24 October 2013

கற்பழிப்பை காவல் நிலையத்தில் சொல்லலாமா ?

தங்கள் வாகனம் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் செய்யபடாமல்  ,தெருக்களில் நின்று கொண்டிருக்கிறது ...
இதனால் திருடு போக வாய்ப்புள்ளது ...

அவ்வாறு ஏதேனும் திருட்டு ஏற்பட்டால் தாங்களே முழுப் பொறுப்பாவீர்கள் !
                       இப்படி வாசகங்களை கொண்ட போஸ்டர்களை...
சேலத்தில் உள்ள ஒரு ஏரியா வீடுகளில் ஒட்டியிருப்பவர்கள் யாரென்று தெரிந்தால் ...
மூக்கின் மேல் விரலை வைக்கத் தோன்றாது ...
நெற்றியில் அடித்துக் கொள்ளத் தோன்றும் ...
ஆமாம் ,அந்த ஏரியா காவல் நிலையத்தின் சார்பில்அந்த போஸ்டர் அடிக்கப் பட்டுள்ளது !
அடுத்ததாக ...
உங்கள் வீட்டை கொள்ளையில் இருந்து ...
உங்கள் கற்பை  கயவர்களிடம் இருந்து ...
உங்கள் உயிரை எதிரிகளிடம் இருந்து ...
பாதுகாத்துக் கொள்வது உங்கள் பொறுப்பு ,அதையும் மீறி அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டால் ...
காவல் நிலையத்தை அணுக வேண்டாம் !
            இப்படி வாசகங்களைக் கொண்ட போஸ்டரை எதிர்ப்பார்க்கலாம் !

27 comments:

  1. அது சரி...
    உண்மையைத்தான் சொல்லியிருக்காங்க... அவங்களால முடியலைதானே...

    ReplyDelete
    Replies
    1. முடியலேங்கிறதை இப்படியா பப்ளிகுட்டி ஆக்குறது ?
      நன்றி குமார் ஜி !

      Delete
  2. பாது காத்துக் கொள்ளும் முதற் கடமை நமதல்லவா

    ReplyDelete
    Replies
    1. கள்ளன் பெரிதா ,காப்பான் பெரிதாங்கிற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது வாத்தியாரே!
      நன்றி ஜெயகுமார் ஜி !

      Delete
  3. வரும் முன் காப்போம் என்பதைத் தான் சொல்லி இருக்காங்க போல!

    ReplyDelete
    Replies
    1. தாங்களே முழுப் பொறுப்பு என்ற வாசகம் போடாமல் இருந்தால் நீங்கள் சொல்வது சரி !
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  4. தொப்பை வளர்க்கும் "வேலை" இருக்கிறதோ...?

    ReplyDelete
    Replies
    1. கருவை மரம் வளர்க்க யாரும் விதை தூவ வேண்டியதில்லையே!
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  5. ரைட்டு....

    இது அபத்தம்தான்...

    ஜாக்கிரதையாக இருங்கள் என்று சொல்லியிருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. அபத்தம் தொடர்கதை ஆகி விடக் கூடாது !
      நன்றி சௌந்தர் ஜி !

      Delete
  6. ஆம் நிச்சயம் எதிர்பார்ககலாம் தான்

    ReplyDelete
    Replies
    1. சொல்லாமல் செய்பவர்கள் பெரியவர்கள் ,நம்மை எதிர்ப்பார்க்க வைத்து விட்டார்களே !
      நன்றி !

      Delete
  7. அதுதானே அவர்கள் நடைமுறை! இதற்கு விளம்பரம் வேறா!

    ReplyDelete
    Replies
    1. அதுதானே ,பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு ?
      நன்றி அய்யா !

      Delete
  8. "இது தாண்டா போலீஸ்" !! இப்படித்தாங்க தோணுது பகவான்ஜி. பாதுகாப்பற்ற சூழல்ல வாழணும்னு.....என்ன செய்ய நம்ம தலையெழுத்து....அப்ப காக்க காக்க சூர்யா? வேட்டையாடு விளையாடு கமல்? சத்யம் விஷால்?

    ReplyDelete
    Replies
    1. வால்டர் வடிவேல்தான் என் சாய்ஸ்!
      நன்றி துளசிதரன் தில்லைஅகத்து அவர்களே !

      Delete
  9. எதுவும் நடக்கலாம்!!

    ReplyDelete
    Replies
    1. அதனாலே ,நாலும் தெரிஞ்சு நாமதான் நடந்துக்கணும் ,இல்லையா ?
      நன்றி ராஜி மேடம் !

      Delete
  10. முழு பொறுப்பும் நம்மீது திணித்துவிட்டு அவர்கள் எங்கு சென்று அது ? வாங்குவதாக உத்தேசம் என்று தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. வாகனம் தொலைந்ததென்று FIR போடச் சொன்னாலே காசைக் கறப்பவர்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும் !
      நன்றி அரசன் ஜி !

      Delete
  11. தலைப்பை பார்த்தவுடனே நினைத்தேன். ஏதாவது குண்டக்க மண்டக்க எழுதி சிரிக்க வைப்பீங்கன்னு

    ReplyDelete
    Replies
    1. நீங்க பதிவை சீரியஸாப் போட்டு மக்களுக்கு சொல்றீங்க ,நான் சிரிக்கிற மாதிரி செய்தியை சொல்றேன் ,இல்லையா ,ஜோதிஜி சார் ?
      நன்றி !

      Delete
  12. காவல்துறை நண்பர்களால் முடியாதுனு சொல்றது முட்டாள் தனம். அவங்க விழிக்கவே இல்லைங்கறது தான் உண்மை. எழுப்பி விட்டு போதுமான அதிகாரங்கள் கொடுத்து பாருங்கள் பொங்கி எழுவார்கள் என்று சொல்லத் தான் ஆசை. ஆனா முடியலையே!! நீங்கள் சொன்னதும் கண்டிப்பாக வரும் காலம் வெகு தூரத்தில்லை. பகிர்வுக்கு நன்றீங்க சகோ.

    ReplyDelete
    Replies
    1. அது சரி ,தூங்கிற மாதிரி நடிக்கிறவங்களை எப்படி எழுப்புவது ?
      நன்றி பாண்டியன் ஜி !




      ?

      Delete
  13. இப்படி வெறும் போஸ்டர் அடிக்கவா போலிசுக்கு சம்பளமும் அதிகாரங்களும்?

    ReplyDelete
    Replies
    1. ப்ளெக்ஸ் பேனர் வைக்கலைன்னு சந்தோசப் பட வேண்டியது தான் !வேற வழி ?
      முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பந்து ஜி !

      Delete