17 January 2014

இதுவெல்லாம் பெரியார் பிறந்த மண்ணில்தான் !

வத்தலக்குண்டு  அருகில் உள்ள இரண்டு கோவில்களில் நடைபெற்று இருக்கும் வினோத நேர்த்திக்கடன் விழாவைப் பற்றி அறியும்போது ...
சிரிக்கத்தான் தோன்றுகிறது ...

நேர்த்திக்கடனாக கொண்டுவந்த லட்சம் வாழைப்பழங்களை படைத்து பூஜை செய்தபின் ...
கூட்டத்தை நோக்கி வானத்தில் சூறை
இட்டார்களாம் ...
அதை வாயால் கவ்வியும் ,கையால் பிடித்தும் பக்தர்கள் சாப்பிட்டார்களாம்...
பழம் சாப்பிட்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள் ...
அவர்களுக்கு சொர்க்கலோகத்தில்  நிச்சயம் இடம் கிடைக்குமென்று தோன்றுகிறது !
இதைவிட கொடுமை ...
இன்னொரு கோவிலில் ...
இங்கே நேர்த்திக்கடனாய் வந்தது ...
3 அடி முதல் 1 9 அடி நீளமுள்ள அரிவாள்களாம்...
அதுவும் ஒன்றல்ல ,இரண்டல்ல ஐந்நூறாம்...
நல்ல வேளை ,இதை அவர்கள் சூறை விடவில்லை ...
இந்த அரிவாள்கள் எல்லாம் பூப்பறிக்க மட்டுமே பயன்படும் என்றே நம்பத் தோன்றுகிறது !
ஹும் ...இந்தியா செவ்வாய்க்கு ராக்கெட் விடுகிறதாம் !

12 comments:

  1. நம்பிக்கையே வாழ்க்கை!
    சந்திரனுக்கு ஆம்ஸ்ட்ராங்க் போனார்னா மட்டும் நம்புறோம்!
    நாங்க ஞாயிறுக்கு அனுப்பப்பட்டாலும் இப்படித்தான்!

    ReplyDelete
    Replies
    1. எந்த தெய்வம் இப்படி செய்தால்தான் அருள்பாளிப்பேன் என்று சொன்னதோ தெரியவில்லை !
      நன்றி

      Delete
  2. என்ன கொடுமைகள்...! ம்ஹிம்... சி(ப)லர் திருந்துவது சிரமம்...

    ReplyDelete
    Replies
    1. எம்ஜீயார் நினைவு நாளான இன்று ,அவர் பாடிய 'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் 'பாடல்தான் நினைவுக்கு வருகிறது !
      நன்றி

      Delete
  3. ஒரு கோயிலில், மேலே சூறையிடப்பட்ட அரிவாள்கள் கீழே விழும்போது பூச்சரங்களாக மாறிவிட்டன!!! என் கண்களால் பார்த்தேன். நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ நம் மக்கள் நம்புவார்கள்!

    ReplyDelete
    Replies
    1. வேப்ப மரத்தில் பால் வழியுது என்பார்கள் ,பிள்ளையார்க்கு பால் கொடுப்பார்கள் !நம்புறவன் இருக்கானே !
      நன்றி

      Delete
  4. வணக்கம்
    தலைவா..

    முன்வைத்த காலை பின்வைக் போவதில்லை ....அப்படித்தான் சம்பவம்...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அதாவது முன்னோர்கள் பாதையில் செல்கிறார்கள் அப்படித்தானே சொல்ல வருகிறீர்கள்?
      நிலாவை அழைத்த காலத்தில் அவர்கள் செய்தது சரி ,நம் காலம் செவ்வாய்க்கு போற காலமாச்சே !
      நன்றி

      Delete
  5. இந்த நம்பிக்கைகள் நிறைய ஊரில் உண்டுங்கண்ணா....
    நம்பிக்கையோடு இருப்போம்...

    ReplyDelete
    Replies
    1. இப்படிப்பட்ட நம்பிக்கைகள் இருப்பதால்தானே போலி சாமியார்களும் பெருகிக் கொண்டுள்ளார்கள் ?
      நன்றி

      Delete
  6. படிப்பறிவு வளர வளர அவர்களே உணர்ந்து திருந்தி விடுவார்கள்.

    இவர்கள் அறியாமையைப் பார்த்துத்தான் ""தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லோரும் இஸ்லாமியராக வேண்டும்"" என்று பெரியார் சொன்னாரா. அவர்களும்தானே மெக்கா நகர் போய் கல் எறிகிறார்கள். அங்குபோய் இதுபோன்ற பதிவை வெளியிட்டுப் பாருங்கள்.

    கே. கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. மூடப் பழக்கங்கள் இல்லாத ஒரு மதத்தை நீங்களே சொல்லுங்க !
      அவரவர் மதத்தை அவரவர்கள் நல்ல மதம் என்று போராடுகிறார்கள் .
      .இன்று ,மதத்தின் பேரால்தான் அப்பாவி மக்கள் கொல்லப் படுகிறார்கள் !
      நீங்கள் சொல்வதுபோல் படிப்பறிவு வளர்ந்தால் திருந்த வாய்ப்புண்டு தான் !
      நன்றி

      Delete