6 January 2014

போதையில் மிதக்கலாம் (?) தியானத்தில் மிதக்க முடியுமா ?

''இன்ஸ்பெக்டர் சார் , என் வீட்டுக்காரரை காணலே ,கண்டுபிடிச்சு கொடுங்கன்னு மனு கொடுத்தா ஏன் வாங்க மறுக்கிறீங்க ?''
''மொட்டை மாடியில் தியானம் பண்ணிக்கிட்டு இருந்தவர் ,அந்தரத்தில் பறந்து  போனதாச்  சொல்றீங்களே !'' 

18 comments:

  1. அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு

    ReplyDelete
    Replies
    1. அய்யா பேர்லே இருக்கிற பணத்தை வாங்க ஒரு FIR போடச் சொல்ற அம்மாவோட கஷ்டம் எனக்கும் புரியுது !
      நன்றி

      Delete
  2. ஹா...ஹா....ஹி....ஹி....
    அதுசரி அய்யா....இந்த காலத்து அம்மணிகள் வீட்டுக்காரு காணவில்லை என்றால் சாமிக்கு இரண்டு தேங்காய் உடைப்பார்கள்..........

    ReplyDelete
    Replies
    1. போனதுக்கு ரெண்டு தேங்காய்ன்னா,திரும்ப வரக் கூடாதுன்னு நாலு தேங்காய் சேர்த்து உடைப்பார்கள் !
      நன்றி

      Delete
  3. Replies
    1. சரக்கு புதுசோ .பழசோ உள்ளே போனால் மிதப்பது உண்மைதானே ?
      நன்றி

      Delete
  4. Replies
    1. அவரைக் காணலேன்னு வருத்தப் படவேண்டியவங்களே வருத்தப் படலே,நீங்க ஏன் 'அடடா'ங்கிறீங்க ?
      நன்றி

      Delete
  5. ம்ம்ம்ம். சரிதான் “அவன் பறந்து போனானே....” எனப் பாடி விடப்போகிறார்!

    ReplyDelete
    Replies
    1. என்னை மறந்து போனானேன்னு அடுத்த வரியைப் பாடுவாங்களான்னு தெரியலே !
      நன்றி

      Delete
  6. வணக்கம்
    அருமையாக உள்ளது.. வாழ்த்துக்கள் தலைவா...


    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை ,அறையில் தியானம் செய்யாமல் போனார் ,செய்திருந்தால் மின் விசிறியில் அடியாகி இருப்பார் !
      நன்றி

      Delete
  7. அந்தரத்தில் பறந்துட்டாங்களா?
    நம்ப முடியவில்லையே!

    ReplyDelete
    Replies
    1. அந்த இன்ஸ்பெக்டரும் நம்பாமத்தான் மனுவை வாங்க மறுக்கிறார்!
      நன்றி

      Delete
  8. நல்ல நகைச்சுவை! இதற்கு நேற்றே பின்னூட்டம் இட்டோம்! ஏன் பதிவேறாமல் போனது என்று தெரியவில்லை. நேற்று நெட்டும் மிகவும் தகறாரகத்தான் இருந்தது!

    தியானம் பற்றிக்குறிப்பிடும் போது எனக்கு (கீதா) ஒரு அனுபவம். பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது எனது ஒரு ஆசிரியையின் கணவர், 30, 32 வருடங்களுக்கு முன்னால், அப்போது இருந்த சின்மயா குருஜி அளித்த பயிற்சியை இமயமலையில் உள்ள அவர்களது இன்ஸ்டிட்யூட்டில் யோகா, தியானப் பயிற்சிகளை முறையகக் கற்றுக் கொண்டு வந்து எங்கள் ஊரில் வகுப்புகள் நடத்தினார். மிகவும் நல்ல மனிதர்! அவர் தியானம் செய்யும் போது ஒரு சில அடிகள் எழுவதை நான் நேரில் கண்டுள்ளேன்! அவருக்குத் தெரியாமல்தான்! எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருக்கும்! அது போல salt sea ல் ஒரு பெண்மணி எந்த உபகரணமும் இல்லாமல் மிதப்பதையும், மிதந்து கொண்டே புத்தகம் வாசிப்பதையும் சில வருடங்கள் கழித்து மிகப் பிரபலமாக படங்களாக வந்ததையும் பார்த்திருக்கின்றேன்! அதற்கு அறிவியல் விளக்கம் உண்டு! அது போல் இதற்கும் இருக்கலாம் என்று நினைத்தது உண்டு! யாரேனும் விளக்கினால் நன்றாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. என் நண்பர் ஒருவரும் தான் அந்தரத்தில் மிதப்பது போன்ற படத்தைக் காண்பித்தார் ,நேரில் நான் பார்க்க வேண்டும் என்றேன் ,இதுவரையிலும் செய்து காட்டவில்லை !
      நன்றி

      Delete