31 January 2014

இசையால் இயற்கையை இசைய வைக்க முடியுமா ?

''அவர் வயலின்லே அமிர்தவர்சினி ராகத்தை வாசிச்சு ,மழைப் பெய்ய வைக்கிறேன்னு சவால் விட்டாரே ,என்னாச்சு ?''
''அவர் மேலே செருப்பு மழைதான் விழுந்தது !''

24 comments:

  1. வணக்கம்
    ஜீ.....

    நல்ல வித்துவான்... சில நேரங்கள் இப்படியும் வருவது வழக்கம்.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கான மழை அவர் பொழிந்தால் காலடி மழை அவர்மேல் பொழியும் ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  2. ஆகமொத்தத்துலே ஜோமழை

    ReplyDelete
    Replies
    1. மழை பேய்ஞ்சு நான் பார்த்துருக்கேன் ,பேய் மழைங்கிறதை இப்பத்தான் பார்க்கிறேன் !
      நன்றி

      Delete
  3. எப்படியோ ஏதோ ஒரு மழை பெய்திருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. இந்த மழைப் போதுமா ,இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று கேட்டதாக கேள்வி !
      நன்றி

      Delete
  4. நல்ல ஜோக்! ஆனால், பெய்யும் என்று சங்கீத வித்வான்கள் நிரூபித்தும் உள்ளார்களாமே! இப்போதுள்ளவர்கள் அல்ல......சங்கீத முமூர்த்திகளில் ஒருவரான முத்து ஸ்வாமி தீக்ஷிதர்!!

    ReplyDelete
    Replies
    1. அப்படி மழை பெய்வித்ததாக சொல்லப் படுகிறது நம்பப் படுகிறது .விஞ்ஞானபூர்வ ஆதாரங்கள் ஏதும் இல்லை !
      புன்னாகவராளி ராகத்தை வாசித்தால் பாம்பு வருமென்றும் சொல்கிறார்கள் .பாம்பு வருவதற்கு வித்துவானோ ,ராகமோ தேவையில்லை .படிப்பறிவு இல்லாத பாம்பு பிடிக்கிறவர் மகுடி வாசித்தாலே போதும் !
      நன்றி

      Delete
  5. மழை பெய்யுமா என்று தெரியாது! ஆனால், மழையை நிறுத்த முடியும்! இது உண்மை.
    இருக்கும் ஒரு முப்பது வருடம் முன்பு; சென்னையில் பயங்கர தண்ணீர் கஷ்டம் (என்றைக்கு தான் இல்லே என்கிறீர்களா?)

    எம்ஜியார் ஆட்சி அப்போ.
    காதில் பூவைக்கவே ஒரு கும்பல் உண்டு; குன்னக்குடி வைத்தியநாதன் காதில் ஒரு மாலையை போட்டார்; வயலின் வாசிச்சா மழை வரும் என்று சொல்லி, வேட்டியை கால் இடுக்கில் இடுக்கிக் கொண்டு red hills ஏரியில் முழங்கால் தண்ணீரில் வயலின் வாசித்தார்; அந்த வருடம் மழை டோட்டலா அவுட்.. காசுக்கு தண்ணிக அப்போத்தான்.

    நமக்கு என்று சில நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வாதம் இசையினால் மழை வரும் என்று; அப்புறம் இவர்களுக்கு நான் தான் சொல்லிக் கொடுத்தேன். red hills ஏரியில் வாசித்தது தவறு. அப்படி செய்தால் வராது; red hills ஏரி catchment areas -ல் வாசித்தா தான் மழை வரும் என்று . "அங்கு போய் வாசிக்கிறேன் என்று முதல்வர் கிட்ட சொன்னால்" எம்ஜியார் ஆவன செய்வார் என்றேன்!

    அதற்க்கு அப்புறம் இவர் ராமவாரம் தோட்டம் பக்கம் கூட தலைவைத்து படுத்ததில்லை என்று கேள்வி!

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் அது நினைவில் இருக்கிறது ... red hills ஏரி catchment areasவில் உங்களை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று இறக்கி விடுகிறோம் .ஆனால் ஒரு கண்டிஷன்...மழை வரும்வரை நீங்கள் வாசிக்க வேண்டும் என்றும் சொல்லி இருப்பார்கள் என நினைக்கிறேன் !
      இதெல்லாம் ஒத்து வராதுன்னு அவர் 'கொட்டாம்பட்டி ரோட்டிலே ,ஹே ...குட்டி போற ஷோக்கிலே'ன்னு பாடி புகழ் பெற்றார் !
      நன்றி

      Delete
  6. வித்துவான் மீது செருப்பு மழை பெய்ததும் அவர் கண்கள் இரண்டும் கண்ணீர் மழை பெய்திருக்குமே?!

    ReplyDelete
    Replies
    1. அந்த கண்ணீர் மழை ,குற்றால அருவியாய் பெருக்கெடுத்ததும் நமக்கு தெரிந்ததுதானே ?
      நன்றி

      Delete
  7. அப்படிப்பட்ட சங்கீத வித்வான்கள் இன்று இல்லை...

    ReplyDelete
    Replies
    1. என்றுமே இருந்து இருக்க முடியாது என்பது என் எண்ணம் !
      எரியாத விளக்கை பாடியே எரியவைப்பதும் கதைக்கு தான் ஆகுமே தவிர நிஜத்தில் வாய்ப்பில்லை !
      நன்றி

      Delete
  8. சேச்சே... அப்படி எல்லாம் யாரும் செய்யறதில்லீங்க...!

    ReplyDelete
    Replies
    1. நீங்க எதைச் சொல்றீங்க ...இசையால் அதிசயம் யாரும் செய்ய முடியாது என்றா ,அல்லது யாரும் செருப்பை வீசுவதில்லை என்றா ?
      நன்றி

      Delete
  9. Replies
    1. குடையாலும் தாக்குப் பிடிக்க முடியாது !
      நன்றி

      Delete
  10. அன்பு மழை பொழிகிறது. ஒவ்வொரு செருப்பிலும் உன்முகம் தெரிகிறது

    அடுத்து

    மழைவருது மழைவருது குடைகொண்டுவா

    என்று பாடுவார்.

    கோபாலன்

    ReplyDelete
    Replies
    1. வம்பு மழையில்லே பெய்யுது ,குடை கொண்டு போனா குடைக் கம்பியாலேயே குத்திடுவாங்க போல இருக்கே !
      நன்றி

      Delete