27 October 2013

ஒட்டு கேட்பது பெண்கள் குணம் மட்டுமல்ல !

அடுத்தவர் பேசுவதை ஒட்டுகேட்பது பெண்கள் குணம் என்றுதான் நம் தமிழ் திரைப்படங்களில் காட்டி வந்து இருக்கிறார்கள்...

அமெரிக்க வெள்ளை மாளிகைக்கும் ,ராணுவ மையமான பென்டகனுக்கும் அந்த குணம் உண்டென்று தெரிய வந்துள்ளது ...
உலகில் உள்ள முக்கிய தலைவர்கள் முப்பத்தைந்து பேரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப் பட்டுள்ளது ...
இதனால் கொதிப்படைந்த ஜெர்மன் தன் கண்டனத்தை தெரிவிக்க ...
இனிமேல் இப்படி நடக்காதென்று உறுதி  அளித்துள்ளார் ஒபாமா !
ஏற்கனவே பேஸ்புக் ,கூகுள்,யாகூ இணைய தளங்கள் மூலமாய் நம் அனைவரின் அந்தரங்கத்திலும் 'கழுகு'மூக்கை நுழைத்தது அம்பலமானது...
அமெரிக்கா தனி மனித சுதந்திரத்தை ...மிகவும் மதிக்கும் நாடல்ல ...
மிதிக்கும் நாடு என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது !
இந்த கேடு கேட்ட காரியத்திற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய நம் இந்தியா ...
நம் பிரதமருக்கு செல்போனும் இல்லை ,இ மெயில் முகவரியும் இல்லை ...
ஒட்டு கேட்டிருப்பதற்கு வழியே இல்லை என இயலாமையை பறைசாற்றிக் கொண்டுள்ளது !

19 comments:

  1. தலை மேலே இருப்பது
    ஒய்யாரப் பூவாம்
    உள்ளே இருப்பது
    அதுவும் இதுவுமாம் கதைதான்...

    ReplyDelete
    Replies
    1. வல்லான் வகுத்ததே சட்டம் என்று அமெரிக்கா உலக ரௌடி'ரதொரே 'வாக செயல் படுவது உலக அமைதிக்கு நல்லதல்லவே !
      நன்றி ரமணி ஜி !

      Delete
  2. எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பது அவர்களுக்கு கைவந்த கலை.....

    ReplyDelete
    Replies
    1. இதையே வெனிசுலா ,கியூபா போன்ற நாடு செய்திருந்தால் ராணுவ தாக்குதலை தொடங்கி இருக்குமே அமெரிக்கா!
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  3. இயலாமை இல்லை... அது சோம்பேறித்தனம்...

    ReplyDelete
    Replies
    1. அதுசரி ,முடிவு எடுக்கிற அதிகாரம் இருந்தால் அல்லவா செயல் படுவதற்கு ?
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  4. Replies
    1. யார் ஒபாமா அய்யாவா பாவம் ? நம்ம நிலைமைதான் ஐயோ பாவம் !
      நன்றி ஜெயகுமார் ஜி !

      Delete
  5. வெட்ட வெளிச்சமாகும் ரகசியங்கள்??!!!! ஊருக்கே தெரியுமேங்க.....நம்ம பிரதமர் ரொம்ம்ம்ப ஏழைனு!........ரொம்ப ஸிம்பிள்னு!.....கை சுத்தமானவர்னு....அதான் மொபைல், கம்ப்யூட்டர் எல்லாம் யூஸ் பண்ண மாட்டார்னு.....கிருமி ஏதாவது தொத்திருச்சுனா.........வயசாகி வேற போச்சுங்க....உங்களுக்குத் தெரியாதா என்ன!!.......பாவம் விட்டிருங்க பாஸ்!! நமக்கு சுதந்திரம் ஏதோ கிடைச்சுச்சுனு பேசிக்கிட்டாங்களே......ரொம்ப வருஷம் ஆச்சுனு வேற...அப்படிங்களா? அதான் சுதந்திரமா விட்டுட்டாங்க போல!!!

    ReplyDelete
    Replies
    1. அவரை நினைத்தால் ...ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே ...என்ற பாடல்தான் என் காதில் ஒலிக்கிறது !
      நன்றி துளசிதரன் ஜி !

      Delete
    2. ரொம்ப கரெக்டுங்க, பகவான் ஜி !

      Delete
    3. பாடலை ரசித்ததற்கு நன்றி துளசிதரன் ஜி !

      Delete
  6. இது இந்திய அரசின் இயலாமையை காட்டுகிறது! அமெரிக்காவின் கேவலமான செயல் கண்டிக்கத் தக்கது!

    ReplyDelete
    Replies
    1. கேவலத்தை தட்டிக் கேட்பாமல் இருப்பதும் கேவலமான செயல்தான் ,இல்லையா சுரேஷ் ஜி ?
      நன்றி !

      Delete
  7. உலகத்திற்கே பெரியண்ணன் என்ற நினைப்பு அமெரிக்காவுக்கு எப்பவும் உண்டு. பிள்ளையும் கிள்ளி விட்டு தொட்டியும் ஆட்டுகிற வேலையைத் தான் அமெரிக்க பல காலம் செய்து கொண்டிருக்கிறது. பகிர்வுக்கு நன்றீங்க சகோதரரே...

    ReplyDelete
    Replies
    1. நமது தொப்புள் கொடி உறவுகளை சூட்டு வீழ்த்திய சுண்டைக்காய் இலங்கையை தட்டிக் கேட்க முடியாத இவர்களா பெரியண்ணனை கேட்கப் போகிறார்கள் ?
      நன்றி பாண்டியன் ஜி !

      Delete
  8. தங்கள் சிந்தனையும் என் சிந்தனையும் ஒன்று போல இருக்கிறதே!
    அப்படின்னா “Great Men Think Alike” ன்னு சொல்றது தப்பு!
    “One Great man (You) and an Ordinary Man (me) also Think alike” ன்னு சொல்றதுதானே சரியானது? ளுழ... றுந யசந ளயடைபெ வொ ளயஅந டிழயவ! (சாரி... ஆங்கிலம் என்று நினைத்து எழுத்துருவை மாற்றாமலே அடிச்சுட்டேன் போல.!) So we are sailing in the same..நன்றி.

    ReplyDelete