7 January 2014

நடிகை ஸ்ரீதேவியை அழகியென்று கூறக் காரணம் ?

முந்தைய தலைமுறையினருக்கு கனவுக் கன்னியாக திகழ்ந்த ஸ்ரீதேவியைப் பற்றி ...
மிக அழகானவள் என்று சொன்னால் யாருக்கும் மாற்று அபிப்பிராயம் இருக்கமுடியாது  ...

இந்தியாவின்  கனவுக்கன்னியான அவரைப் பற்றி ...
நம் இந்திய எந்த மாநில கல்விக்கூட புத்தகங்களிலும் குறிப்பு இருக்கமுடியாது  ...
தமிழின விரோத சிங்கள அரசு ...
சிங்கள மாணவர்களுக்காக வெளியிட்டுள்ள ஏழாம் தரத்திற்கான பாடப் புத்தகத்தில் ...
'தமிழச்சி ஆனாலும் ஸ்ரீதேவி அழகானவள் 'என்று குறிப்பிட்டு உள்ளதாம் ...
இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது ...
அழகு என்பது ஜாதி ,மதம்,இனம் .மொழி கடந்து ரசிக்கப் படுவது என்றாலும் ...
இதை இந்த நேரத்தில் சிங்கள அரசு பதின்ம வயதினருக்கான பாடப் புத்தகத்தில் ... சொல்லவேண்டிய காரணம் என்னவாக இருக்கும் ?
அதுவும் தமிழச்சி என்று இனத்தைக் கூறிக் கொக்கரிப்பதாகவே தெரிகிறது !

41 comments:

  1. நல்ல பதிவு! அதாவது இனத்தை விடுங்கள்! ஸ்ரீ தேவியைப் பற்றி பாட புத்தகத்தில் குறிப்பிட வேண்டிய அவசியமே இல்லை! அது எந்த இனமாக இருந்தாலும்!

    த.ம.+

    ReplyDelete
    Replies
    1. உள் நோக்கத்தோடுதான் இதை அவர்கள் செய்து இருக்க வேண்டும் !
      நன்றி

      Delete
  2. வரலாறு முக்கியம்தானேஜி?
    (இப்போதெல்லாம் வரலாறு என்றாலே உள்நோக்கோடுதான் என்று ஆகிவிட்டது)

    ReplyDelete
    Replies
    1. தமிழின வரலாற்றை அழிக்க எதிர் காலத்தில் சிங்கள கலப்பு இனத்தை உருவாக்க திட்டம் இடுகிறார்கள் போலிருக்கிறதே !
      நன்றி

      Delete
  3. Replies
    1. நம்ப முடியாத கொடுமைதான் !
      நன்றி

      Delete
  4. தமிழ் பெண்கள் அழகாக இருக்க மாட்டார்களோ என்னவோ (அதாவது இலங்கையில்)! இதுவும் ஒரு இனத்துவேஷத்துக்கு ஒரு சான்று.

    ReplyDelete
    Replies
    1. அழகைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு சிங்கள வெறி என்பதும் உண்மைதான் !
      நன்றி

      Delete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. மேற்படி கருத்தே மீண்டும் வந்துள்ளதால் நீக்கப் பட்டது !

      Delete
  6. எனக்கும் இந்த செய்தி வியப்பை தந்தது.
    நடிகையை பற்றி பாட புத்தகங்களில் பாடம் சொல்லி கொடுப்பாங்ளா!
    நம்ம சகா ஒருவரும் இது உண்மையா என்று என்னிடம் கேட்டிருந்தார்.
    எனது கொழும்பில் உள்ள உறவினரிடம் கேட்டிருந்தேன். அவர் சொன்னார், இலங்கையில் ஏழாம் படிக்கும் தமிழ் பசங்களுக்கு விஜய்யை தெரியும், ஹன்சிகாவை தெரியும், கஜாலை தெரியும், ஆனா ஸ்ரீதேவி யாருண்னே தெரியாது.அப்படியிருக்க ஏழாம் கிளாஸ் படிக்கும் சிங்கள பசங்களுக்கு எப்படி ஸ்ரீதேவியை தெரியும். சிங்கல மாணவர்களுக்காக வெளியிட்டுள்ள ஏழாம் தரத்திற்கான பாடத்துக்குரிய புத்தகத்தில் என்றால் எந்த பாட புத்தம் என்று கூட சொல்லபடவில்லை. இது சிங்கலவங்களை வழங்கமான ஒரு monster என்று தமிழகத்தில் காட்டும் ஒரு பிரசாரமா இருக்க வேண்டும் என்கிறார்.
    நான் இதை நம்புகிறேன்.இலங்கைக்கு பல தடவைகள் போய் வந்தவன் என்கின்றமுறையில்.

    எனக்கு தெரிந்தவகையில் இலங்கையில் தமிழர்கள் சிங்கலவங்களை திருமணம் செய்து இருக்கிறார்கள். சமீபத்தில் வெற்றி பெற்ற இலங்கை தமிழ் முதல் அமைச்சரின் இரண்டு பிள்ளைகளுமே சிங்கலவங்களை தான் திருமணம் செய்துள்ளார்கள்.இது தவிர இலங்கையை தேர்தலில் வெற்றி பெற்று இலங்கையை ஆழக்கூடியவங்க ராஜபக்சே கட்சியோ அல்லது ரணில் கட்சியோ அவங்க குடும்பங்களில் தமிழ் பெண்களை திருமணம் செய்துள்ளார்கள்.

    ReplyDelete
    Replies
    1. http://rishanshareef.blogspot.in/2013/07/blog-post.html 'எண்ணச் சிதறல்கள்'வலைப்பூவில்
      எம்.ரிஷான் ஷெரீப் எழுதியுள்ள பதிவின் அடிப்படையில் நான் எழுதியுள்ளேன் .அவரும் ஸ்ரீலங்காவில்ஜர்னலிஸ்ட் ஆக இருப்பதால் இது உண்மையாகவே இருக்குமென நம்புகிறேன் !
      இனம் கடந்த திருமணங்கள் வரவேற்கப்படவேண்டும் !
      நன்றி

      Delete
  7. தங்கள் கருத்தை வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த கருத்து வலுவானால் ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் !
      நன்றி

      Delete
  8. காரணம் அதுவல்ல! இலங்கை அரசே ஸ்ரீ தேவி தமிழச்சி கூட இல்லை என்று பிறகு சொல்வதற்க்காகவே! அவர்கள் தெலுங்கை தாய் மொழியாக கொண்ட நாயக்கர் இனத்தை சேர்த்தவர்கள்.

    இந்த நாயக்கர்கர்களை கம்மா நாயுடு என்றும் சொல்வார்கள். வீட்டில் பேசுவது தெலுங்கு . முக்கால்வாசி பேருக்கு தெலுங்கு எழுதப் படிக்க தெரியாது!

    இவர்கள் தமிழில் மிகவும் கெட்டிக்கார்கள்; தென்மாவட்டத்தில் பிறந்தவர்களில் இவர்கள் ல, ள, ழ உச்சரிப்பு சுத்தமாக இருக்கும் மற்றவர்களை ஒப்பிடும் போது!

    ReplyDelete
    Replies
    1. தெலுங்கை பேச மட்டுமே தெரிந்தவர்களை ,தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து ,தமிழிலேயே எழுதி ,படிப்பவர்களை ...தமிழச்சி என்று சொல்லலாமே !
      உங்கள் அளவுகோலின் படி பார்த்தால் தமிழக தலைவர்கள் பலரும் தமிழர்கள் ஆக மாட்டார்கள் !
      நீங்கள் சொல்வது போல் உச்சரிப்பு சுத்தத்தை TMS அவர்களிடமும் நாம் கண்டோமே !அவருடைய தாய்மொழி சௌராஸ்டிரம் என்பதும் தெரிந்ததுதானே !
      நன்றி

      Delete
    2. அவர்கள் தமிழர்கள் தான் நூற்றுக்கு நூறு; அதி வேறு கருத்து இல்லை. மற்றபடி இந்த மொழி மதம் ஜாதியால் மனிதனை பிரிப்பது தவறு எனபது என் கொள்கை. இலங்கை அரசு என்ன செய்யும் என்று தான் (அவர்கள் குணம் அறிந்து) சொன்னேன்.

      ஒரு கேள்வி?
      அப்ப இலங்கையில் சிங்களப் பகுதிகளில் பிறந்த தமிழர்களை (யாழ்ப்பணம் மாதிரி தமிழர்கள் பகுதி இல்லாமல்) சிங்களமும் பேசினால் அவார்களை சிங்களவர்கள் என்று கூறலாமா?

      Delete
    3. உங்கள் கருத்தே என் கருத்தும் ...மனிதனோடு இனமும் ,ஜாதியும் ,மதமும் ஓட்டிப் பிறப்பதில்லை !

      தமிழில் எழுதப் படிக்க தெரியவில்லை என்றால் அப்படித்தான் சொல்ல வேண்டி வரும் !
      உங்களால் தமிழில் எழுதவோ படிக்கவோ முடியவில்லை என்றால் தமிழன் என்று சொல்லிக் கொள்ளமுடியுமா ?
      நன்றி

      Delete
    4. ஸ்ரீதேவி தமிழச்சியா ,தெலுங்கச்சியா...சீக்கிரம் தீர்ப்பைச் சொல்லுங்க நாட்டாமே !

      pl .vist >>http://jokkaali.blogspot.com/2014/01/blog-post_20.html

      Delete
  9. jஜி!
    என் கேள்வி
    Colombo-வில் பிறந்த சிங்களம் பேசும் தமிழர்களை சிங்களவர் என்று கூறலாமா என்பதே!?
    அப்படி கூபிடக்கூடது என்று சொன்னால் ஸ்ரீதேவியும் தெலுங்கு பெண் தான்!
    ஓகேவா?

    ReplyDelete
    Replies
    1. 'ஸ்ரீதேவி தமிழச்சியா ,தெலுங்கச்சியா 'ன்னு பட்டிமன்றம் நடத்தி அய்யா சாலமன் பாப்பையாதான் தீர்ப்பு சொல்ல வேண்டி வரும் போலிருப்பதால் நான் ஜகா வாங்கிக்கிறேன் !
      நன்றி

      Delete
  10. ம்ம்ம்.. என்ன கொடுமை!

    ReplyDelete
    Replies
    1. ஜாதி ஆராய்ச்சிதானே?
      நன்றி

      Delete
  11. //அப்ப இலங்கையில் சிங்களப் பகுதிகளில் பிறந்த தமிழர்களை (யாழ்ப்பணம் மாதிரி தமிழர்கள் பகுதி இல்லாமல்) சிங்களமும் பேசினால் அவார்களை சிங்களவர்கள் என்று கூறலாமா?//
    ஆஹா! ஸ்ரீதேவியை பற்றிய பின்னணி இப்படியிருக்கா! நன்றி நம்பள்கி.
    இப்போ தமிழர்கள் அழகானவங்க கிடையாது என்று சிங்கல மாணவங்களுக்கு பாடம் எடுப்பதிற்காக இலங்கை அரசு ஸ்ரீதேவியை பாடபுத்தகத்திலே கொண்டு வந்திருந்தாலும், அல்லது இலங்கை ஜர்னலிஸ்ட் ஒருவர் தமிழகத்திலே சிங்கலவங்களை monster ளாக காட்டுவற்க்காக எழுதிய கற்பனை தயாரிப்பு செய்தியாக இருந்தாலும், இவங்க இருவருமே எடுத்து கொண்ட ஸ்ரீதேவி இதற்கு பொருத்தமனவர் கிடையாது.
    எல்லோருக்கும் தெரிந்த ஹன்சிகாவை இவர்கள் எடுத்திருக்கலாமே.

    இனம் கடந்த திருமணங்கள் வரவேற்கப்படவேண்டும் என்ற Bagawanjee KA கருத்து சிறந்தது.

    ReplyDelete
    Replies
    1. இங்கே பொறந்து நம் கண் எதிரே வளர்ந்த ஸ்ரீதேவியைப் பற்றியே தெரியவில்லை ,ஹன்சிகா என்பதால் நம்பள்கிக்கு தெரிந்து இருக்க வாய்ப்புண்டு !
      இனம் கடந்து திருமணம் பண்ணிக்க எனக்கும் ஆசைதான் ...மனைவிதான் ?.....அவ்வ்வ்வ் !
      நன்றி

      Delete
    2. //இனம் கடந்து திருமணம் பண்ணிக்க எனக்கும் ஆசைதான் ...மனைவிதான் ?.....அவ்வ்வ்வ் !//

      மனைவி இரு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மற்றவங்களையும் சிரிக்க வைத்து கொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

      Delete
    3. உண்மையில் நீங்க வேக நரிதான், நேற்று இரவு வேறொரு தளத்தில் நான் போட்ட கருத்தை அதிகாலையில் படித்துவிட்டு எனக்கும் வாழ்த்து கூறியதற்கு நன்றி !
      அங்கே அடிச்சா இங்கே வலிக்கலை ,இனிக்குது !

      Delete
  12. [[[நம்பள்கி13 January 2014 08:21
    ஜி!
    என் கேள்வி
    Colombo-வில் பிறந்த சிங்களம் பேசும் தமிழர்களை சிங்களவர் என்று கூறலாமா என்பதே!?
    அப்படி கூபிடக்கூடது என்று சொன்னால் ஸ்ரீதேவியும் தெலுங்கு பெண் தான்!
    ஓகேவா?

    Bagawanjee KA13 January 2014 23:59

    'ஸ்ரீதேவி தமிழச்சியா ,தெலுங்கச்சியா 'ன்னு பட்டிமன்றம் நடத்தி அய்யா சாலமன் பாப்பையாதான் தீர்ப்பு சொல்ல வேண்டி வரும் போலிருப்பதால் நான் ஜகா வாங்கிக்கிறேன் !
    நன்றி ]]

    என் கேள்வி ஸ்ரீ தேவியைப் பற்றி அல்ல...இவர் ஒய்வு பெற்ற நடிகை!

    இப்ப என் கேள்வி...Colombo-வில் பிறந்த சிங்களம் பேசும் தமிழர்களை சிங்களவர் என்று கூறலாமா என்பதே!

    ReplyDelete
    Replies
    1. பிறப்பால் தமிழர்கள் .இருப்பால் சிங்களர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம் !
      நன்றி

      Delete
  13. அப்ப, ஸ்ரீதேவியும் பிறப்பால் தெலுங்கச்சி! இருப்பால் தமிழச்சி!
    இந்த தீர்ப்புக்கு ஆப்பையாவே போதும்!

    ReplyDelete
    Replies
    1. இந்த தீர்ப்புக்கு எதிரா அப்பீல் செய்ய முடியாது தானே ?
      நன்றி

      Delete
    2. ஆல் நரிஸ் வெல்கம் டு argue!
      அதற்கு முன்னால் எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்! ஏன் அவன் அப்படி பண்ணினான்; இப்படி பண்ணினனான் என்று குப்பைக்குள் நான் போக விருப்பமில்லை!

      ஒரே ஒரு கேள்வி!...முடிந்தால் பதில் சொல்லவும்.
      கொலம்போவில் (Ceylon) பிறந்த சிங்களம் பேசும் , பிறப்பால் தமிழர்கள் .இருப்பால் சிங்களர்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்று சொன்ன புண்ணியவான்கள்..பதில் சொல்லுங்க...

      அப்ப, ஸ்ரீ தேவியை...
      ஸ்ரீதேவியும் பிறப்பால் தெலுங்கச்சி! இருப்பால் தமிழச்சி என்று சொல்லலாமா?
      இல்லை என்றால் காரணம் கூறவும்; நாம் விவாதிப்போம்!
      நன்றி

      Delete
    3. வீட்டிலே எந்த மொழி பேசினாலும் ஆறேழு தலைமுறைகளாக தமிழ் நாட்டில் இருந்தால் அவர்கள் தமிழர்கள்தான் ...
      ஸ்ரீதேவி தெலுங்கு வம்சாவளியில் வந்த தமிழச்சி !
      நன்றி

      Delete
    4. நம்பள்கியின் கேள்வியில் நியாயம் உண்டு. தமிழங்களை பொறுத்தளவில்மிகவும் சிக்கலான கேள்வி இது .தமிழர்களில் சிலர் இருக்கிறாங்க (பகவான்ஜீ அல்ல :) ) தமிழே ஒரு சொல் தெரியாதவரை செந்தமிழன் என்று உரிமை கொண்டாடுவாங்க. தமிழ் பேசும் தமிழனை இவன் தமிழ் துரோகி, உண்மை தமிழன் கிடையாது, பொய் தமிழன் மரபணு பரிசோதனையெல்லாம் செய்யணும் என்பாங்க.
      இலங்கை கொலம்பில் பிறந்து தாய் மொழியா சிங்கலத்தை கொண்ட தமிழர்கள் சிங்களர்களே தான். கொலம்பில் பிறந்து தாய் மொழியா தமிழை கொண்டவங்க (கொலம்பிலும் தமிழ்பாடசாலை தமிழ் மீடியத்தில் பாடம் ,பொங்கல் விழா எல்லாம் இருக்கு) இலங்கை தமிழர்கள்.
      ------------------
      பகவான்ஜீ,
      இதில் கொஞ்சம் குளப்பம் எனக்கிருக்கு.
      //வீட்டிலே எந்த மொழி பேசினாலும் ஆறேழு தலைமுறைகளாக தமிழ் நாட்டில் இருந்தால் அவர்கள் தமிழர்கள்தான் ... //
      அப்படின்னா தமிழ் மொழி பேசினாலும் தலைமுறைகளாக பாரதியார் சிங்கள தீவுன்னு சொன்ன இலங்கையில் இருக்கும் தமிழர்களும் சிங்களவர்கள் தானே.

      Delete
  14. வெளி மாநிலம் போனால் நாம் தமிழர்கள் ,வெளிநாடு போனால் இந்தியர்கள் என அழைக்கப் படுவோம் .
    யார் தமிழர் googleல் தேடினால் ஆயிரம் பக்கங்கள் வருகின்றது ,படித்தால் எப்படி ஒரு வரையறைக்குள் கொண்டு வருவது என்று புரியவில்லை .
    சாட்சிக் காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் விழுவதே மேல் என்பதால் நம்பள்கியே ஒரு முடிவு சொன்னா நல்லா இருக்கும் !
    ஆறேழு தலைமுறைகள் இங்கே வாழ்ந்தால் தமிழன் என்று சொல்லலாம் என்று அறிஞர் ஒருவர் கூறியுள்ளார் !அமெரிக்காவில் கிரீன் கார்டு வாங்குவதைப் போல !
    நன்றி

    ReplyDelete
  15. பகவான்ஜீ,
    தமிழச்சி ஹன்சிகாவைவிட அந்த காலத்து ஹிந்தி ஹெலன் எவ்வளவு அழகா ஆடுறாங்க பாத்தீங்களா?

    ReplyDelete
    Replies
    1. ஹெலன்,சிலர் குடிப்பது போலே நடிப்பார் என்ற பாடலில் ஆடியதும் கண்முன் தெரிகிறது .பல தலைமுறை கண்ட நடிகையுடன் ஹன்சிகாவை ஒப்பிட முடியுமா /
      அது சரி ,ஸ்ரீதேவி தமிழச்சியா இல்லையா என்பதற்கே நம்ம நம்பள்கி முடிவுரை சொல்லவில்லை ,இப்போ ஹன்சிகாவாஆஆஆ?
      நன்றி

      Delete
    2. சிலர் குடிப்பது போலே நடிப்பார் என்ற பாடலில் தேடி தேடி களைத்து போய்விட்டேன்.படத்தின் பெயரை சொல்லுவீர்களா பகவான்ஜீ.நன்றி.

      Delete
    3. அந்தப் பாடல் இடம்பெற்ற திரைப் படம் 'சங்கே முழங்கு 'என்பதை முழங்குகிறேன் !பார்த்து விட்டு நிம்மதியா தூங்குங்க!
      நன்றி

      Delete
  16. ஹெலன், அக்மார்க் தமிழச்சி!
    இங்கிருந்து தான் ஹிந்திக்கு போனார்; இவர் தான் எல்லோருக்கும் முன்னோடி!
    இங்கிருந்து போனவர்களில்..முறையே தமிழச்சிகள்....வகீதா ராஹ்மான், வி.மாலா; ஹே.மாலினி, பத்மினி, ஸ்ரீதேவி இப்படி...

    ஸ்ரீதேவி தமிழச்சியே! இங்கிருக்கும் lல,ள, ழ சரியாக உச்சரிக்கத் தெரிந்த நடிகை--

    ReplyDelete
    Replies
    1. ஹெலன் ,வஹிதா ரெஹமான் ஆகியோரும் இங்கிருந்து சென்றவர்கள் தான் என்பதை நீங்கள் சொன்ன பிறகுதான் தெரிந்து கொண்டேன் ...
      ஸ்ரீதேவி தமிழச்சியா ,இல்லையா என்கிற சந்தேகத்திற்கு ...தமிழ்ச் சங்கமே தீர்த்து வைக்க முடியாத குறையை ...தனி ஒரு டாக்டராக வந்து தீர்த்து வைத்தமைக்கு நன்றி டாக்டர் ,நன்றி !
      பின் குறிப்பு ;தமிழுக்காக எவன் உயிரையும் கொடுக்கிறானோ அவனே தமிழன் என்று நேற்று சீமான் சொல்லி இருந்தது நினைவுக்கு வருகிறது !

      Delete