29 January 2014

தவிக்க விட்டுட்டு போன மனைவி திரும்ப வரணும்னா ...!

''கோபித்துக் கொண்டு போன மனைவி  திரும்ப  வரணும்னு அனுமாருக்கு வடை மாலை சாற்றியும் பார்த்திட்டேன் ,ஒண்ணுமே  நடக்கலே ...என்னடா செய்யலாம் ?''
''உன் மோதிரத்தை காணிக்கையா போட்டு பாரேன் !''

16 comments:

  1. மோதிரத்தை யாருக்குக் காணிக்கையா போடணும்? நினைவுக்கு வந்த இன்னொரு நகைச்சுவை : ஒருத்தர் போஸ்ட் ஆபீஸ்ல வந்து மனைவி காணோம்னு புகார் தருவார். 'யோவ், இது போஸ்ட் ஆபீஸ்யா... போலீஸ் ஸ்டேஷன் போங்க' என்றதும், அவர் 'ஐயோ சந்தோஷத்துல எங்க போறதுன்னே தெரியலையே' என்பாராம்.

    ReplyDelete
    Replies
    1. வடபோச்சேன்னு நினைச்சு மனைவி வருத்தப் படபோவதில்லை ,காரியம் ஆகணும்னா மோதிரக் காணிக்கை எங்கே போகணும்னு அவரே முடிவு பண்ணட்டுமே !
      நீங்க சொன்னச் நகைச்சுவை சூப்பர் !
      நன்றி

      Delete
  2. என்னவொரு பாசம்...!

    எங்கள் ஸ்ரீராம் அவர்கள் சொன்னது ஹா... ஹா...

    ReplyDelete
    Replies
    1. அடுத்த காணிக்கையில் தெரிந்து விடும் பாசமா ,வேஷமா என்று !
      நன்றி

      Delete
  3. நேரம் கிடைப்பின் : பருவம் தவறிய மழையின்மை, நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, பிளாஸ்டிக் பொருட்களின் அபரிமிதமான பயன்பாடு, சுற்றுச்சூழல் மாசு - இதனால்...

    http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Third-World-War.html

    ReplyDelete
    Replies
    1. இன்றைய காலகட்டத்திற்கு தேவையான பதிவைப் படித்தேன் ,ரசித்தேன் !
      நன்றி

      Delete
  4. நல்லா ஐடியா கொடுக்கிறார்
    அவர் நண்பர்தானே ?

    ReplyDelete
    Replies
    1. கணையாழி கொடுத்து தூது அனுப்ப இது என்ன இராமாயணக் காலமா ?
      நன்றி

      Delete
  5. Replies
    1. இந்த வில்லங்க விளையாட்டுக்கு நான் வரலே !
      நன்றி

      Delete
  6. மோதிரம் யாருக்கு என்று சொல்லச் சொல்லுங்கள் ஜி! உண்டியல்ல போட்ட அத் ஆஞ்சனேயருக்குப் போகாதே! ஆமாம்! பாவம் ஆஞ்சனேயர் ராமனுக்குத் தூது போனார்!!! இப்பவுமா? பிரம்மச்சாரி எத்தனை பேருக்குனுதான் போவார்!!! காலம் காலமாக.....ஆளை வுடுங்கப்பானு சொல்லாமல் இருந்தால் சரி

    த.ம.

    ReplyDelete
    Replies
    1. மனைவி திரும்ப வந்தா கேட்கிற முதல் கேள்வி ,எங்கே மோதிரம் என்பதாகத்தான் இருக்கும் ! காணிக்கையா போட்டாச்சு என்றால் ...மனைவி மறுபடியும் முருங்கை மரம் ஏறிவிடக்கூடும்!வேற வழியில்லைஇப்போதைக்கு கவரிங்கில் ரெடி பண்ணி போட்டு விட வேண்டியதுதான் !
      நன்றி

      Delete