4 October 2013

இந்தியா சுய காலில் நிற்பது எப்போது ?

யானைக்கும் அடி சறுக்கும் ...
அமெரிக்காவில் எட்டு லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ...
தென்னையில் தேள் கொட்டினால் பனையில் நெறி கட்டணுமே...
இங்கே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு அமெரிக்க பொருளாதாரச் சரிவு தான் காரணம் என்றார்கள் !
உலக தாதா அமெரிக்க யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளட்டும் ...
அந்த மண் நம் தலையிலும் விழும் என்றால்... 
நாம் கடைப் பிடிப்பது சுய சார்பு பொருளாதாரக் கொள்கைதானா ?

18 comments:

  1. Replies
    1. உங்களைதான் மலையா நம்பிக்கிட்டு இருந்தேன் ,ஒரே வார்த்தையிலே 'தெரியலே 'ன்னு சொல்றது நியாயமா பாஸ் ?
      நன்றி கவியாழி அவர்களே !

      Delete
  2. சுய சார்பு கொள்கையா
    சுய சார்பு கொள்ளையா?
    எது என்றாலும் 'பசி'க்கும் 'மண்'ணுக்குமே ஆதாயம்

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் என்ன செய்வார்கள் ?மேலே இருந்து ஒருத்தன் ஆட்டுறான் ,ஆடுகிறார்கள் !
      நன்றி அஜிஸ் ஜி !

      Delete
  3. எதைத்தான் உறுதியாக கடைப்பிடித்தோம்...?

    ReplyDelete
    Replies
    1. இப்படி கொள்கையில் ஊசலாட்டம் இருந்தால் இந்தியா உயர்வது எப்படி ?
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  4. யோசிக்கனுமே

    ReplyDelete
    Replies
    1. யோசிக்கவேண்டியவங்க யோசிச்சு ஒரு முடிவுக்கு வரட்டும் !
      நன்றி ராஜி மேடம் !

      Delete
  5. நம்ம ஊரில் அனுமதி இல்லாவிடினும் முதலில் செலவு செய்துவிட்டுப் பிறகு 'ratification'
    வாங்கலாம். ஆனால் அமெரிக்காவில் இது நடைமுறையில் இல்லை. எனவே, நாளைய செலவுக்கு இன்றுவரை அனுமதி இல்லை என்றால், உடனடியாக 'முக்கியமல்லாத' துறைகள் மூடப்பட்டு, செலவினம் கட்டுப்படுத்தப்படும். இதுவரை ௧௭ (17) முறை இதுபோல் நடந்துள்ளது. அது சரி, இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்டுள்ள செலவினங்களில் அதிபர் ஒபாமாவின் சம்பளமும் அடங்கக்கூடும் என்பது தெரியுமா? அதாவது, ஒரு மாதத்திற்குள் இந்த இழுபறி (impasse) நிலைமை சரியாகவிடில் அவருக்கும் அடுத்த மாதச் சம்பளம் கிடைக்காது!

    ReplyDelete
    Replies
    1. கேட்பதற்கு வியப்பளிக்கும் தங்கள் விளக்கத்திற்கு நன்றி !
      இந்த நடைமுறை சிக்கலினால் தினசரி நூறு கோடி வருமானம் இழப்பு ஏற்படும் என்று சொல்லப் படுகிறது ...பிறகேன் இப்படி ஒரு நிதிக் கொள்கையை கடைபிடிக்கவேண்டும் ?வெளியிலே புலி வீட்டிலே எலி பழமொழிதான் நினைவுக்கு வருகிறது ?
      வருகைக்கும்,கருத்திற்கும் நன்றி!

      Delete
  6. Replies
    1. திருவிளையாடல் தருமி மாதிரி கேட்கத்தான் முடியுது ,உரிய பதில்தான்... ???
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  7. நீங்கள் சொல்வது சரியே

    ReplyDelete
    Replies
    1. உலகை ஆட்டிப் படைக்க நினைக்கும் ஒபாமாவை ,எதிர்க் கட்சிகள் ஆட்டிப் படைப்பதும் சரியே !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  8. மங்கள்யான் வெற்றிகரமாக திரும்பி வந்ததும்.....இந்தியா சுய காலில் நிற்க்கும்!

    ReplyDelete
    Replies
    1. விண்வெளி ஆராய்ச்சியில் வேண்டுமானால் சுயகாலில் நிற்பதாக சொல்லிக்கலாம் .கல்லாமையும் ,இல்லாமையும் இல்லாமல் போனால்தான் சுயகாலில் நிற்பதாக அர்த்தம் !
      நன்றி நம்பள்கி ஜி !

      Delete