25 January 2014

இவனை வரதட்சணைக் கேஸில் தூக்கிலே போடணும் !

''என்னம்மா ,குண்டைத் தூக்கி போடுறே ... டைவர்ஸ்  நோட்டீஸ் கொடுக்கப் போறீயா ,ஏன் ?''
''உங்கப்பாதான்  பாங்கிலே பெரிய ஆபீசராச்சே ,உடனே  நம்ம வீட்டிலே ஒரு ATM மெசினைக் கொண்டு வந்து வைக்கச் சொல்லுங்கிறாரே !'' 

23 comments:

  1. Replies
    1. பீரோவை சுலபமா உடைத்து கொள்ளை அடித்துக் கொண்டு போய் விடுவார்கள் என்பதால் ,உடைக்கவே முடியாத ATM மெசினைக் கேட்டது தப்பா ?
      நன்றி

      Delete
    2. இன்றைய செய்தித் தாளில் ஒரு செய்தி படித்தீர்களா? கொள்ளையடிக்க வந்தவர்கள் வீட்டில் ஒன்றுமில்லை என்றதும் அந்த பீரோவை சுக்கல் சுக்கலாக உடைத்துப் போட்டு விட்டுப் போயிருக்கிறார்களாம். அந்த வீட்டுக்கார அம்மாள் தன்னிடமிருந்த ஒரே 3 பவுன் சங்கிலியை அணிந்து கொன்று சென்று விட்டதும், பீரோவில் பழைய துணிகள் மட்டுமே இருந்ததும் காரணமாம்!

      Delete
    3. அந்த அம்மாள் சங்கிலியை அணிந்து 'கொன்று '?சென்று விட்டாரா ?நல்ல வேளை,கொள்ளைக்காரர்கள் கொல்லாமல் விட்டார்களே !
      atm மெசினை இப்படி உடைக்க முடியுமா ?
      நன்றி

      Delete
  2. டைவர்ஸ் நோட்டீஸ் உடனே தேவை தான்...!

    ReplyDelete
    Replies
    1. இனி சேர்ந்து வாழ வழியே இல்லேன்னு உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா ?
      நன்றி

      Delete
  3. Replies
    1. atm மெசினை வீட்டிலே வீட்டில் வைத்துக் கொள்வதை சட்டம் அனுமதிக்கிறதான்னு வக்கீலான நீங்கதான் சொல்லணும் பாஸ் !
      நன்றி

      Delete
  4. அதுக்கு அந்த பொண்ணோட அப்பா வரும் தேர்தலில் நின்னு எம்பியாகனும்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா MP ஆனால்தான் முடியும் .ஒவ்வொரு முறையும் atm மெசினில் ஐம்பது லட்சம் வைக்கணும்னா சும்மாவா ?
      நன்றி

      Delete
  5. இனி வரதட்சணை கேட்க இதுவும் நல்ல ஐடியாவாகத்தான் இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. atm ல் இருந்து யார் வேண்டுமானாலும் பணத்தை எடுக்கலாம் ,யார் உள்ளே வைக்கிறது ?
      நன்றி

      Delete
  6. Replies
    1. பீரோவுக்கு பதிலா atm மெஷின், சீர்வரிசையில் சேர்ந்திடும்னு சைதை அஜீஸ் சொல்றார் ,உங்களுக்கு ஜோக்கா தெரியுதா ?
      நன்றி

      Delete
  7. கொஞ்சம் முந்திதான் ‘ஜாக்கெட்டிலே ஜன்னல்...’ ஜோக் எழுதினீங்க. நானும்கூட பின்னூட்டம் போட்டேன். இப்போ, மறுபடியும் ஒன்னு. வீட்டில் ATM மிஷின் மாதிரி ‘ஜோக் மிஷின்’ ஏதும் வெச்சிருக்கீங்களா?!?!?!

    ReplyDelete
    Replies
    1. ATM மெசினை கண்டுபிடித்ததும் மனித மூளைதானே ?அந்த மூளையின் சிந்திக்கும் ஆற்றலில் கோடியில் ஒரு பங்கு (?) இந்த மரமண்டையிலும் இருக்குன்னு நான் நம்புறதுதான் ,உலகத் தமிழர்களைப் பாடாய்படுத்துது !
      நன்றி

      Delete
  8. நல்ல வேண்டுகோள்...... ஆனால் கம்பி எண்ண வேண்டியிருக்கும் அவர் - வரதட்சணை கேஸில்....

    ReplyDelete
    Replies
    1. அவர் இருக்க வேண்டிய இடம் அதுதானே ?
      நன்றி

      Delete
  9. கொள்ளைக்காரன் தேவலாம் போலிருக்கே

    ReplyDelete
    Replies
    1. போலிருக்கே என்னா ,தேவலாம் தான் !
      நன்றி

      Delete
  10. Replies
    1. உங்களுக்கு தெரியுமான்னு தெரியலே .atm மெசின்லே வெறும் 1 ௦ ௦ ௦ ரூபாய் நோட்டு மட்டும்தான் வரணும்ன்னு வேற சொன்னாராம் !
      நன்றி

      Delete