26 October 2013

'சின்ன வீடு'க்கு அங்கீகாரமா இந்த தீர்ப்பு ?

முதல் திருமணத்தை மறைத்து  2வது திருமணம் செய்திருந்தால் ,ஹிந்து திருமண சட்டப்படி கணவரிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கு 2வது மனைவிக்கும் உரிமை உண்டு ...

இப்படி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதி மன்றம் !
ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது பண்பாடு என்று சொல்லிக்கொண்டே ...
ஊருக்கு ஒருத்தியை வைத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு இத்தீர்ப்பால் நெருக்கடி அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது ...
இதுவரை தாலி இல்லாமல் இருந்த கள்ளக்காதலிகள்  சட்டப் பாதுகாப்புக்காக தாலி கட்டச் சொல்லி நெருக்கடி தந்தால் ...
கள்ளக் காதலன் தாலியும் தரலாம் ...
இதென்ன வம்பு என்று ஒரேயடியாய் ஜோலியும் முடிக்கலாம் ...
கள்ளக் காதல் கொலைகளுக்கு இனி பஞ்சம் இருக்காது ...
முதல் திருமணத்தை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டார் என்று ஜீவனாம்ச வழக்குகளுக்கும்  இனி பஞ்சம் இருக்காது ...
உச்ச நீதிமன்ற தீர்ப்பு தரும் உற்சாகத்தால்  சின்னவீடு பெருக்கத்திற்கும் இனி பஞ்சம் இருக்காது ...


8 comments:

  1. நடக்கட்டும்... நடக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. என்னவோ கல்யாணத்திற்கு ஆசீர்வதிக்கிற மாதிரி சொல்றீங்களே ,குமார் ஜி ?
      நன்றி !

      Delete
  2. அது சரி..... நல்லா இருந்தா சரி!

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருக்கணும்னு தானே நீதிமன்றம் தீர்ப்பே வழங்கி இருக்கு ?
      நன்றி வெங்கட் நாகராஜ் ஜி !

      Delete
  3. எல்லாக் கொடுமையும் அதிகமாகும் போல...

    ReplyDelete
    Replies
    1. ஒசோன்லே விழுந்த ஓட்டையில் வெயில் அதிகமாகுது ...
      சட்டத்தில் விழுந்த ஓட்டையில் கொடுமை அதிகமாகுது !
      நன்றி தனபாலன் ஜி !

      Delete
  4. தீர்ப்பு தரும் உற்சாகத்தால் சின்னவீடு பெருக்கத்திற்கும் இனி பஞ்சம் இருக்காது ...//நல்ல யோசனையா?

    ReplyDelete
    Replies
    1. வழிகாட்டுதலா என்று கேட்காமல் யோசனையா என்று கேட்டதுக்கு நன்றி கவியாழி அவர்களே !

      Delete