26 January 2014

MDக்கு வந்த நல்ல எண்ணம் ?

''மேனேஜர் ,நம்ம தொழிலாளிங்க யாரும் 'கையிலே வாங்கினேன் பையிலே போடலே காசு போன இடம் தெரியலே'ன்னு  பாடக்கூடாது ...!''
''சம்பளத்தை இரண்டு மடங்கு ஆக்கப் போறீங்களா ,முதலாளி ?''
''ஊஹும் ...சம்பளத்தை பாங்கிலே போட்டுருங்க !''

14 comments:

  1. பல நிறுவனங்களில் இதே முறை தான்... ATM + Cheque Book மனைவியிடம் இருக்க வேண்டியது முக்கியம்...

    ReplyDelete
    Replies
    1. இதனால் முதலாளிக்கு தானே லாபம் ?அள்ளிக் கொடுக்கப் போறார்ன்னு நினைச்சா .....?
      நன்றி

      Delete
  2. அள்ளிக்கொடுக்கவில்லையென்றாலும் கிள்ளியாவது கொடுப்பாரென்று பார்த்தால், இப்படி அல்வாவை கிண்டியல்லவா கொடுத்துவிட்டார்!

    ReplyDelete
    Replies
    1. பேச்சும் அல்வாவாக இருக்கிறது !
      நன்றி

      Delete
  3. மாத்தி யோசிக்கறவர் போல!

    ReplyDelete
    Replies
    1. ஏமாத்தி யோசிக்கிறவர்னு வேணும்னா சொல்லலாம் !
      நன்றி

      Delete
  4. பல இடங்களில் இந்த முறை தான்.....

    ReplyDelete
    Replies
    1. இந்த முறையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கடன் கொடுத்தவர்கள் தான் !
      நன்றி

      Delete
  5. அதுதானே பார்த்தேன்
    எங்க சட்டைப் பாக்கெட்டை
    கிளிச்சிடுவாரோன்னு நினைச்சேன்

    ReplyDelete
    Replies
    1. முதலாளி முன் தைரியமாய் யார் அந்தப் பாட்டைப் பாடப் போகிறார்கள் ,அவர் கிழிக்கிறதுக்கு?
      நன்றி

      Delete
  6. Replies
    1. பாங்கில் வாங்கிய கடனுக்கு பிடிச்சது போக எதுவும் வரலேன்னு ....பாங்கிலே போட்டாங்க ,கையிலே வரலே காசு போன இடம் தெரியலேன்னு இனிமே பாடணுமோ ?
      நன்றி

      Delete