15 October 2013

கொசுக் கடியில் இருந்து விடுதலையாக ....!

தக்காளிக்கு கொசுவை விரட்டும் சக்தி உண்டென்று ஆராய்ந்து கண்டுபிடித்து இருக்கிறார்கள் ...
தக்காளி சாறை பூசிக் கொள்வதா ?
தக்காளி சாஸை தடவிக் கொள்வதா ?
தக்காளி ரசத்தைக் குடித்தால் போதுமா ?
தக்காளியை கடித்தாலே போதுமா ?
தக்காளி செடியை படுக்கையை சுற்றி வைத்துக் கொள்ளலாமா ?
தக்காளியை  படுக்கை முழுவதும் பிழியலாமா ?
இதில் எதை செய்தால் கொசுக்கடியில் தப்பிக்கலாம் என்று ஆராய வேண்டியது உங்கள் பொறுப்பு ...
இதுக்கு கொசுக்கடியே தேவலை என்றால் ...விட்டு விடுங்கள் !




12 comments:

  1. வணக்கம்
    இரண்டும் கெட்ட நிலையில் உள்ளேன் தக்காளி பயன்படுத்தவதா?அல்லது நுளம்பு(கொசு) வலை பயன்படுத்தவதா?தக்காளிவேண்டாம் நுளம்பு(கொசு)வலையை பயன்படுத்துகிறேன்....சிந்திக்கவைக்கும் பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் செய்தது நல்ல முடிவுதான் ,கொசுவை நுளம்பு என்பதும் நல்ல சொல்லாகவே படுகிறது !
      நன்றி ரூபன் ஜி !

      Delete
  2. ஆம் கொசுக்கடியே
    தேவலாம்போலத்தான் படுகிறது
    தகவல் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்க பக்கத்து வீடு காலியானால் சொல்லுங்க ,குடி வந்து விடுகிறேன் ,கொசுக்கடியே தேவலாம்னு நீங்கள் சொல்வதால் !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  3. தக்காளி விலை இன்னும் ஏறப் போகிறது...!!!

    ReplyDelete
    Replies
    1. விலை ஏத்துறவங்க மேலே தக்காளியாலே அடிப்போமா தனபாலன் ஜி ?
      நன்றி !

      Delete
  4. தக்காளி படத்தை படுக்கை அறைல தொங்க விட்டா கொசு உள்ள வராதோ!?

    ReplyDelete
    Replies
    1. ஒரிஜினல் தக்காளியை தொங்க விட்டா அடிக்கடி மாத்துற வேலை வரும்னு ,நிரந்தர தீர்வு கண்ட உங்களுக்கு பாராட்டுக்கள்....இதே பாணியில் நம்ம மீனவர் பிரச்சினைக்கும் நிரந்தர தீர்வு சொல்லுங்க ராஜி மேடம் !
      நன்றி !

      Delete
  5. ஒவ்வொரு கண்டுபிடிப்பின் போதும் கொசுக்கூட்டம் பயங்கரமாக பல்கி பெருகி மூர்க்கமாக போர்தொடுத்து வெற்றி வாகை சூடிவருவது. கடைவிரிப்பாளர்க்கு தெரியவில்லை ........

    ReplyDelete
    Replies
    1. கடை விரிப்பவர்கள் நோக்கம் கொசுவை ஒழிப்பதல்ல ,விரட்டுவதே !கொசு இனமே அழிஞ்சுப் போச்சுன்னா கோடிகோடியாய் சம்பாதிக்க முடியாமல் போய்விடுமே !
      நன்றி தோழரே !

      Delete