26 January 2014

ஊட்டி புலி தந்த கிலி !

தமிழகத்தின் உச்சபட்ச உயரமான தொட்டபெட்டா பகுதியில் உலா வந்து ...
மக்களுக்கு அதிகபட்ச  கிலியைக்  கொடுத்துக் கொண்டிருந்த புலியை ...

ஒருவழியாக சுட்டுக் கொன்று விட்டார்கள் என்பதை அறிந்த மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டிருக்கிறார்கள் ...
3 2 ரவுண்டு சுட்டுப் பிடித்த புலியை ...
'ஆரம்பி 'வன விடுதிக்கு கொண்டு வந்தார்களாம் ...
இந்த 'ஆபரேசன் டைகர் ' புலி வேட்டையை ஆரம்பிக்க ஏன் இவ்வளவு தாமதம் செய்தார்கள் என்று தெரியவில்லை ...
இதற்குள் மூன்று உயிர்கள் பலியாகி விட்டன ...
யாரும் ஒருவாரம் வேலைக்கு செல்ல முடியவில்லை ...
பள்ளிக்கும் எந்த குழந்தையும் போகவில்லை ...
முற்றிலும் வியாபாரம் பாதிக்கப் பட்டது ...
மாமூல் வாழ்க்கை ஸ்தம்பித்தது ...
இவ்வளவு மோசமாக நிலைமை ஆகும் வரை அரசு தாமதித்த காரணம் ...
முறத்தால் புலியை எந்த வீரத்  தமிழச்சியாவது
விரட்டி விடுவாள் என்ற புராதன நம்பிக்கையாக இருக்குமோ ?


21 comments:

  1. வணக்கம்
    தலைவா....

    அப்படியே இருக்கலாம்....... நல்ல விளக்கம் நல்ல வினா... அருமை வாழ்த்துக்கள்.
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இன்று 1 2 அதிரடிப் படைகாவலர்கள் ,6 ஆயுதப் படைகாவலர்கள் மற்றும் வேட்டைத் தடுப்புக் காவலர்கள் செய்து இருக்கும் சாதனையை ,அன்று ஒரு தனி மனுஷி செய்துஇருக்க முடியுமா ?தமிழினக் காவலர்கள்தான் இதை விளக்கணும்!
      நன்றி

      Delete
  2. முதலில் காட்டுப்பூனை என்று நினைத்திருப்பார்கள் அதுதான் தாமதம்

    ReplyDelete
    Replies
    1. காட்டுப்பூனையை கொல்வது நம் வீரத்திற்கு அழகில்லைதான் !
      அதுசரி ,காட்டுப் பூனை மனுசனைக் கொன்னாலும் பரவாயில்லையா ?
      நன்றி

      Delete
  3. அழிந்து வரும் ஒரு இனத்தை ஏன் கொல்ல வேண்டும் என்று ஒரு சச்சரவு நடந்து கொண்டிருக்கிறது... என்ன சொல்றீங்க...?

    ReplyDelete
    Replies
    1. நாம் அழிந்தாவது புலி இனத்தை வாழ வைக்க வேண்டுமென நினைப்பது எப்படி சரியாக இருக்கும் ?
      நன்றி

      Delete
  4. புலி நம் தேசிய விலங்கு .
    சுதந்திரம் வாங்குவதற்கு முன் 40,000 எண்ணிக்கையில் இருந்த புலிகளின் எண்ணிக்கை
    இன்று வெறும் 1,400 மட்டுமே உள்ளதாக செய்தி.

    ReplyDelete
    Replies
    1. தேசிய விலங்கு புலி ,குடியரசு தினம் கொண்டாட ஊருக்குள் வந்ததை தவறாக நினைத்துக் கொன்று விட்டார்களா ?
      நன்றி

      Delete
  5. புலிகள், புலிகள் மட்டுமல்ல, காட்டு விலங்குகள் வாழவேண்டிய இடங்களில் எல்லாம் மனிதன் புகுந்து ஆக்ரமித்தால் அவை எங்கு போகும்?! ஏற்கனவே புலிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றதே! ஜி!!

    ReplyDelete
    Replies
    1. புலிகள் எண்ணிக்கை குறையுது ,ஜனத்தொகையோ கூடுது ,வேறெங்கே போறது ?
      கடல்லே குடிசைப் போடமுடியுமா ?
      நன்றி

      Delete
  6. புலிகள், புலிகள் மட்டுமல்ல, காட்டு விலங்குகள் வாழவேண்டிய இடங்களில் எல்லாம் மனிதன் புகுந்து ஆக்ரமித்தால் அவை எங்கு போகும்?
    tha.ma.6

    ReplyDelete
    Replies
    1. இயற்கைக்கு எதிராக சுயநலவாதிகள் செய்யும் சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த வேண்டியவர்களின் கைகள் கட்டப்பட்டுள்ளன!
      நன்றி

      Delete
  7. இப்போதெல்லாம் நாமும் வாழ்வதில்லை, மற்ற இனங்களையும் வாழ விடுவதில்லை.
    மனித நேயம் அப்படி!

    ReplyDelete
    Replies
    1. கூடிய விரைவில் காட்டு மிருகங்கள் எல்லாம் ஊருக்குள் வந்து மனிதர்களை விரட்டத்தான் போகின்றன ! சாது மிரண்டால் காடு கொள்ளாது?
      நன்றி

      Delete
  8. அப்படியும் இருக்கலாம் போலத்தான் தோணுது

    ReplyDelete
    Replies
    1. வீரம் இருக்குது .முறம்தான் கிடைக்கலையோ ?
      நன்றி

      Delete
  9. கடுப்பேத்துறாய்ங்க மை லார்ட்... - (இத்து புலி சொல்லிக்கினது...)

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. நாலு பேரை அடிச்சு சாப்பிடுறதுக்குள்ளே போட்டு தள்ளிடுவாங்க போலிருக்கே (இதுவும் புலி சொல்லிக்கினதுதான் )
      நன்றி

      Delete
  10. அழிந்து வரும் புலிகளை கொல்வதற்கு பதில் மயக்க மருந்து ஊசி செலுத்தியிருக்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. சுடும் முன் அந்த கோணத்திலும் ஆராய்ந்து பார்த்தார்களா என்ற விபரம் இதுவரையிலும் வெளிவரவில்லை .ஏன் அப்படி செய்யவில்லை என்றும் தெரியவில்லை !
      நன்றி

      Delete