4 January 2014

இந்த தொழில்லே கெட்டிக்காரனா இருந்தென்ன செய்ய?

''அந்தக் கொள்ளைக்காரன் தற்குறி என்றாலும் தொழில்லே கெட்டிக்காரன்னு எப்படி சொல்றீங்க ?''
''ஜெயில் கம்பிகளைகூட எண்ணத் தெரியாதாம் ,ஆனால் எப்படிப்பட்ட வீட்டு ஜன்னல் கம்பிகளையும் வளைச்சுடுவானாம்  !''

18 comments:

  1. டைட்டில் தப்பா இருக்கிற மாதிரி இருக்கு!

    ReplyDelete
    Replies
    1. கொள்ளை அடிப்பது அவன் தொழில் ,நம் பார்வையில் அவன் சமூக விரோதி ..அவன் கெட்டிக்காரதனத்தை ஆக்கபூர்வமான வழியிலே பயன் படுத்தலாமே என்று சொல்ல வந்தேன் ,உங்களுக்கு அது தப்பாபடுதா ?
      நன்றி

      Delete
    2. திருடனாப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டையும் ஒழிக்க முடியாது என்பது பட்டுக்கோட்டையாரின் தீர்க்கதரிசனமான வரிகள் ஆச்சே !
      நன்றி

      Delete
  2. Replies
    1. கெட்டிக்காரத்தனம் இருக்கவேண்டியதில்
      சரியாத்தான் இருக்கு
      கம்பியை எண்ணத் தெரிந்ததைவிட
      அதை ஒரு வழிபண்ணத் தெரிந்தால்தானே
      பிரயோஜனம் ?

      Delete
    2. அவனோட கெட்டிகாரத்தனம் நமக்கில்லே ஆபத்தா இருக்கு ?
      நன்றி

      Delete
  3. இதென்ன கெட்டிக்காரத்தனம்?
    கம்பிகளை வளைக்காமலே லட்சகோடிகளை லவட்டுரவங்கள உங்களுக்கு தெரியாதாஜி?

    ReplyDelete
    Replies
    1. பெயர்தான் வேறு வேறு ,இரண்டு பேரும்அடிக்கிறது கொள்ளைதானே ?
      நன்றி

      Delete
  4. திறமை சாலி தான்.... :)

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. கெட்டிக்காரனின் பொய்யும் புளுகும் எட்டு நாள்லே தெரிந்து விடுமே !
      நன்றி

      Delete
  5. அவனுக்கு எண்ணுவதால்பயன்இல்லை! கம்பியை வளைத்தால்தானே பயன் தரும்!
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. கம்பியை மட்டுமா வளைக்கிறான் ?காவல் துறையில் உள்ள சில கருப்பு ஆடுகளையும் வளைத்து விடுகிறானே !
      நன்றி

      Delete
  6. அட விடுங்க ஜி! பாவம்! அவன விட கேவலமான கொள்ளைக்காரங்களை, நம்ம பணத்தை நமக்குத் தெரியாமலயே தினமும் கொள்ளையடிக்கிறவங்க நம்ம கண்ணு முன்னாடியே இருக்கத்தானே செய்யிறாங்க! நாம் என்னத்த செஞ்ச்ஜோம் அவங்கள ஜெயிலுக்கு அனுப்பினோமா? நாற்காலிக்கு இல்ல அனுப்பறோம்!!!!

    த.ம.+

    ReplyDelete
    Replies
    1. உலகத்தின் பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்க்கிறோம் என்று பெருமை படுவோம் !
      நன்றி

      Delete