ஒரு வேண்டுகோள் ...
ரசிகர்களின் மனம் மகிழ ,உடலை திறந்து காட்டியது போல் ...
நாட்டு மக்களின் மனம் மகிழ ,ஊழலை ஒழிக்கும் ரகசியத்தை மனம் திறந்து கூற வேண்டும் !


14 comments:

  1. அஹா... எல்லாருக்கும் இந்த ஆசை பிடிச்சி ஆட்டுது போல...

    ReplyDelete
    Replies
    1. தேர்தல் நெருங்குவதற்குள் இன்னும் எத்தனை பேர் இப்படி கிளம்பி வரப் போகிறார்களோ ?
      நன்றி குமார் ஜி !

      Delete
  2. பதவி கிடைத்த பின் தான் ரகசியம் சொல்ல முடியும்...! (ரகசியம்=" ")

    ReplyDelete
    Replies
    1. முழு ரகசியத்தையும் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை ,லேசா கசிய விடலாம் அல்லவா ?
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. பதவி ஆசை எல்லாருக்கும் இருக்கு போல. ரகசியம் உங்களின் காதோடு மட்டுமே சொல்வார்.

    ReplyDelete
    Replies
    1. பிரியங்கா சோப்ரா ஆன் லைன் வாக்கெடுப்பில் முதல் இடம் பிடித்தவர் ...முத்தமிட தோன்றும் கவர்ச்சிகர இதழ்களை உடையவர் என்று !அவர் என் 'காதில் 'சொல்லும் ரகசியத்தில் என்ன சுவாரசியம் இருந்துவிடப் போகிறது ?
      நன்றி பாண்டியன் ஜி !

      Delete
  4. பதவியின் மேல் இருக்கும் மோகம்...... என்னத்த சொல்ல!

    ReplyDelete
    Replies
    1. ரசிகர்களுக்கு பிரியங்கா சோப்ரா மேல் மோகம் ,பிரியங்கா சோப்ராவுக்கோ... ?
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  5. பதவி நாற்காலியில்
    குந்தும் வரை தான்
    வாக்குறுதிகள்...
    பதவி நாற்காலியில் குந்தினால்
    நாற்காலியைபப் பேணுவதே வேலை...
    ஆகையால்
    மக்கள் நலன் மறந்திட
    கொடுத்த வாக்குறுதிகள்
    காற்றிலே பறக்கிறதே!

    ReplyDelete
    Replies
    1. பதவி நாற்காலியில் குந்திவிட்டால் ,செலக்டிவ் அம்னிசியா நோய் வருவது தவிர்க்க முடியாதே !
      நன்றி ஜீவலிங்கம் காசிராஜலிங்கம் அவர்களே !

      Delete
  6. ''...நான் பிரதமரானால் ஊழலை ஒழித்து கட்டிவிடுவேன் என்று திருவாய் மலர்ந்தருளி யுள்ளார் ...'''
    ha!...ha!.....

    Eniya vaalththu,
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. நாட்டுப் பற்றோடு அவர் கூறி இருப்பதே ,நமக்கு அருள் கிடைத்த மாதிரிதானே ?
      நன்றி கோவைக்கவி அவர்களே !

      Delete
  7. வணக்கம்

    பதிவு அருமை வாழ்த்துக்கள் நண்பரே...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பல பேரின் கனவு கன்னி தன் கனவை கூறியுள்ளார் ...அதை மக்களிடம் கொண்டு செல்லா விட்டால் பதிவராய் இருந்து என்ன புண்ணியம் ?அதான் ...இந்த பதிவு !
      நன்றி ரூபன் ஜி !

      Delete