28 October 2013

மனிதம் மறந்தவர்களுக்கு மகாத்மாவும் ,மலாலாவும் ஒன்றுதான் !

அன்று ...
'இந்து 'மகாத்மாவைக் கொன்றது இந்து மதத் தீவிரவாதம் ...
இன்று ...
'முஸ்லீம் 'மலாலாவைக் கொல்லத் துடிக்கிறது  முஸ்லீம் தீவிரவாதம் ..
.
மகாத்மா காந்தி நல்லவர்தான் ,நாட்டுக்காக பாடுபட்டவர்தான் ...
வெள்ளையருக்கு எதிராகவும் ,முஸ்லீம்களுக்கு ஆதரவாகவும்தான் பதினெட்டு முறை உண்ணாவிரதம் இருந்தார் ...
ஒருமுறைக் கூட இந்துக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்ததில்லை ...
நான் ஒரு இந்து ,ஆனால் காந்தி இந்துவாக ஒருபோதும் நடந்துக் கொள்ளவில்லை ...
முகமத் கரம்சந்த் காந்தி என்றே அவரை சொல்வேன் ...
இது ...மகாத்மாவைக் கொன்ற கோட்சேயின் கருத்து !
அதே நேரத்தில் ...ஒரு உண்மை இந்து மறைந்தார் என கருத்தை சொன்னார் முகமது அலி ஜின்னா !
தாலிபான்களின் துப்பாக்கி சூட்டிலிருந்து உயிர் தப்பிய மலாலா 'நான் மலாலா 'என புத்தகம் எழுதியுள்ளார் ...
அதை பாகிஸ்தானில் விற்கவிடாமல் தடைசெய்த தாலிபான்கள் ...
மலாலா எங்களிடம் சிக்குவார் ,கொல்லுவோம் என்று கொக்கரித்து இருக்கிறார்கள் !
அன்றும் ,இன்றும் ...
எந்த ம[ட ]தத் தீவிரவாதிகள்  ஆனாலும் மனிதம் மறந்துதான்  செயல்படுகிறார்கள் !



17 comments:

  1. மதத்தில் பெயரால் மனிதம் புறக்கணிக்கப் படுவது வேதனை

    ReplyDelete
    Replies
    1. தீவிரவாதம் தொலைந்தால்தான் மனித குலத்திற்கு சாப விமோசனம் !
      நன்றி ஜெயகுமார் ஜி !

      Delete
  2. மனிதம் தொலைந்து போய் வெகு நாட்கள் ஆகி விட்டது...!

    ReplyDelete
    Replies
    1. தொலைந்த மனிதம் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே உலகம் அமைதி பெறும் !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  3. மறந்து போன மனிதம்...... :(

    ReplyDelete
    Replies
    1. அனைவரின் மனதிலும் புனிதமான மனிதம் மலரும் நாளே பூவுலகின் திருநாள் !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  4. அன்று ...
    'இந்து 'மகாத்மாவைக் கொன்றது இந்து மதத் தீவிரவாதம் ...
    இன்று ...
    'முஸ்லீம் 'மலாலாவைக் கொல்லத் துடிக்கிறது முஸ்லீம் தீவிரவாதம்
    தெளிவான உண்மை!

    ReplyDelete
    Replies
    1. உயிரைக் கொல்வது மூடத்தனமான இறை நம்பிக்கை என்றே படுகிறது !
      நன்றி அய்யா !

      Delete
  5. மனிதத்தைக் குழி தோண்டி புதைத்து விட்டு அதைத் தேடுதல் என்று கூறிக் கொண்டு நாம் எதையோ நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கிறோமே. எல்லா மதமுமே அன்பைத்தான் போதிக்கின்றன. ஆனால் மதவாதிகள், மக்கள் எல்லாரும் அந்த அன்பை மறந்து தொலைத்து விட்டு மதத்தை வெறித்தனமாக, கடவுள்/சாமி குத்தம் என்ற பெயரில், மத, ஜாதிச் சடங்குகளை மட்டும் பின்பற்றுவதால் வரும் விளைவு. இது தலை இல்லாத உடலுக்கு அலங்காரம் செய்வது போல். Love is GOD/அன்பே சிவம்/கடவுள். னம்ம தமிழ் படம் 'அன்பே சிவம்' கூட இதைத்தன் பேசியது....கமல், மாதவன் டயலாக்ஸ்....'தெந்நாடு சிவனே போற்றி' நாஸர்.....

    ReplyDelete
    Replies
    1. தீவிரவாதிகளை பார்க்கும் போது (மீடியாக்களில்தான் )அன்பே சிவம் வசனம்தான் நினைவுக்கு வருகிறது...கடவுள் இல்லைன்னு சொல்லலே ,இருந்தா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன் !
      நன்றி துளசிதரன் ஜி !

      Delete
  6. நல்ல ஒரு பதிவு, பகவான்ஜி!

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிற்கு நன்றி !

      Delete
  7. Replies
    1. ஜோக்காளி சொல்வதெல்லாம் உண்மையன்றி வேறில்லை ,இல்லையா குமார் ஜி ?
      நன்றி !

      Delete
  8. மதம் பிடித்தால் அழிவுதான்
    யானை ஆனால் என்ன
    மனிதன் ஆனால் என்ன ?

    ReplyDelete
    Replies
    1. மதம் பிடித்த யானையைக் கூட அங்குசம் கொண்டு அடக்கிடலாம் ,ஆனால் மதம் பிடித்த மனிதனை ....?
      நன்றி !

      Delete
  9. நன்றி ரமணி ஜி !

    ReplyDelete